Tuesday, August 24, 2021

யக்ஞ உபவீதம் (பூணூல்), ப்ரஹ்ம முடிச்சு, யோக சக்ரங்கள், குண்டலினி, நாளமில்லா சுரப்பிகள், மூவுலகம், ஏழுலகம், மின்காந்த இழைகள் அல்லது அலைகள், ஆதித்யர்கள், ஞான பானு



பூத உடலில் கட்டுண்டிருக்கும் ஜீவ சக்தியே (குண்டலினி) ஏழு யோக  சக்கரங்கள் (Endocrine or ductless glands) வழியாக பயணிக்கும் அல்லது நிலை பெறும்.  நாளமில்லா சுரப்பிகள் யாவும் தன் சுரப்பினாலும், மின்காந்த அலைகளாலும் pituitary மற்றும் உடம்புடன் இயக்கநிலை அடைகின்றன. 



நவீன மருத்துவம் நாளமில்லா சுரப்பிகள் பற்றி அறிந்தது 1 சதவிகிதம் மட்டுமே. உடற்கூறு கொண்டு அறிய முடியாத, மாய சக்தி உலகம் இவ்வுடம்பில் உள்ளது.

இதையே சுப்பிரமணிய ச்ருஷ்டி என்கிறோம். 

ஆணவ, கன்மம், மாயா  மலங்களில் இருந்து விடுபட ஒவ்வோர் மனித உயிரையையும் பிரபஞ்சத்துடன், ஏழுலுகங்களுடன் இணைக்கும் கொடியே சக்கரங்கள்.

எப்படி மூளை நரம்புகளால் கட்டுப்படுத்துகிறதோ, நாளமில்லா சுரப்பிகள் தன்னை சுற்றி பாம்பு போன்று  நெளிந்த மின்காந்த அலைகளை (energy field) ஏற்படுத்தி (control system) இயக்க முறையை  உருவாக்குகின்றன. Spinal cord - இதன் நேரடி தொடர்பற்றது. இடகலை ஐந்தும் (கணபதி), பிங்களை ஆறும் (சுப்பிரமணியன்) ருத்திரர்களாக உருவகப்படுத்தபடுகின்றன. இவற்றை யாவரும் உணர்வால் அறிய முடிகிறது. 



சுஷும்ணையை ( Brahma Dhandam ) குருவின் அருளால் அறிய முடியும்.

கீதையில்,

 அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "வேர்களை மேலே கொண்டு, அதன் கிளைகளைக் கீழே கொண்ட நித்தியமான அஸ்வத்தம் {அரச மரம்} என்று ஆத்ம அறிவைச் சொல்கிறார்கள். அதன் இலைகள் சந்தங்களாகும். அதை அறிந்தவன் எவனோ, அவனே வேதங்களை அறிந்தவனாவான். (15:1)

உபநயனத்தின் போது கொடுக்கப்படும் அஸ்வத்த தண்டம் இதை குறிக்கிறது.

ததீசி முனிவர் தனது பிரம்ம தண்டத்தை ( உலகாயதமாக முதுகெலும்பு ) வைத்து இந்திரனை ஒரு வஜ்ராயுதம் செய்து அசுரர்களை அழிக்க சொன்னார் என்பது, நாம் பிரம்ம தண்டத்தால் இந்திரியங்களை அடக்கி அசுர சக்திகளை அழிக்க முடியும் என்பதை உணர்த்தவே...

பிராணாயாமம் (மூச்சை அல்லது உயிரை அடக்குதல்) உயிரின்/பிராண காரணியான ஜீவனின் வாசனைகளை நமக்கு தெளிவுபடுத்தும். எதனால் கட்டுண்டு இருக்கிறோம் என்பதை ஆழ்மனதிற்கு புரிய வைக்கும். கும்பகத்தில் இந்திரியங்கள் ஒடுங்குவதை உணரலாம். இந்நிலையில் குருவின் மூலம் மனதின் கட்டுகள் அவிழ்ந்து மனதே மோக்ஷ காரணியாக மாறும். மனதே மனிதனை கட்டும் கயிறு, அதுவே மோக்ஷ காரணியுமாம்.

ஜீவன் இப்பன்னிரெண்டையும் உணரும் போது இவ்வுலகில், இச்சூர்ய மண்டலத்தில் நமக்காக வாழும் துவாதச ஆதித்யர்களின் கருவியாக மாறுகிறது. 


இந்நிலையில் பிரம்ம ஸ்வரூபம் அடைகிறது. வ்ருஷ பானு எனும் இச்சூர்ய மண்டலத்தில் வாழும் சூக்ஷ்ம பானுவை (ப்ரஹ்ம முடிச்சு) தரிசிக்கிறது. 



 இதையே காயத்ரி மற்றும் மூவுலகும் ( மூன்று இழை கொண்ட யக்ஞ உபவீதம், முக்கடன்கள், மும்மலங்கள் ) உருவகப்படுத்துகின்றன.

மூவுலகத்தை தாண்டியே ஏழுலகை அடைய முடியும்.


https://onestoryavenue.com/the-seven-chakras/

https://www.organicindiaclean.com/blog7.html

https://yogabylily.com/chakras-and-the-endocrine-system

https://en.wikipedia.org/wiki/Adityas

12 Adityas based on Divine Roles as per Satapatha Brahmana

  1. Yama
  2. Aryaman
  3. Indra
  4. Ravi
  5. Varuṇa
  6. Dhātṛ
  7. Bhaga
  8. Savitṛ
  9. Sūrya or Arka
  10. Aṃśa
  11. Mitra
  12. Dakṣa

12 Adityas based on gunas or features

Keshavan, Narayanan, Madhavan, Govindan, Vishnu, Madhusoodanan, Trivikraman, Vamanan, Sreedharan, Hrishikesan, Padmanabhan and Damodharan