தெய்வத்தின் குரலிலிருந்து..........
சுந்தரேசர் அல்லது சொக்கநாதர் பற்றி.......
"Exclusive- ஆக அத்வைதத்துக்கு மட்டுமே கிரந்தங்கள் உபகரித்தவர்களில் ஆசார்யர்களுக்குப் பூர்வத்தில் வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள்.
ஸுந்தர பாண்டியர்கள் என்று ஒருத்தர் (ஏதோ தெற்கத்தி ராஜா பேர் மாதிரி இருக்கிறது!);
இன்னொருத்தர் த்ராவிடாசார்யார். இந்த த்ரவிடாசாரியரை விசிஷ்டாத்வைதிகளும் தங்கள் ஸித்தாந்தத்தை ஆதரிப்பவர் என்று சொல்லிக் கொள்வதுண்டு.
இவர்களுடைய கிரந்தம் எதுவும் இப்போது பூர்ணமாக நமக்குக் கிடைக்காவிட்டாலும், ஸாக்ஷாத் நம் சங்கர பகவத்பாதாள் உள்படப் பிற்கால அத்வைத கிரந்த கர்த்தாக்கள் இவர்களை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்."
"ஆக, ரொம்பவும் ஆதியில் எங்கேயும் வேத மதமே இருந்தது ஒரு நிலை; அப்புறம் அங்கங்கே புது மதங்கள் ஏற்பட்டது ஒரு நிலை; பிறகு இந்த மதங்கள் எல்லாம் மங்கிப் போகிற மாதிரி கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம் இவை மட்டுமே அங்கெல்லாம் பரவிய நிலை; இதற்கப்புறம், சரித்திரத்தில் நன்றாக உறுதிப்பட்டுவிட்ட காலத்தில் மறுபடி இப்போது நான் சொன்னமாதிரி, ஹிந்து நாகரிகச் செல்வாக்கானது பல தேசங்களில் — குறிப்பாக கீழ்த்திசை நாடுகளில் ஜீவ களையுடன் ஏற்பட்டது ஒரு நிலை. இந்தக் கட்டத்தில்தான் அங்கோர்வாட், பேராபுதூர், ப்ரம்பானன் மாதிரி பெரிய பெரிய தமிழ்நாட்டுக் கோயில்கள் அங்கே எழும்பின. இந்தக் கட்டத்தில்தான் நம்முடைய திருப்பாவையும் திருவெம்பாவையும் கூட ஸயாமுக்கு—இப்போது தாய்லாந்து என்கிறார்கள்—சென்றிருக்கின்றன."
"சரித்திர காலத்துக்கு முற்பட்டவர்கள் என்று வைக்கப்பட்ட பழங்குடிகளின் மதங்களில்கூட நம் சமய சின்னங்கள் இருக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? அத்தனை காலத்துக்கு முந்தி, நாகரிக வாழ்க்கையே உருவாகாத தூர தூர தேசங்களுக்கு இந்தியாவிலிருந்து படையெடுத்தோ வியாபாரத்துக்காகவோ போய் நம் நாகரிகத்தைப் பரப்பினார்கள் என்றால், அது பொருத்தமாகவே இல்லையே! அதனால்தான் ‘இங்கிருந்து கொண்டுபோய் அங்கே புகுத்தவில்லை; ஆதியில் லோகம் முழுக்கவே வேத மதம்தான் இருந்திருக்க வேண்டும்’ என்று எனக்குத் தோன்றுகிறது. அப்புறம் அவை திரிந்து திரிந்து இப்போது அந்தந்த தேசத்து ‘ஒரிஜினல்’ மதங்களாக நினைக்கப்படுபவையாக ஆகி, பிற்பாடு அங்கும் சரித்திர காலத்துக்கு உட்பட்ட கிறிஸ்துவம், பௌத்தம், இஸ்லாம் ஆகியன பரவியிருக்க வேண்டும்."
அருணகிரிநாதர்...
"திரிந்த வேதம் தண்டமிழ் தெரிதரு புலவோனே
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே "
ஆஸ்திரேலிய மெல்போர்ன் கலை அருங்காட்சியகத்திலிருந்து...
குடை, தோலால் ஆசனம், ருத்திராட்சம் போன்ற ஜப மாலை.. ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் குருமார் பொருட்கள்..
ஜப மாலையில் சரியாக 60 மணிகள் உள்ளன..
ஒவ்வொரு நொடியும் பிரணவத்தையோ, சிவ பஞ்சாக்ஷரத்தையோ ஜபம் செய்தவர்கள் ரஷ்யாவிலிருந்து, ஆஸ்திரேலியா வரை இருந்திருக்கிறார்கள்.
திராவிட மொழிகள் (மத்திய கிழக்கிலிருந்து ஆஸ்திரேலியா வரை) சைவ வழிமுறைகளை கொண்டுள்ளன ( வெள்ளை ஆடை , ருத்திராக்ஷ ஜெப மாலை, சாம்பல் /திருநீறு அணிதல் )
நாம் கைலாசத்திற்கும், காசிக்கும், சபரி மலைக்கும் செல்வதுபோல் ஆஸ்திரேலிய பழங்குடியினர் உள்ளுரு (உள்ளூர் ) எனும் மலைக்கு 40 ஆயிரம் ஆண்டுகளாக செல்கிறார்கள்.
மத்திய கிழக்கில், ரஷ்யாவில் அக்னி உருவாக வழிபட்டனர்.
ரிக் வேதம் ரஷ்யாவில் இருந்தது. கார்க்கி என்ற ரஷ்ய பெயர், இந்தியாவில் கோத்ர பெயராக உள்ளது. இது போன்ற அநேக ஒற்றுமைகள் உள்ளன.
சிவப்பு இந்தியர்கள் வட அமெரிக்காவில், லிங்கமாக, சாஸ்தாவாக (ஆயுதம் ஏந்தியவராக) வழிபட்டனர்.
பசிபிக் தீவுகளில் வாழ்வோர் நம்மைப்போல் எரிமலைகளை கடவுளாக வழிபடுகின்றனர். இதையே வட அமேரிக்காவில் செவ்விந்தியர்கள் செய்கின்றனர்.
செவ்விந்தியர்கள் திசைகளையும் ஆகாயத்தையும் வழிபட்ட முறை, பஞ்சாயதன முறையை போல் ஒட்டியுள்ளது. ஸ்ரீ ருத்திரத்தில் சொல்லப்படும் நிறங்களையே (வெள்ளை, கருநீலம், நீலம், சிவப்பு, பசுந்தங்கம்/மஞ்சள் ) அவர்கள் திசைகளுக்கு குறிக்கிறார்கள்.
ஆதலால் வோல்காவிலிருந்து கங்கை வரை (ராகுல் சங்கரித்தியாயன் கங்கையோடு, ஏனோ, நிறுத்தி விட்டார்!!! ) மட்டும் அல்ல, அறிவுடன் ஆய்ந்தால், மெல்போர்னில் ஓடும் யர்ரா நதி வரை (யர்ரா என்பது ஆறு என்பதின் திரிபு), வட அமெரிக்காவிலிருந்து, பசிபிக் தீவுகள்வரை அத்வைத சைவம் பரவிக் கிடந்தது.
மகேந்திர வர்ம பல்லவனும், மாமல்லனும், ராஜ ராஜனும் (சிவபாத சேகரன் / ராஜ ராஜன் ), ராஜேந்திரனும் அத்வைத சித்தாந்த சைவத்தை உலகம் யாவும் திரும்ப கொண்டு வர செய்தார்கள்.
ஆதி மதமான, அக்னி, சக்தி/தாய், சிவ/ஜீவ ஒளி /ஆதி தந்தை, சாஸ்தா (ஆயுதம் ஏந்தியவராக) இவற்றை உள்ளடக்கிய ஹிந்து மதமே, மனிதனின் மிகப்பழைய ஆன்மிக / மத வழக்கங்களையும், போதனைகளையும், தத்துவத்தையும் கொண்டது. 40000 முதல் 2 லக்ஷம் ஆண்டுகள் பழமையான வழக்கங்கள் நாம் கடைபிடிக்கிறோம். எவ்வளவு அறிவியல் முன்னேற்றங்கள் கண்டபோதும் பழைய வாழ்க்கையை மறைக்கவோ, மறுக்கவோ முயலவில்லை. ஜீவ ஆழ்நிலையை நன்குணர்ந்தே இது இப்படி போதிக்கிறது. மற்ற மதங்கள் பழைய முறைகளை முழுவதும் அழித்தன.
சனாதனம் என்ற வார்த்தை இதையே குறிக்கிறது. அதை இன்று வர்க பேதத்தை காப்பாற்ற உபயோகிப்பதாக பொய்யுரைக்கின்றனர். வர்க, ஜாதி, இன, மொழி பேதங்கள் பின் வந்தன. எல்லா கண்டங்களிலும் இவை இருந்தன, இருக்கிறது. நாளைய உலகம் இதை கடந்து தூய பழைய மதமான வேத மதத்தின் உண்மை பொருளுணர்ந்தால் மட்டுமே பிரிவினைகளால் வரும் அழிவை தடுக்க இயலும். சனாதன வேத மதம் பிறப்பு அடிப்படையில் மட்டுமே எல்லாம் என்று சொல்லவில்லை. ஆனால், பிறப்பிலிருந்து நீ கற்றுக்கொள். மன மாற்றத்தால், வாழ்க்கை முறை மாற்றத்தால் மட்டுமே பிறவி பயனை அடைய முடியும். இது எல்லாருக்கும் பொதுவானது.
மேற்கூறியது பொய் என்றால், பிறப்பால் ப்ராஹ்மணர் அல்லாத 6 ரிஷிகள் (அத்ரியை தவிர) அந்நிலை எப்படி அடைந்தனர். அம்பரீஷர், விஸ்வாமித்திரர், சத்யகாம ஜாபாலி, நந்தனார் உட்பட பலர் பொய்யா ?
குணத்தாலும், கர்மத்தாலும் யாவரும் மனநிலை, உயிர்நிலை மாற்றமடைய வேண்டும்/முடியும் என்பதே கீதையின் முடிவு.
வேதத்தின் முடிவும், வேதாந்தத்தின் முடிவும் அதுவே.
சிவோஹம். ஹரி ஓம்.
https://dheivathinkural.wordpress.com/2014/07/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88/
https://dheivathinkural.wordpress.com/2014/06/16/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
https://jayasreesaranathan.blogspot.com/2016/02/indian-connection-to-australian.html
http://www.thiruppugazh.org/?p=1805
https://thewildwest.org/lakotaindiansthefourdirections/
https://thewildwest.org/lakotaindiansthecircle/
https://thewildwest.org/lakotaindiansconceptofwakan/
https://americanindian.si.edu/
https://www.atlasobscura.com/articles/mount-shasta-spirituality
https://www.wayoutback.com.au/blog/ulurus-significance-to-australian-indigenous-culture/
https://en.wikipedia.org/wiki/Walkabout
https://en.wikipedia.org/wiki/Volga_Se_Ganga
No comments:
Post a Comment