Tuesday, October 5, 2021

வேத விஞ்ஞானம் - வேத விஞ்ஞானி பரமாச்சார்யர் நோக்கு/நோக்கம் - சில பார்வைகள்..

 


வேத விஞ்ஞானத்தை விஞ்ஞானமாக வெளிப்படுத்துவது பிராமணர்களாகிய நம் கடமையே.. நாமே அதை இந்தியர்கள் புலமையால் மட்டும் உருவாக்கியது என்று சொன்னால் நாம் வேதத்தை / ஸ்ரீருத்ரத்தை சரியாக பார்க்கவில்லை என்றுதான் பொருள். 

ஸ்ரீருத்ர தியானம் த்ருவபதத்தை அடைய இந்த பாராயணம் செய்கிறேன் என்கிறது. 

அது எங்கே உள்ளது? யார் இதை நமக்கு அளித்தது? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? தேவர்கள் யார்?  அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? ஏன் இந்த உலகை தம் வழியில் செலுத்த முயல்கிறார்கள்? இந்த தேவேந்திர சங்கம் நிஜமா? 

இதை பற்றி பேசாமல் போனால் ஸ்ரீ ருத்ரத்தின் உண்மை புலப்படாது...

பரமாச்சாரியார் தர்க, விஞ்ஞான விளக்கம் கிள்ளி கொடுக்கவில்லை.. அள்ளி கொடுத்திருக்கிறார்!!!

தத்துவம் மட்டும் அல்ல. விஞ்ஞான விளக்கம் உள்ளது. கணிதம் மற்றும் ஆர்வம் மட்டுமே இதை அளிக்கவில்லை.. வெளிநாட்டுகார விஞ்ஞானிகள், தத்துவ ஞானிகள் பலர் நம்மை விட அறிந்தவர்கள். பரமாச்சாரியார் பலரை காட்டியுள்ளார். எழுதியும் உள்ளார். ஆனால் அறிவியல் பார்வை இல்லாத நிலையில் நம்மவர்களோ / மேலை நாட்டாரோ எழுதியவை  கண்டிப்பாக விமர்சனம் செய்யப்படும்..

பரமாச்சாரியார் எழுதியவற்றை பார்ப்போம். இவை மிகவும் முக்கியமானவை, ஏனெனில் நமது பாரத தனித்துவ சிந்தனை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதுவே அளவுகோல்!!

தெய்வத்தின் குரல்....

மொத்தத்தில் சாஸ்திர அபிப்பிராயம், வேதம் அநாதி; அது அநாதியாக ஈச்வரனின் சுவாஸமாக இருக்கிறது என்பதுதான்.

ஈச்வரனின் சுவாஸம் இந்த மாதிரி சப்த ரூபத்தில் இருக்கிறது என்றால், இந்த சப்தங்களைக் கொண்டுதான் பிரம்மா சிருஷ்டி பண்ணினார் என்றால், நாகரிக மூளைக்கு “இதெல்லாம் சுத்த நான்-ஸென்ஸ்” என்று தோன்றுகிறது.

நன்றாக ஆராய்ந்து பார்த்தால், பெரிய விஞ்ஞான உண்மையே இதில் இருக்கிறதென்று தெரிகிறது.

இப்படிச் சொல்லும்போது இன்றைய விஞ்ஞானத்துக்கு acceptable- ஆக (ஏற்புடைத்தாக) இருந்தால்தான் மத விஷயங்களை நாம் ஒப்புக் கொள்ளலாம் என்று நான் சொல்வதாக அர்த்தமில்லை. நம் ஸயன்ஸும், ஸயண்டிஸ்டுகளும் எங்கே போக முடியாதோ அந்தப் பரமாத்ம தத்துவத்தைச் சொல்கிற வேதத்தை, ஸயன்ஸின் லிமிட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதிலுள்ள அநேக விஷயங்கள் ஸயன்ஸுக்கு ஒத்துவராமல்கூட இருப்பதாகத் தோன்றலாம். அதனால் அவை தப்பு என்று ஆகிவிடாது. ஆனால் இங்கே எடுத்துக் கொண்ட விஷயம் – மூச்சு எப்படி சப்தகோவைகளான மந்திரமாக இருக்க முடியும், அதை வைத்துக் கொண்டு எப்படி லோக ஸ்ருஷ்டி உண்டாக முடியும் என்ற விஷயம் – ஸயன்ஸுக்கும் ஒவ்வியதாகவே இருக்கிறது என்று மட்டும் சொன்னேன்.

நாம் எழுப்புகிற ஒலிகள் அழிகிறதேயில்லை! இரண்டாயிரம் வருஷத்துமுன் கிறிஸ்து பேசினதை, அவர் குரலிலேயே இப்போதும் பிடித்துத் தரமுடியும்; அதற்காக முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று படித்ததாக ஞாபகம். அப்புறம் அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு possibility [சாத்தியக்கூறு] இருக்கிறது என்று தெரிகிறது. ஒரு ஒலி உண்டானபின், என்றுமே அது அழியாமல் ஆகாசத்தில் இருக்கிறது என்று தெரிகிறது.

இம்மாதிரி, பிரளயத்திலும் அழியாமலிருந்த வேத சப்தங்களைக் கொண்டுதான் பிரம்மா மறுபடி லோக சிருஷ்டி பண்ணியிருக்கிறார். கல், மண், மரம், இரும்பு முதலியவற்றை வைத்துக் கொண்டு, நாம் ஒரு ஊரை நிர்மாணம் பண்ணுகிறோம். ஆனால் இந்தக் கல், மண், மரம், இரும்பு எல்லாமே பரமாத்மாவின் எண்ணத்தில் இருந்து, எண்ணுகிற மனஸுக்கும் ச்வாஸத்திற்கும் மூலம் ஒன்றாயிருப்பதால், அவருடைய ச்வாஸ சலனத்தினால் ஏற்பட்டவைதான். அந்த சலனங்களுக்குரிய சப்த ரூபத்தை, பிரம்மா வேதங்களாகக் கண்டு அத்யயனம் பண்ணின மாத்திரத்தில் சிருஷ்டி முழுக்க வந்து விட்டது.

இப்போது அடிக்கடி பேப்பரில் [செய்தித்தாளில்] பார்க்கிறோம். பலவிதமான ‘ஸெளண்ட் வைப்ரேஷன்’களை [சப்த அதிர்வுகளை] செடிகளுக்கு அருகிலே உண்டு பண்ணினால், சில விதமான வைப்ரேஷனினால் செடி நன்றாக வளர்ந்து நிறையக் காய்க்கிறது. சிலவகை வைப்ரேஷனால் வளர்ச்சி குன்றுகிறது என்று நியூஸ் வருகிறது. சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார சக்தி எல்லாம் சப்தத்துக்கு உண்டு என்பது இதிலிருந்து நிதர்சனமாகிறது.

பிரம்மாவின் தபோ மகிமையால், power of concentration-ஆல் லோகம் முழுவதையும் வேத சப்தத்தால் அவர் உண்டாக்க முடிந்தது. 

நாம் தினமும் ஜபிக்கிற அதே பஞ்சாக்ஷர மந்திரத்தை ஒரு தரம் சொல்லி ஒரு ஸித்தர் விபூதி பூசினால், உடனே ஒரு வியாதி சொஸ்தமாகிறது என்றால், அது எப்படி? நம்மைவிட அவருக்கு உள்ள கான்ஸென்ட்ரேஷன் [மன ஒருமைப்பாட்டு] சக்தியால்தான்.



அதனால் அனந்தமான வேதங்கள் உண்டு என்று தெரிகிறது. நாலுவேதம், ஆயிரத்து சொச்சம் சாகை என்பதெல்லாம் பிற்பாடு ஏற்பட்ட அமைப்புகள்தான்.

பிரம்மா உண்டானவுடன் அவருடைய ஹிருதயத்தில் வேத சப்தமெல்லாம் தோன்றின. அவருக்கு ஸ்ருஷ்டி செய்வதற்கு அந்த வேதம் வழி காட்டிற்று. எங்கே பார்த்தாலும் வேத சப்தம் நிறைந்திருந்ததை அவர் அறிந்தார். அவருக்கு எல்லா வேதங்களும் தோன்றும்.

ரிஷிகளுக்குச் சிலசில மந்திரங்களே தோன்றும். இப்படி ரிஷிகளுக்குத் தோன்றிய மந்திரங்கள்தான் நமக்கு கிடைத்துள்ள வேதமாக இருக்கிறது.

நாம் மந்திரங்களுக்கு ரிஷி, சந்தஸ், தேவதை என்னும் மூன்றையும் சொல்லுகிறோம். எல்லா மந்திரங்களுக்கும் ரிஷி, சந்தஸ், தேவதை உண்டு. தெலுங்கு தேசத்தில் எல்லா மந்திரங்களுக்கும் அவைகளைச் சொல்லிவருகிறார்கள். தபஸ் பண்ணின ரிஷிகள் மூலமாக அறியப்பட்டவையே மந்திரங்கள். அந்தந்த ரிஷிகள்தான் அந்தந்த மந்திரங்களுக்குரிய ரிஷிகள். அவர்களுக்கு அந்த மந்திரங்களைக் கேட்கும் திவ்விய சுரோத்திரம் உண்டு. யோகசாஸ்திரத்தில் பெரிய ஆகாசமும் மனஸிலுள்ள ஆகாசமும் ஒன்றாக ஆகிவிட்டால் பெரிய ஆகாசத்திலுள்ள சப்தமெல்லாம் நமக்குக் கேட்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எங்கும் நிறைந்து அபேதமான நிலையை அடைந்தவர்களுக்கே அந்த சப்தங்கள் தெரியும். இம்மாதிரி ரிஷிகள் மந்திரங்களை லோகத்தில் பிரசாரத்துக்குக் கொண்டு வந்தவர்களேயன்றி, அவற்றை இயற்றியவர்களல்ல. ஆனாலும், ஏற்கனவே உள்ளதை வெளிப்படுத்தியதாலேயே நமக்குப் பரம உபகாரத்தைப் புரிந்திருக்கிறார்கள். ஒருவர் நமக்கு கங்கா தீர்த்தம் கொண்டு வந்து கொடுத்தால், கொடுத்தவரையே நமஸ்காரம் பண்ணி வாங்கிக் கொள்கிறோம். அவரா கங்கையை உண்டு பண்ணினார்? இல்லாவிட்டாலும், ஆயிரம் மைலுக்கு அப்பாலிருக்கும் கங்கை நமக்குக் கிடைக்கும்படி அவர் செய்த உபகாரத்தைப் போற்றுகிறோம். நம் காதுக்கு எட்டாத மந்திரங்களை நமக்காகப் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்த ரிஷிகளை எவ்வளவு பூஜித்தாலும் போதாது. அதனால்தான் ஒரு மந்திரத்தைச் சொல்லும்போது, எந்த ரிஷி மூலமாக அது லோகத்துக்கு வந்ததோ அவர் பெயரைச் சொல்லி தலையைத் தொடுகிறோம். அவருடைய பாதங்களை சிரஸில் வைத்துக் கொள்கிறோம் என்பதற்கு இது அறிகுறி.

வேதங்கள் ஆதியற்ற அநாதி. அவை மநுஷ்யர்களால் செய்யப்படாத அபௌருஷேய கிரந்தம் என்பதெல்லாம் எப்படி என்று நான் இவ்வளவு நாழி சொன்னதிலிருந்து கொஞ்சங் கொஞ்சம் தெளிவாகியிருக்கலாம்.

தேவர்கள் என்பவர்கள் பகவத் ஸ்ருஷ்டியில் உயர்ந்த சக்தி படைத்த ஒரு இனம்.

** லோக வாழ்க்கை நமக்கும் ஸகல ஜீவகுலத்துக்கும் அநுகூலமாக இருக்க வேண்டுமானால் பிரபஞ்ச சக்திகளைப் பரமாத்மாவின் உத்தரவின்படி நிர்வாகம் பண்ணி வரும் தேவதைகளின் அநுக்ரஹம் நமக்கு இருக்கவேண்டும் என்று சொல்லி, அவர்களின் அநுக்ரஹத்தைப் பெற்றுத் தரவே அவர்களுக்குப் பிரீதியாக யக்ஞங்களைப் பண்ணவேண்டும் என்று வேதம் சொல்கிறது * . ஞானம் வந்தபின் இந்த தேவர்கள் வேண்டாம். நேராகப் பரமாத்மாவை உபாஸிக்கலாம். ஆனால் த்வைதப் பிரபஞ்சத்திலிருந்து கொண்டே, இதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளை நாம் செய்கிற காலத்தில், வேறு வேறாக தேவதைகளையும் உபாஸிக்கத்தான் வேண்டும் என்று வைத்திருக்கிறது. **

இப்படி வேதங்கள் பலவாக இருந்தாலும், அதில் ஒவ்வொன்றைச் சேர்ந்தவர்களிடையே ஆசாரங்களில் சில வித்தியாஸங்கள் இருந்தாலும், எல்லா வேதங்களும் ஒரே லக்ஷ்யத்தை உடையவைதான். ஸமஸ்த லோகத்திற்கும், ஸகல ஜீவ ஜந்துக்களுக்கும் க்ஷேமத்தைக் கோருவதும், அவனவன் ஆத்மாவை அபிவிருத்தி பண்ணிக்கொண்டு, ஸத்ய தத்வத்தோடு சாச்வதமாகச் சேர்ந்து விடுவதும்தான் எல்லா வேதங்களுக்கும் பொதுவான லக்ஷ்யம்.

வேதங்களில் பொதுவான இன்னொரு பெருமை, ‘இது ஒன்றுதான் வழி’, ‘இது ஒன்றுதான் தெய்வம்’ என்று அது சொல்லாமல், சிரத்தையோடு எந்த மார்க்கத்தை அனுஸரித்து, எந்தத் தேவதையை எப்படி உபாஸித்தாலும், அதுவே சத்தியமான ஒரு வழியில் கொண்டு விட்டுவிடும் என்பதுதான். வேதம் தவிர இந்த மாதிரிப் பல வழிகளை ஆதரித்துப் பேசுகிற மதப் பிரமாண நூல் வேறெதுவுமே லோகத்தில் இருக்கவில்லை. தன் வழி ஒன்றே மோக்ஷ மார்க்கம் என்றுதான் அந்தந்த மதத்தின் மூலநூலும் சொல்லும். ஒரே ஸத்தியத்தைப் பல பேர் பல தினுசாகக் கண்டு கொள்ளலாம் என்று விசால மனப்பான்மையோடு சொல்வது வேதம் மட்டும்தான்.

உண்மையில் நம்முடைய சாஸ்திரங்களில் இல்லாத ஸயன்ஸ் எதுவுமே இல்லை. நமது புராதன சாஸ்திரங்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால், இந்த உண்மை தெரியும். ஆயுர்வேதத்தை—சரகர், சுச்ருதர் முதலானவர்களின் கிரந்தங்களைப் பார்த்தால், இப்போதைய பெரிய டாக்டர்களும் அதிசயிக்கும்படியான மருத்துவ முறைகளும், ஸர்ஜரி விஷயங்களையும் தெரிந்து கொள்கிறோம். மிகவும் புராதனமான அதர்வண வேதத்திலேயே யுத்தத்தில் உண்டாகும் பல விதமான காயங்களைக் குணப்படுத்தும் மூலிகைகள், சிகிச்சை முறை முதலியவற்றைப் பற்றிச் சொல்லியிருப்பது இப்போது ரொம்பவும் உபயோகமாக இருப்பதாகச் சமீபத்தில் காசி சர்வகலாசாலையில் ஒருத்தர் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருக்கிறார். என்ஜினீயரிங் டெக்னாலஜியிலும் ஆதியிலேயே அபாரமான திறமையை நம்மவர்கள் காட்டியிருக்கிறார்கள். போஜராஜன் செய்த ஸமராங்கண சூத்திரத்தில் ஆகாய விமானம் உள்படப் பலவிதமான மிஷின்களைச் செய்வதற்கான அடிப்படைத் தத்வங்களை விவரித்திருக்கிறது. சுமார் இரண்டாயிரம் வருஷங்களான ஓர் இரும்பு ஸ்தம்பம் இன்றைக்கும் தில்லி குதுப்மினாருக்குப் பக்கத்தில் துருப்பிடிக்காமல் இருக்கிறது. டாடா தொழிற்சாலை இல்லாமலே இப்பட்டிப்பட்ட பெரிய தூணை எந்த உலையில் (FURNACE) அடித்து உருவாக்கினார்கள் என்று ஆச்சரியப்படும்படி இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே இப்படிப் பல என்ஜினீயரிங் அற்புதங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளான கல்லணை எந்தவிதமான கலவையால் கட்டப்பட்டது என்று இன்றும் புரியவில்லை. ஆவுடையார் கோவில் கொடுங்கையில் பாறாங்கல்லை ஒரு காகிதத்தின் அளவுக்கு மெல்லியதாக இழைத்திருக்கிறார்கள். திருவீழிமிழலை வெளவால் ஒட்டி மண்டபத்தின் பிரம்மாண்டமான வளைவை (ARCH) எந்த ஆதாரத்தில் கட்டியிருக்கிறார்கள் என்று என்ஜினீயரிங் நிபுணர்களும் வியக்கிறார்கள்.

தமிழில் பதினெண் சித்தர்கள் பாடலில் இருக்கிற வைத்திய நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

வான நூலில் (astronomy) நமக்கு இருந்த பாண்டித்தியத்தால்தான் எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக, இன்று அமாவாசை, இன்று கிரகணம் என்று கொஞ்சம்கூடத் தப்பாமல் பஞ்சாங்கம் கணிக்க முடிந்திருக்கிறது.

எல்லா கலைகளும் சாஸ்திரங்களும், ஸயன்ஸுகளும், பாரத தேசத்தில் நன்றாக வளர்ந்தே வந்திருக்கின்றன. ஆனாலும், இப்போது விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் அணுகுண்டு போன்ற எத்தனையோ அனர்த்தங்கள் உண்டாகியிருப்பதைப் பார்க்கிறோமல்லவா? இப்படி நேரக்கூடாது என்பதாலேயே, பக்குவமானவர்களுக்கு மட்டும் நம் தேசத்தில் விஞ்ஞான நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். சாதாரண ஜனங்களுக்குப் புரியாத பரிபாஷையில் இந்த சாஸ்திரங்கள் அமைந்திருப்பதற்கு இதுவே காரணம். சித்தர்களின் தமிழ் பாடல்களும்கூட இப்படித்தான் நமக்குப் புரியாத பரிபாஷையில் இருக்கும்.

இப்போது நிபுணர்கள் ஆராய்ச்சி செய்தால், நம் சாஸ்திரங்களிலிருந்து பல விஷயங்கள் தெரிந்து கொள்ளமுடியும். சில சமாச்சாரங்கள் நமக்குப் புரியாமல் இருக்கும். அதற்காக அவற்றை ஒதுக்கிவிடக்கூடாது. நமக்குப் பின்னால் வருபவர்களுக்காவது அது புரியக்கூடும் என்பதால், நமக்குப் புரிகிற சாஸ்திரங்கள், புரியாத சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் நாம் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும்.

மற்ற தேசங்களில் சமீப காலமாகவே இந்த விஞ்ஞான வித்தைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. நாம் ஆதியில் நமக்கென்றே இருந்த இந்த வித்யா சம்பத்தை மறந்துவிட்டு, மற்றவர்களிடமிருந்து இப்போது கற்றுக் கொள்கிறோம்! இதில் ஒரு முக்கியமான வித்தியாசம், இந்த வித்தைகள் யாவும் பிரம்மவித்தை என்கிற ஆத்ம சிரேயஸுக்கு அநுசரணையாகவே நம் தேசத்தில் வைக்கப்பட்டிருந்தன. வெறும் லௌகிக சௌக்கியத்துக்காகவே அவற்றை உபயோகப்படுத்தி மேல்நாடுகள் உண்டாக்கியிருக்கிற ‘நாகரிக’த்தில் ஆத்மசாந்தி அடியோடு போய்விட்டது. இதை மேல் நாட்டுக்காரர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். விஞ்ஞானத்தின் மூலம் படிப்படியாக நாகரிகத்தில் ஏறி, இப்போது அவர்கள் அதில் உச்ச நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும் இதில் ஆத்ம திருப்தி இல்லை என்று கண்டுகொண்டு நம்முடைய வேதாந்தத்தின் பக்கமும் நம்முடைய பக்திமார்க்கத்தின் பக்கமும் வர ஆரம்பித்திருக்கிறார்கள். நாமோ நம்முடைய லௌகிக வித்தை, ஆத்ம வித்தை இரண்டையும் அலட்சியம் செய்து விட்டு, மற்ற நாட்டவர்கள் அடைந்திருக்கிற இரண்டுங்கெட்டான் நாகரிகத்தைத் தேடி ஓடுகிறோம். அவர்கள் இரும்பு உலகத்திலிருந்து (iron Age) தங்க யுகத்துக்கு (Golden Age)—அதாவது, இருட்டு யுகத்திலிருந்து பிரகாச யுகத்துக்கு—வந்து கொண்டிருக்கிறார்கள். நாமோ பிரகாச யுகத்திலிருந்து இருட்டு யுகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்! குறைவிலிருந்து அவர்கள் நிறைவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால், நாமோ நிறைவிலிருந்து குறைவுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

                                                                                                               ---- பரமாச்சாரியார் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


திரும்பும் வழி...

ஸ்ரீ ருத்திரம், 
தேவ உலகுடன் உயிர்களை/ கோளத்தை இணைக்கும் வழியை காட்டுகிறது. 

"ஜோதி ஸ்படிக லிங்கமாக சிவன் வருவான். "

"ஜோதி ஸ்படிக லிங்கத்தின் காந்த ஓளியை அமிர்த மயமாக, ருத்ர ரூபமாக தரிசித்து ஜபித்து, அதை தியானிக்கும் நான் ஒளி வழியை அடைந்து,  
துருவ பதம் அடைந்து, சிவஸ்வரூபமாக மாறுவேன்"

"வடகிழக்கு / ஈசான திக்கிலிருந்து எல்லா அறிவும் பெறப்பட்டன.
கணபதியும் ப்ரஹ்மாவும் சிவஸ்வரூபமாக அங்குள்ளனர்"

ஐந்து முகங்கள் 

சத்யோ ஜாதம் - அனாதி தூய காரண நிலை - வெண்மை
  
வாம தேவம் - கால சக்தி தமோ நிலை - கருநீலம் ( ஆகமத்தில் காவி சிவப்பு )

அகோரம் - விஸ்வரூப நிலை - காவி சிவப்பு ( ஆகமத்தில் கருநீலம் )

தத்  புருஷம் - தேவர் தலை நிலை - பசும்தங்கம் 

ஈசானம் - ஈச நிலை - வெண்மை, சாம்பல், கருநீலம் (சஹஸ்ரார தல பத்மம் )



ஸ்ரீ ருத்திரம், மந்திரங்களை  இணைக்கும் போது 

சத்யோ ஜாதம் - 1.1 - 2.1.7

வாம தேவம் - 2.1.8 - 3.2.4

அகோரம் - 3.2.5 - 4.2.9

தத்  புருஷம் - 5.1.1 - 6.1.10

ஈசானம் - 6.2.1 - 11.11

சத்யோ ஜாதம் - ஆனந்தமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

வாம தேவம் - விஞ்ஞானமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

அகோரம் - அன்னமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

தத்  புருஷம் - பிராணமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

ஈசானம் - மனோமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம் 

https://dheivathinkural.wordpress.com/2014/07/11/%e0%ae%85%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8c%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%87%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

https://dheivathinkural.wordpress.com/2014/07/11/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/

https://dheivathinkural.wordpress.com/2014/07/01/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

https://dheivathinkural.wordpress.com/2014/07/11/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/

https://dheivathinkural.wordpress.com/2014/07/01/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/

https://www.youtube.com/watch?v=NFxJeu7x9Uk

https://youtu.be/hgTti6-iZ0c

https://www.youtube.com/watch?v=Fsc6wT5Eau4

http://bharathavamsavali.blogspot.com/2021/06/why-north-star-vega-is-important.html

http://bharathavamsavali.blogspot.com/2021/06/chamakam-numbers-with-dna-mathematical.html?m=1

According to Dr Sasidharan, these numbers represent a polymer chain of molecules that form apa or water that enables evolution of life and intelligence, and apa is nothing but the nitrogenous base pairs of the DNA.   The numbers 1 to 33 represent the 33000 base pairs of mitochondrial base pairs of DNA.  The numbers 4 to 48 represent the 48 million nuclear bases of DNA.  The two sets of DNA bases combine to provide sustenance of human wellbeing and onward evolution of human life.  When the devotee prays for the blessing of these numbers, actually he is praying for bestowing on him all these DNA bases which conduce to sustenance of human wellbeing and happiness!





No comments: