Wednesday, September 29, 2021

பூதநாத கீதை - கேரள வர்மா / பாண்டிய வம்ச திலகம் / வீர மணிகண்ட ஸ்வாமி

பூதநாத உபாக்யானம் / பூதநாத உபக்யானம் / பூதநாத கீதை என்பது, பொன்னம்பலம் என்னும் பொன்னம்பல மேட்டில் / மலையில் பிறந்து, பந்தளத்தில் வளர்ந்து, பாண்டிய இளவரசனாக பட்டமேற்று, பின்னர் தன் ஜனன / பிறப்பு ரகசியத்தை அறிந்து, அரும்செயல்கள் பல செய்து, தவ கோலம் பூண்டு, பொன்னம்பல மேட்டில் சித்தி அடைந்த கேரள வர்மா / பாண்டிய வம்ச திலகம் / வீர மணிகண்ட ஸ்வாமி உரைத்த உண்மையும், மெய்பொருளும், வழியுமாம். 

பெரும்பான்மையான மனிதர்கள் பிறந்த இடத்திலிருந்து, உடம்பால், மனத்தால், ஆத்ம ரூபத்தால் நகர்வதில்லை/மாறுவதில்லை. ஆயின் மாற்றமும், நகர்வுமே இப்பூமண்டலத்தின் இயற்கை விதி. 

நம் போலவே பிறந்து, நம் வாழ்க்கை போல் வாழாமல், குருவாய், கடவுளாய் மாறிய இளவரசர்கள் புராண காலத்தில் பலர் இருந்தனர்,

துருவனிலிருந்து இந்த வழி தொடங்குகிறது. ப்ரஹலாதனையும், ராமனையும், கிருஷ்ணனையும் இன்னும் பலரையும் இப்பாதையில் காண்கிறோம்.

ஆனால் கடந்த 2000 ஆண்டுகளில், திராவிட தேசத்தில் பிறந்து, மேல்கண்ட பாதையில் பயணித்து, ஒவ்வொரு கேள்விக்கும் ஆச்சர்யம் ஊட்டும் பதில் அளித்து, ஆச்சார்யனாகவே அமர்ந்தவர் மணிகண்ட ஸ்வாமி.


பல தீர்க்க தரிசிகளை போல் அவருடைய பிறப்பும், தெளிவாக விளக்கப்படாதது. பொதுவான கருத்து, பாண்டியர்கள் மதுரையில் உரிமை இழந்த பின்னர் (சோழ வெற்றிகளால்) பல குழுக்களாக சிதறினர் (கி.பி 1048 -1084).

 ஒரு குழு, பத்ம தளம் / பந்தளம் சென்று ஆட்சி புரிந்தது. ராஜசேகர பாண்டியன் கி.பி 1081 இல், பந்தளத்தை ஆண்டு வந்தபோது அவனுக்கு தனது வாரிசு உரிமை பற்றி குழப்பம் இருந்தது. 

அகஸ்திய பீடத்தை சேர்ந்த குலகுரு ராஜசேகரனுக்கு அவன் பிறப்பு ரகசியத்தை அறிவித்து, முன்பிறப்பில் மதுரையில் அந்தண குலத்தில் பிறந்த அவன், சபரி மலையில் கும்பல தீர்த்தத்தில் நீராடி சாஸ்தாவின் அருளால் புத்திர பேறு பெற்றான். 

"மன்பதை காக்கும் தென்புலக்காவல்" என சிலப்பதிகாரம் இயம்பும் பாண்டிய வம்சத்தில் ராஜசேகரனாக (ராஜ ராஜ சோழன் தன்னை சிவபாத சேகரனாக அறிவித்து கொண்டான்) பிறந்து, அந்தணர் குலத்தில் பிறக்கும் தான் அவனுக்கு (முன்பிறப்பில் அந்தணன் விஜயன்) மகனாக வந்து சில காலம் வாழ்வதாக வாக்களித்தார்.

ராஜசேகரனுடைய பெண்ணை (தங்கை என்றும் சிலர் சொல்வர்), இஞ்சிப்பாறையில் இருந்து, கொள்ளையனாக வாழ்ந்த உதயணன் கவர்ந்து சென்றான். சபரி மலையில் அவன் நினைத்த காரியம் நிறைவேறாத கோபத்தில், பூசகரை கொன்று, கோவிலை உடைத்து, பூசகர் மகன் ஜெயந்தனையும் சிறை வைத்தான்.

ஜெயந்தனும் இளவரசியும் சாஸ்தாவின் அருளால் அங்கிருந்து தப்பினர்.

பொன்னம்பல மேட்டில் முனிவர்களின் ஆசிரமத்தில் மறைந்து வாழ்ந்தனர். முனிவர் குழாம், எதிர்காலத்தை அறிந்து, தேவர் குழாத்தின் துணையுடன், ஜெயந்தனுக்கும் இளவரசிக்கும் திருமணம் முடித்தனர்.

பங்குனி மாதம் பௌர்ணமியில் உத்திர நக்ஷத்திரம் துலா லக்கினம் புதன் கிழமையில் (கி.பி 1086) அவர்களுக்கு பொன்னம்பல மேடு ஆசிரமத்தில் கேரள வர்மன் என பின்னர் பெயர் பெற்ற மகன் பிறந்தார்.

தர்ம சாஸ்தாவின் அருளால் திராவிட தேசங்களை காக்க பிறந்ததால், முனிவர்கள் சாஸ்தாவின் கோவிலில் சார்த்தப்பட்ட மணியை அவர் கழுத்தில் கட்டினர்.

அதனால் மணிகண்டன் எனவும் பின்னர் அறியப்பட்டார்.

மணிகண்ட மாமுனியின் ஜாதகம் அவரது பிறவி நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணம் உள்ளது.

ஐந்தில் குரு புதன் சேர்க்கையும், பத்தில் கேது, பன்னிரெண்டில் சந்திரன் ( ஏழில் சுக்ரன் செவ்வாயும், ஒன்பதில் சனியும்) சன்னியாச யோகத்தையும், தபஸையும், ஞான காரகனான கேது, அவரை உலக வாழ்க்கை பயணத்தை தத்வத்தில் தொடங்கி தத்வமஸியில் முடிக்குமாறு நிறுத்தினார்.

ஜெயந்தனும் இளவரசியும் உதயணனால் பின்னர் கொல்லப்பட்டார்கள் என்றும் கூறுவதுண்டு. மறைந்து வாழ்ந்தார்கள் என்று கூறுவோரும் உண்டு.

எப்படியாயினும், குளத்துப்புழையில் ராஜசேகரன் குலகுருவின் ஆணைப்படி (அகஸ்திய பீடம்) மணிகண்டனை சுவீகாரம் எடுத்து கொண்டான். தன் பூர்வ ஜென்ம நல்வினை பயனால் இது விளைந்தது என்றறிந்து பந்தளத்தில் கேரள வர்மன் என்று பெயர் வைத்து இளவரசு பட்டம் கட்டி திராவிட தேசங்களை காப்பாற்றினான்!!

மணிகண்டனின் ஜென்ம நோக்கம் அறியாத பந்தள குடும்பத்தினரும், மந்திரிகளும் அவனுக்கு சதியால் கேடு வர திட்டம் தீட்டி முயற்சித்தனர்.

தர்ம சாஸ்தாவின் அருள் பெற்ற மணிகண்டன், சோதனைகளை சாதனை ஆக்கினார். புலிப்பால் கொணர்ந்தார். சகல உயிர்களும் தன் ஆளுகைக்குட்பட்டது என்று காட்டினார்.

பூதநாதனே தன் உருவத்தில் இருக்கிறார் என்று நிறுவினார்.

பாண்டிய குலங்களை ஒன்று சேர்த்தார். உதயணன் முதலிய மூர்க்கர்களை கொன்றார். வாவர் போன்றோரை நல்வழிப்படுத்தினார்.

மக்களை போர் பயிற்சியினாலும், யோக நிலை கூடுதல், த்யானத்தாலும், மந்திர தந்திர பயிற்சியாலும் நல்வழிப்படுத்தி, வரும்காலத்தில் தன் வாழ்விற்கு பின்னரும், இந்த பாரத தேசத்திற்கு கேடு வரும்போது, கற்பனைக்கு எட்டாத பலத்துடன், மந்திர தந்திர சித்தி உடன் வந்து காப்பாற்றுவேன் என்று அறிவித்தார்.

பூதநாத கீதை என்னும் பூதநாத உபக்யானம் அல்லது பூதநாதன் வழி...

ராஜசேகரனுக்கு பூதநாதனாக நின்று மணிகண்ட மாமுனி அறிவித்த தன் ஜென்ம நோக்கம், தத்வ உபதேசம், சபரி மலை கோயில் ரகசியம், யந்திர ரூபமாக, 18 படிகளாக, ஆயுதம் ஏந்தியவனாக (சாஸ்தாவாக), தத்துவம் கடந்த யோக ரூபமாக  தன்னை குருவாக கொள்ள / அமைந்த காரணம் / வழி, பூதநாத கீதை என்னும் பூதநாத உபக்யானம் என்று வழங்க படுகிறது.

மணிகண்ட மாமுனி தீயோரை அழிக்க, நம்மை நல்வழிப்படுத்த திரும்பவும் வருவார் என்ற நம்பிக்கையே இன்று திராவிட தேசங்களின் ஒரே வஜ்ராயுதம். 

 தேவரும் முனிவரும் அந்த நாள் திரும்பவும் ஏற்பட (பிரணவம் பவிக்க / ச்ராவணம் பவிக்க / சரவண பவ ) தவம் செய்வர்..

தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம் 



https://en.wikipedia.org/wiki/Sanyasa_yoga

Tapasavi i.e. the one who has conquered his senses and who possesses the finest of intelligence, is persevering, hardworking and successful. This is a yoga of a very high order and gives excellent results provided both Jupiter and the Moon gain favourable vargas and nakshatras.[11] The significant factor in this yoga-formation is the lord of the sign of exaltation for Devaguru (Jupiter) occupying the all-important Karmasthana (house of action).

https://ullagaramvijayaganapathy.files.wordpress.com/2015/09/hh3.pdf

https://www.facebook.com/BharathaVamsavali/photos/a.2102865383065040/2102866546398257/

No comments: