Tuesday, September 7, 2021

கணபதி

 


கணங்களின் பதி - கணபதி

கணங்கள் யார் யார் ? அவர்களின் அறிவியல் பொருள் என்ன?

6 குவார்க் பேரண்டத்தில் உள்ளது.
 
6 கருத்துரு மதங்கள், 6 செயல்பாடுகள் அல்லது 6 குவார்க்குகளை உருவக படுத்துகின்றன.

6 தரிசனங்களை காட்டி செல்கின்றன. 

உருவக மதங்களுக்கு உயிர்நிலை, அறிவியல், சமூக பயன்பாடு, மனோநிலை, தர்க்க நோக்கங்கள் உள்ளன. 



காணாபத்யம் - மேன்மை கட்டுப்பாட்டாளர் - யோக நிலை குரு - உயிர்நிலை வழிபாடு - தாழ் (bottom) குவார்க்.

மேல் - சைவம் (condensed matter /consciouness)

கீழ் - சாக்தம் (energy form)

உயர் - சூர்யம் (condensed matter /consciouness)

தாழ் - காணாபத்யம் (energy form)

விசித்திரம் - குமரன் (energy form)

தகை - விஷ்ணு (condensed matter /consciouness)


6 தரிசனங்கள் :

யோகம் 

சாங்க்யம் 

நியாயம் 

வைசேஷிகம் 

பூர்வ மீமாம்சை 

உத்தர மீமாம்சை 

பஞ்ச இந்திரியங்களை கொண்டு உணரப்படும் உயிர்களில் முன்னோர்களை அடுத்து  இயல்பானது கணபதியே.

உயிரை சிவத்துடனும், சிவத்தை உயிருடனும் கட்டும் அறிவு / அறிவு நிலை / பூகோள நிலை / உயிர்நிலை ஐந்து.
 
ஐந்து முகங்களுடன் உள்ள சிவமே கணபதியாம்,
 
தேவ உலகுடன் உயிர்களை/ கோளத்தை இணைக்கும் வழியுமாம். 


ஸ்ரீ ருத்திரம், 
தேவ உலகுடன் உயிர்களை/ கோளத்தை இணைக்கும் வழியை காட்டுகிறது. 

"ஜோதி ஸ்படிக லிங்கமாக சிவன் வருவான். "

"ஜோதி ஸ்படிக லிங்கத்தின் காந்த ஓளியை அமிர்த மயமாக, ருத்ர ரூபமாக தரிசித்து ஜபித்து, அதை தியானிக்கும் நான் ஒளி வழியை அடைந்து,  
துருவ பதம் அடைந்து, சிவஸ்வரூபமாக மாறுவேன்"

"வடகிழக்கு / ஈசான திக்கிலிருந்து எல்லா அறிவும் பெறப்பட்டன.
கணபதியும் ப்ரஹ்மாவும் சிவஸ்வரூபமாக அங்குள்ளனர்"

ஐந்து முகங்கள் 

சத்யோ ஜாதம் - அனாதி தூய காரண நிலை - வெண்மை
  
வாம தேவம் - கால சக்தி தமோ நிலை - கருநீலம் ( ஆகமத்தில் காவி சிவப்பு )

அகோரம் - விஸ்வரூப நிலை - காவி சிவப்பு ( ஆகமத்தில் கருநீலம் )

தத்  புருஷம் - தேவர் தலை நிலை - பசும்தங்கம் 

ஈசானம் - ஈச நிலை - வெண்மை, சாம்பல், கருநீலம் (சஹஸ்ரார தல பத்மம் )



ஸ்ரீ ருத்திரம், மந்திரங்களை  இணைக்கும் போது 

சத்யோ ஜாதம் - 1.1 - 2.1.7

வாம தேவம் - 2.1.8 - 3.2.4

அகோரம் - 3.2.5 - 4.2.9

தத்  புருஷம் - 5.1.1 - 6.1.10

ஈசானம் - 6.2.1 - 11.11

சத்யோ ஜாதம் - ஆனந்தமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

வாம தேவம் - விஞ்ஞானமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

அகோரம் - அன்னமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

தத்  புருஷம் - பிராணமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

ஈசானம் - மனோமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

பேரண்ட வெடிப்பின் உயிர்நிலை சமப்பாடு அடைந்தவுடன், மேன்மை கட்டுப்பாட்டாளர் நிலை கொண்ட உயிர் தன்மையை, பௌர்ணமி, அமாவாஸ்யை தொட்டு வரும் வளர் மதி போக்கின் 4ஆம் நாள் காணாபத்யத்தின் உருவகமாக கொள்கிறோம்.

அவரே சதுர்முக பிரம்மா என்றும் ஸ்ரீ ருத்திரம் அறிவிக்கிறது. 

வடகிழக்கு / ஈசான திக்கு (அபிஜித் / வேகா மண்டலம்) நோக்கிய ஒளி பாதையுடன் உயிர்நிலையை இணைக்கும் கட்டுப்பாடு தேவர்களால் அமைக்கப்பட்டது. 

உயிர்நிலை சமன்பாடும், உயிர் சக்தி மேம்பாடும் அடைய யோக முறைகளும், தியான மற்றும் பூசை முறைகளும் நிறுவப்படுகின்றன. 

பிரணவ ஸ்வரூபமாகவும், சைவ (வாழ்வு , அறிவு , சக்தி) உயிரான யானையின் முகமாக உருவகப்படுத்தப்பட்டது. 

படைப்பு , காப்பு , பன்மை அழிப்பு , கால சக்தி நிலை மாற்றம் ஆகியவற்றின் கூறாக பிரணவம் ( அன்று முதலாய்  புதியதாய் தோன்றுமந்த ) குரு வடிவமாய் நின்றது.

உள்ளகரமாய், மந்திர விதையாய், யோக ஸ்வரூபமாய் (மஹேஸ்வர சூத்திரங்களின்படி ) கணபதியே நிற்கிறார். 

பூத உடலில் கட்டுண்டிருக்கும் ஜீவ சக்தியே (குண்டலினி) ஏழு யோக  சக்கரங்கள் (Endocrine or ductless glands) வழியாக பயணிக்கும் அல்லது நிலை பெறும்.  நாளமில்லா சுரப்பிகள் யாவும் தன் சுரப்பினாலும், மின்காந்த அலைகளாலும் pituitary மற்றும் உடம்புடன் இயக்கநிலை அடைகின்றன.

நவீன மருத்துவம் நாளமில்லா சுரப்பிகள் பற்றி அறிந்தது 1 சதவிகிதம் மட்டுமே. உடற்கூறு கொண்டு அறிய முடியாத, மாய சக்தி உலகம் இவ்வுடம்பில் உள்ளது.

இதையே சுப்பிரமணிய ச்ருஷ்டி என்கிறோம். 

ஆணவ, கன்மம், மாயா  மலங்களில் இருந்து விடுபட ஒவ்வோர் மனித உயிரையையும் பிரபஞ்சத்துடன், ஏழுலுகங்களுடன் இணைக்கும் கொடியே சக்கரங்கள்.

எப்படி மூளை நரம்புகளால் கட்டுப்படுத்துகிறதோ, நாளமில்லா சுரப்பிகள் தன்னை சுற்றி பாம்பு போன்று  நெளிந்த மின்காந்த அலைகளை (energy field) ஏற்படுத்தி (control system) இயக்க முறையை  உருவாக்குகின்றன. Spinal cord - இதன் நேரடி தொடர்பற்றது. இடகலை ஐந்தும் (கணபதி), பிங்களை ஆறும் (சுப்பிரமணியன்) ருத்திரர்களாக உருவகப்படுத்தபடுகின்றன. இவற்றை யாவரும் உணர்வால் அறிய முடிகிறது. 

பிரம்மமே ரூபமாய் நின்ற குருவடி போற்றி. 

விஷ்ணுவின் நான்கு கரங்களில் பூவுலகின் தேவையை நிறை செய்கிறார்.
சின் முத்திரையும், அபய ஹஸ்தமும், அமிர்த கலயமும் கைக்கொள்கிறார். 



மூஞ்சுறு நம் பூத உடல். கணபதி நம் சூக்ஷ்ம பெருவுடல். 

திதியின் அடிமைகளான நாம் மோதகத்தின் பூர்ணத்தைப்போல் அமிர்த ரூபமாய் மாறி, தூய உயிர் /ஒளி  வெளியால் நிறைக்கப்பட்டு, ஆதித்யர்களாக மாறுவோம்.

இயற்கையுடன் ஒன்றாகி, சேதன, அசேதன பொருள்களின் கணபதியாக மாறுவோம். 

 ஹரி ஓம் 

-----------------------------------------------------------------------------------


உள்ளகர விஜய கணபதி தியான வர்ணனை 


எந்தை பிரஹ்மஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாகவதர் செய்த இந்த கணபதி அலங்காரம் என் கண் முன்/ நம் கண் முன் நின்றிட, இந்த கவிதை பயன்படும் என்று நம்புகிறேன்..

அறுமூன்று விழி ஒக்கும் பளிங்கலங்காரமும்
அழிவிலா ஆதவன் நடுவில் ஒளிவட்டமாய்
பூமறைக்கும் தாமரையின் ஈராறு இதழ்களும்
மாதம் சேர் வருடமாய் உதயவனை போற்றவே
நெடுமல்லி மாலைகள் பெருவளைவின் மீது
கண்கோடி கண்டதனை நோக்குவதற்காக
ருத்திரனின் அக்ஷமும் பிரணவன் தனை சூழ

மரு ஒன்றும் இல்லாத மகுடங்கள் வைத்தே
வேழ முகம் கொண்டு வெண் திருநீறணிந்து
இருவினைகள் போக்கும் செவிமடல்கள் பரவி
பாசங்கள் ஒழிக்கும் பாசாயுதத்தோடு
நீசமாம் புலனைந்தும் ஐங்குசத்தால் அடங்க

நற்காவி பூக்கள் சூழ்ந்தவனை காட்ட
பொற்பதம் பணிபவரை காக்குமிரு சுதர்சனமும்
அற்புத பதமளிக்கும் அமிர்த கலயத்தோடு
நம்புவோர்க்கு வரமளிக்கும் தும்பிக்கை மாம்பழமும்
நான்முகன் பதமளிக்கும் நாகாபரணமும்
முப்புரம் நுகரும் மூஷிக வாகனன்
முப்பழம் கொண்ட அருட்பீடத்தில் அமர

கீதம் இசைக்கும் மணிகள் அங்கு ஒலிக்க
தூபமும் தீபமும் செய் நைவேத்தியமும்
ஆறைந்து, திராட்சையும், செவ்வனாசிப்பழமும்
அறிவும் மனமும் போன்று உடைத்த தேங்காயும்
ஜம்பு த்வீபனுக்கு நாவல் பழமும்
பூர்ண பிரணவனுக்கு வெண் கொழுக்கட்டையும்

ஐங்கரன் தன்னில் அடங்கும் நற் கணங்களும்
பஞ்ச கலயம் தன்னில் ஒளிரும் நற் பூதமும்/போதமும்
ஞானமாம் மயிலும் தீப ஒளிகாட்டி
நாளும் அவன் பதம் நாட, நம் கண் முன்னே நிற்கும்.


http://bharathavamsavali.blogspot.com/2021/06/6-darsanas-and-6-protovirtual-religions.html

http://bharathavamsavali.blogspot.com/2021/06/why-north-star-vega-is-important.html

http://bharathavamsavali.blogspot.com/2021/08/blog-post.html

https://en.wikipedia.org/wiki/Quark

https://en.wikipedia.org/wiki/Hindu_philosophy


No comments: