சில வீடுகளில் பூஜை அறையில் சாமி படங்களுடன் நீத்தார் போட்டோவையும் மாட்டி கும்பிடுகிறார்களே இது சரியா?
பித்ரு வழிபாட்டு முறைகளை / நீத்தார் சடங்குகளை ஆழப்படித்தால் இதில் உள்ள தவறு புரியும்.
நமது பித்ருக்கள் ஆனாலும் இடமாக மரித்து தான் தர்ப்பணம்.. தர்ப்பணம் முடிந்தவுடன் பவித்ரத்தை அவிழ்த்து வடக்கு பக்கம் வைத்து விடுகிறோம். ஸ்மார்த்தர்கள் விபூதி அணியாமல் தர்ப்பணம் செய்கிறோம். பித்ருக்களில் கரையேறி தேவர்களாகவும் யோகிகளாகவும் மாறியவர்களும் உண்டு. மனிதரிலிருந்து கோர ரூபம் கொண்டு வாழ்பவர்கள் வரை பல வகை உண்டு. நமக்கு பல விஷயங்கள் தெளிவாக தெரியாததால் பித்ரு பூஜை தனியாக முறை படுத்த பட்டிருக்கிறது.. தவறாக செய்வது நமக்கும் பித்ருகளுக்கும் கேடு விளையும். இவை யாவும் பித்ரு பூஜை மந்திரங்கள் சொல்லும் உண்மை.
ஏன் பித்ரு பூஜை தனியாக முறை படுத்த படுகிறது என்பது பிரகலாதன் வாழ்க்கையில் உள்ளது. இரணியகசிபு போன்ற பேரரக்கர்கள் நமது தவறுகளால் தான் உருவாகிறார்கள். கலியுகத்தில் நன்றாக புரியும்.
பொதுவாக, மூன்று தலைமுறைக்கு நீத்தாரை ( வயது வராதோர், தெய்வநிலை அடைந்தோர் தவிர) நாம் தெய்வங்களுடன் சேர்ப்பதில்லை. திதி முதலிய சடங்குகள் செய்து அன்பால் கட்டி தெய்வ உலகங்கள் நோக்கி ( ஈசானம்/வடகிழக்கு) செலுத்துகிறோம்.
தெய்வ நிலை கொண்டோர் பற்றி கவலை இல்லை. ஆனால் பொது விதி ஒன்றுதான்.. அது சமூகம் நன்றாக இருக்க வேண்டும். கோர அரக்கர்கள் ஏற்பட கூடாது என்பதற்காக மட்டுமே...
3 தலைமுறை என்ன கணக்கு? அவரவர் பாவ, புண்ணியம் அதற்குள் மறுபிறவி பெற்று விடும் என்பது தானே இந்து தத்துவம்?
இது ஆழமான கேள்வி. பதில் பல அத்தியாயங்கள் கொண்டது. பௌதீக / உயிர்நிலை படிகள் கொண்டது.. மூன்று தலைமுறை என்பது ஆவி உருவம், காக்கும் கடவுள் (ருத்திரன் ), தெய்வநிலை (பானு / ஆதித்யன் /ஞான சூரியன் ) என்ற உயிர் நிலை அடுக்குகளையும் மனோமய, விஞ்ஞான மய, ஆனந்தமய நிலைகளையும் குறிக்கிறது..
"குருநாதன் சொன்ன சீலத்தை மெல்ல தெளிந்தறிவார் சிவ யோகிகளே , காலத்தை வென்றிருப்பார், மரிப்பார் வெறும் கர்மிகளே" - அருணகிரி.
எனது கட்டுரை தளத்தில் இதை விளக்க முற்படுகிறேன்..
https://bharathavamsavali.blogspot.com/2021/08/blog-post.html
https://bharathavamsavali.blogspot.com/2021/10/blog-post_8.html
https://bharathavamsavali.blogspot.com/2021/09/mantra-pushpam.html
https://bharathavamsavali.blogspot.com/2021/09/why-smartha-brahmins-dont-touch-agama.html
https://bharathavamsavali.blogspot.com/2021/07/rahu-and-kethu-virtual-planetsgrahas-of.html
https://bharathavamsavali.blogspot.com/2021/07/mathematicalspatial-proportions-for.html
https://bharathavamsavali.blogspot.com/2021/07/agnihotra-science-of-using-cosmic.html
https://bharathavamsavali.blogspot.com/2021/07/sandhya-science-of-soul-space-planetary.html
https://bharathavamsavali.blogspot.com/2021/10/blog-post_8.html
https://bharathavamsavali.blogspot.com/2021/06/yoga-benefits-and-pitfalls.html
https://bharathavamsavali.blogspot.com/2021/06/why-constellation-of-scorpio-and-stars.html
https://bharathavamsavali.blogspot.com/2021/06/why-north-star-vega-is-important.html
https://bharathavamsavali.blogspot.com/2020/01/sahasra-yojana-teshaam-sahasra-yojane.html
சைவ ப்ராஹ்மணர்கள் சிவனிற்கு அளிக்காத உணவை நீத்தாருக்கு அளிக்க மாட்டார்கள். சிவனை நிந்தனை செய்பவர் வர வேண்டாம் என்று பொருள். சிவனை நம்பி வா என்று அன்பால் கட்டி இழுக்கிறார்கள்... வைஷ்ணவரும் அவ்வாரே. ஸ்மார்த்த ப்ராஹ்மணர்கள் விபூதி முதலிய சின்னங்கள் அணியாமல் பித்ரு / நீத்தாருக்கு அன்னம் அளிப்போம். அன்னமய / பிராணமய உயிர் நிலையில் சிக்கி தவிக்கும் நீத்தாரை (அவர்கள் கோர பூதங்களாக / இரக்கமில்லா அரக்கராக இருந்தாலும் ) அன்பால் கட்டி, கடைசியில் சிவ/விஷ்ணு உலகங்களுக்கு இழுத்து செல்வோம். வேறு வழியில்லை..
ஆவி உருவத்திலிருந்து அன்னமய / பிராண மய உடலும் பெற முடியும். இந்த கேள்வி தொகுப்பு அந்த நிலையில் மாட்டி கொண்ட உயிர்களை என்ன செய்வது என்பது பற்றியே.. அது நிஜமான கவலை. தனது உறவினரை/நண்பரை இழந்த ஒவ்வொருவரும் படும் கவலை.. அக்கவலைக்கு சிவபிரான்/விஷ்ணு மருந்தளித்துள்ளார்.. இதை செய் கவலையிலிருந்து விடுபடுவாய் என்று சொல்லியுள்ளார்..
பெரும்பாலான பித்ரு கர்மாக்கள் விஷ்ணுவின் ஆணையின்படி என்று தான் ஆரம்பிக்கிறது..
பெரும்பாலான தேவ/தெய்வ காரியங்களும் விஷ்ணுவை (ததேவ லக்னம் சுதினம் ததேவ, தாரா பலம் சந்திர பலம் ததேவ, வித்யா பலம் தெய்வ பலம் ததேவ, லக்ஷ்மி பதேஹே தேமக்ரியுகம் ஸ்மாராமி ) நினைத்தபின் செய்யப்படுகின்றன...
நால்வரும் மற்றோரும் உலகை குழப்ப எழுதவில்லை. குழம்புவது நம் இயல்பு. எல்லா இடத்திலும் புது விஞ்ஞானம் பைத்தியம் பிடிக்கவே வைக்கிறது. தெளிவு நம் உயிர்நிலையில், அத்வைத நிலையில் மட்டுமே உள்ளது... மாணிக்க வாசகரை மறந்து ஒரு பயனும் இல்லை.
இறப்பதற்கு முன்/பின் என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் இறப்பதற்கு முன் அவர் தெய்வ பலம் உடையவராயின், தேவ / தெய்வ உயிர்கள் அவரை காக்க (கீதையில் கண்ணன் சொன்னது போல்) வரும்.
உலகாயதமான மனிதர்கள், பிறப்பிலிருந்து முக்தியை தேடாதவர்களுக்கு அவரது மரணிக்கும் தருவாயில், நாம் நம்மாலான தெய்வ ஆசீர்வாத பொருள்களை அளிக்க வேண்டும். நமக்கு தெரியாவிடில் தெரிந்தவரை கேட்டு செய்யலாம். செய்ய வேண்டும்..
இறந்தபின் குல வழக்கப்படி பல ஹோமங்கள் (திதி நக்ஷத்திர நிலையின்படி ), உடலை புனித படுத்துதல், உயிரை திருப்தி படுத்துதல், சுற்றி இருப்பவரை திருப்தி படுத்துதல், உடலை அக்னியில் / மண்ணில் சேர்த்தல், அவரது உலக சூழ்நிலை / மனநிலை பொறுத்து பூத பலி / ப்ரபூத பலி செய்தல், அஸ்தியின் மிச்சத்தை இயற்கையில் சேர்த்தல் போன்றவை செய்வார்கள். அது மற்ற கோர உயிர்கள் அவரை சேர்த்து கொள்ளாமல் போகுமிடத்து செய்யப்படுவது தான்.
பின்னர் முதல் நாள் தொடங்கி பத்தாம் நாள் வரை அவ்வுயிர்க்கு / உடல் இருப்பதாக பாவித்து /அன்னமிட்டு, நீரிட்டு (பாஷாண கல்லிற்கு / நடுகல் ) திருப்தி படுத்துவர். பத்தாம் நாள் எல்லா உறவினரும் / நண்பரும் அன்னமிட்டு இந்த உலக வாழ்க்கையை முடித்து வைப்பார்.
பதினொன்றாம் நாள் தொடங்கி, குல வழக்கப்படி திதி முறைப்படி அன்னமிடுவர். குல வழக்கப்படி, பிரேத உடலிலிருந்து உயிரை பிரித்து யமனிடம் / இயற்கையிடம் சேர்ப்பர். சைவர்கள் நந்தியை அழைத்து ஸ்ரீ ருத்திரம் சொல்லி சிவ உலகம் அழைத்து செல்ல ப்ரார்த்திப்பர். அது அவரவர் கர்மவினையால் நடக்கவும் செய்யலாம். உலக பிடிப்பு கொண்ட ஆன்மாவானது சிக்கி கொண்டும் தவிக்கலாம். அப்படி தவிக்கும் ஆன்மாவை பன்னிரெண்டாம் நாள் தொடங்கி அன்னமய /பிராணமய உலகத்தில் மாட்டி கொள்ளாமல் செய்ய, குலத்தில் முன்னோராகிய மனோமய/விஞ்ஞானமய/ஆனந்தமயமான உயிர்களை அழைத்து அவர்களுடன் அன்பால் அன்னமிட்டு கட்டி தேவ / தெய்வ உலகங்கள் / உயிர் நிலைகள் நோக்கி அனுப்புவர். முக்கியமான இறப்பு திதி, சந்திர மற்றும் சூர்ய மண்டல எல்லை நாட்கள் அன்று அன்னமிட்டு முன்னோர்களுடன் கட்டுவர்.
வருட இறுதியில், இந்த சூரிய உலகின் ஞான பானுவின் கட்டுப்பாட்டில் வரும் உயிரை அன்னமிட்டு கட்டி, பல தருமங்கள் செய்து, சிவ/விஷ்ணு உலகங்களுக்கு/உயிர்நிலைக்கு அனுப்புவர்.
இறந்தவர், கர்த்தா ( கர்மத்தை இயற்றுபவர் ) செய்த தவமோ / புண்ணிய பலனோ இதை நடத்தி அந்த உயிர் தப்பிச்செல்ல உதவலாம்.
கர்த்தா, நீத்தார்/பித்ரு கருமத்தை சரியாக செய்தாலும், பல தடைகள் இருப்பதால் எல்லா உயிரும் நேராக மேல் உலகங்கள் / மேல் உயிர்நிலைகள் அடைவதில்லை... இயற்கை விதி அதுவே.
அதனாலேயே அமாவாசையன்று விபூதி அணியாமல் தர்ப்பணம், மஹாளய தர்ப்பணம், வருடமொருமுறை அன்னமிட்டு திதி, போன்ற கர்மாக்களை வேறு வேறு குல முறைப்படி செய்கிறோம்...
பித்ருக்களில் கரையேறி தேவர்களாகவும் யோகிகளாகவும் மாறியவர்களும் உண்டு. மனிதரிலிருந்து கோர ரூபம் கொண்டு வாழ்பவர்கள் வரை பல வகை உண்டு. நமக்கு பல விஷயங்கள் தெளிவாக தெரியாததால் பித்ரு பூஜை தனியாக முறை படுத்த பட்டிருக்கிறது.. தவறாக செய்வது நமக்கும் பித்ருகளுக்கும் கேடு விளையும். இவை யாவும் பித்ரு பூஜை மந்திரங்கள் சொல்லும் உண்மை.
ஏன் பித்ரு பூஜை தனியாக முறை படுத்த படுகிறது என்பது பிரகலாதன் வாழ்க்கையில் உள்ளது. இரணியகசிபு போன்ற பேரரக்கர்கள் நமது தவறுகளால் தான் உருவாகிறார்கள். கலியுகத்தில் நன்றாக புரியும்.
பொதுவாக, மூன்று தலைமுறைக்கு நீத்தாரை ( வயது வராதோர், தெய்வநிலை அடைந்தோர் தவிர) நாம் தெய்வங்களுடன் சேர்ப்பதில்லை. திதி முதலிய சடங்குகள் செய்து அன்பால் கட்டி தெய்வ உலகங்கள் நோக்கி ( ஈசானம்/வடகிழக்கு) செலுத்துகிறோம்.
தெய்வ நிலை கொண்டோர் பற்றி கவலை இல்லை. ஆனால் பொது விதி ஒன்றுதான்.. அது சமூகம் நன்றாக இருக்க வேண்டும். கோர அரக்கர்கள் ஏற்பட கூடாது என்பதற்காக மட்டுமே...
14 உலகமா / உயிர்நிலையா ?
14 உலகங்களை பௌதீகமாக ஏற்று கொள்ளாதவர்கள் உயிர் நிலை என்று ஏற்று கொள்ளலாம். அதுவே சித்தர், சமணர், அத்வைத சைவம் ஏற்பது..
எவ்வளவு அறிவியல் பூர்வமான மதத்தை இப்படி பாழ்படுத்தி கொண்டு இருக்கிறோம்.?
இந்து மதம் எங்கே போகிறது என்பதை இது காட்டுகிறது.
ஸ்ரீஹரி காப்பாற்றுவராக.
சிவோஹம்.
ஹரி ஓம்
https://en.wikipedia.org/wiki/Sa%E1%B9%83s%C4%81ra
https://www.youtube.com/watch?v=nRTWBnKyqp8