Sunday, July 17, 2022

துர்கா / காளி உபாசனை - விக்ரமாதித்தன் கதையின், பொற்கால மாந்தர்களின் வாழ்க்கை தத்துவம்

 


துர்க்கை தனி கோவிலில் இருக்கும் இடங்களிலெல்லாம் குறிப்பாக வடக்கு / வடகிழக்கு பார்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தால், யந்திரங்கள் மற்றும் மந்திரங்களால் அவை வலுவூட்டப்பட்டிருக்கும். அதனுடன் ஒரு தீர்த்தமும், ஒரு மரமும் (அரசு அல்லது ஆல் அதற்கு சமமானது) சேர்ந்திருந்தால், அது தேவர்களின் உலகத்துக்கு வாயிலாக மாறும்... 

விக்ரமாதித்யன் எப்படி அழியாத் தன்மையை அடைந்தார் என்பது பற்றி கதை ஒன்று  உள்ளது. 

விக்ரமாதித்யன் வாழ்ந்த உஜ்ஜைனி நகரத்தின் கதையை பார்ப்போம்..








விக்ரமாதித்யன் எப்படி காளியின் தரிசனத்தையும், கடாக்ஷத்தையும் அடைந்தான் என்பதை அது  விளக்குகிறது.

ஏழு வியாஹ்ருதிகளை ஒரே அடியில் கடப்பது எப்படி என்பது இக்கதையில் குறியீடாக உள்ளது. 

ஏழு சக்கரங்கள், ஏழு வியாஹ்ருதிகள், அந்த சக்கரங்களில் நெய்யப்பட்ட குண்டலினி, தேவியின் மூல சக்தி. மேலும் தீர்த்தக்கரை, தேவியின் அமிர்த தாரையை நம்முள் பாய்ச்சும். 

நமக்கு மேலே உள்ள 7 வ்யாஹ்ருதிகளின் (பூ, புவ, சுவர்க்க, மஹ, ஜன, தப, சத்ய) / சக்கரங்கள் அல்லது பிரபஞ்ச மண்டலங்கள்  நமது விதியை நிர்ணயம் செய்கிறது. 

இந்த வ்யாஹ்ருதிகள் நம்மைக்கைப்பற்றும் சமயம், அல்லது அதை நாம் கைப்பற்றும் சமயம், பிரகிருதியின் இயல்புக்கு  முன் நாம் வேகமாகக் இவற்றை கடந்து, அமிர்த தாரையை அடைய முடியும் என்று விளக்குகிறது.

மூன்று சகோதரர்களின் கதை.. (பர்த்ருஹரி, விக்ரமாதித்யன், பட்டி)

ஒருவர் கவியாகவும் சந்நியாசியாகவும் (பர்த்ருஹரி) ஆனார்.

மற்ற இருவரும் மகோன்னதமான தேவ சாம்ராஜ்யத்தை காளியின் (துர்கையின்) அருளால் படைத்தார்கள். இறவாப்புகழ் பெற்றார்கள்..


மேலும், 

இவர்களைப்போலவே, 

சோழ சாம்ராஜ்யத்தில், மாமல்லரின் மகள் வயிற்று பெரும் பெயரர்களாக பிறந்தனர் இன்னொரு மூவர்..

முக்தனாகவே வாழ்ந்த விஜயாலயரின் பெரும் பெயரர்களாக இருந்தனர்.. சிதம்பரத்தில் பொன் கூரை வேய்ந்த பராந்தகன் I மற்றும் திருமுறை பதிற்றுவித்த கண்டராதித்தர், செம்பியன் மாதேவி வழியில் இவர்கள், தியாகத்தாலும், ஆன்ம வளத்தாலும், துர்கையின் அருள் பெற்றனர்.

ஆதித்ய கரிகாலன் தன் உயிர் போகும் என்று தெரிந்த பொழுதும் இறவா தேவ சாம்ராஜ்யம் அமையும் என்று அறிந்த  பொழுது, தன் உயிரை பணயமாக வைத்து, தனது தங்கை (குந்தவை) மற்றும் சகோதரனின் (ராஜராஜன்) வெற்றிக்கு உதவினான். 

அன்பில் அநிருத்த பிரம்ம ராயர் அன்று அந்த பொற்காலம் அமைய தளமிட்டார்..



துர்கையின் அருள் பெற்ற வந்தியத்தேவனை, மருமகனாக்கி அந்த சகோதர்கள், இந்த தமிழ்த்திருநாட்டின் / இந்தியாவின் பொற்காலம் (600 ஆண்டு காலம்) அமைய உழைத்தனர்.

துர்கா தேவி அவர்கள் நினைத்ததை அளித்தாள்!!

பட்டீஸ்வரம் துர்கை அவர்கள் நம்பிக்கையை, நினைவை நமக்கு காட்டுகிறாள்...


மேலும், 

இவர்களைப்போலவே, அன்னையின் அருளால் வித்யாரண்யர், அவர்தம் சகோதரர்கள் (மாதவர் மற்றும் சாயனர்), சிக்மகளூர் அருகே பாரத்வாஜ கோத்ர அந்தணர் குடும்பத்தில் பிறந்தனர்.

மூத்தவர் சிருங்கேரி மடாதிபதி ஆனார். இளையவர் இருவரும், அவர் அமைத்த விஜய நகர சாம்ராஜ்யத்தின் (ஹரிஹரர் மற்றும் புக்கர் ) கனவை சாதித்தனர்.

மாதவர் பிரதம மந்திரியாக சாம்ராஜ்யத்திற்கு உதவினார். சாயனர் இறவா நூல்களை எழுதி, ஹிந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்டு உதவினார். இருவரும், திராவிட தேசங்களில் உள்ள பூசாரிக்குழுக்களை ஒன்றிணைத்து (அந்தணர் / பிராம்மணர்),  ஹிந்து வேத மதம் தழைக்க பெரும் செயல் செய்தனர்..



துர்கா தேவியின் கருணை அளப்பரியது.. 

இந்த மூன்று சகோதரர்களின் / சகோதர சகோதரிகளின் வரலாற்று நிகழ்வுகள் அவள் வருவதை உணர்த்தும்.. 

மகோன்னதமான அவள் பெருமை இவ்வுலகத்திற்கு உணர்த்தப்படும்..


இன்றும் காளியின் அருள்பெற்ற ராமகிருஷ்ணரின் / விவேகானந்தரின் சீடர் பெருமக்கள், காளியின் / துர்கையின் அருளால், பேரிடர்களை போக்குகினறனர்..



தான் நினைத்ததை செய்யும் சக்தி பெற்றவள், அவள்..

அவளை தடுக்கும் சக்தி ஏழு உலகிலும் இல்லை.

ஏழு உலகங்களும் (வ்யாஹ்ருதிகளும் ) அவளின் வரவிற்கு காத்திருக்கும்..

தனது ப்ரஹ்ம தண்டத்தால், தியாகத்தால், ஏழு வ்யாஹ்ருதிகளையும் கடந்து சென்று, தேவ சாம்ராஜ்யத்தை இந்நிலவுலகில் (நிலவு + உலகு) அமைக்க முடியும் என்று காட்டினார் தவ சீலர்கள்..



(விஜய) துர்கா தேவி.....


"அக்னியின் நிறத்தில் இருப்பவளும், தவத்தினால் ஜொலிப்பவளும், அக்னியிலே பிறந்தவளும், கர்மத்தின் பலனை அளிப்பவளும், அப்பலனால் துதிக்கப்படுபவளும் ஆகிய துர்கையின் பாதங்களை நமஸ்கரிக்கிறேன்"

காலம் காலமாக எவ்வாறாகிலும் துதிப்பவர்களுக்கும், துதிக்கப்படுபவர்களுக்கும், அவர்களது தியானத்தின்/தவத்தின் ஒரு சாவி இருக்குமானால், அவ்வுயிர்களின் எல்லையில்லா நித்ய அன்பிற்கு ஒரு ஒளி வழிப்பாதை இருக்குமானால், நொடி பொழுதில் ஒரு உயிர் சக்தியை உருவாக்க இயலும்!!!

காலம் இப்பிரபஞ்சத்தை இயக்குவதால், நிர்ணயிப்பதால், துர்கை, தீயவற்றை காலவெள்ளத்திலும், துதிப்பவரை தன்னுள்ளும் இணைக்கிறாள். நொடியில் அவர்களது கர்மத்தின் பலனை அளிக்கிறாள்!!

-----------------------------------------------------------------------------------------------------------------

கோட்டை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

கோட்டைக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘துர்கம்’ என்று பெயர். ‘ஸுலபத்தில் பிரவேசிக்க முடியாதது’ என்று அர்த்தம். இஹத்திலும் பரத்திலும் பெரிய ரக்ஷையாக இருக்கிற அம்பிகையை ‘துர்கா’ என்கிறோம். வடக்கே ‘துர்க்’என்று முடிகிற அநேக ஊர்கள் அங்கேயெல்லாம் பூர்வத்தில் கோட்டைகள் இருந்ததைக் காட்டுகின்றன. ‘கட்’ (gad), ‘காடா’ (gada) என்று முடிகிற ஊர்களும் இப்படியேதான். தமிழ்தேசத்திலும் ஊத்துக்கோட்டை, புதுக்கோட்டை, செங்கோட்டை, பாளையங்கோட்டை என்று அநேக ஊர்கள் இருக்கின்றன. செஞ்சிக் கோட்டையும் வேலூர்க் கோட்டையும் ‘டூரிஸிட் ஸென்டர்’களாக இருக்கின்றன. இவற்றிலே எத்தனையோ மர்மங்கள்; பண்டங்களும் மநுஷ்யர்களும் (முக்யமாகக் ஸ்த்ரீகள்) எதிரிகள் கையில் சிக்காமலிருப்பதற்காக நிலவறை என்று அண்டர்-க்ரவுண்டில் வைத்திருப்பது முதலான பல ஏற்பாடுகள்.

வ்யூஹம் மாதிரியே கோட்டையிலும் பல அமைப்பு முறைகள் உண்டு. கோட்டை நிர்மாணத்தாலேயே நாடு நகரத்துக்கு க்ஷேமம் உண்டாகும்படியாக அவற்றை சாஸ்த்ரவத்தாக, மந்த்ர பூர்வமாகப் பண்ணவும் வழி இருக்கிறது. ‘சயனம்’ என்பதாக வேதத்தில் யஜ்ஞங்களில் செய்த கட்டுமானங்களுக்கான ரூல்களின் அடிப்படையிலேயே கோட்டை நிர்மாணம் செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். மநுஷ்ய ஸாமர்த்யத்தோடு மந்த்ரங்களாலும், வைதிகமான வடிவமைப்புகளாலும் ஏற்படுகிற தெய்வ சக்தியும் கோட்டை அமைப்பதில் பிரயோஜனமாயிருந்திருக்கிறது. ஸ்ரீ சக்ரம், ஷ்ட்கோணம், ஸுதர்சன சக்ரம் என்றெல்லாம் சொல்பவை கூடச் சிலவித வடிவமைப்பினாலேயே திவ்ய சக்தியைப் பெறுவதுதானே? இப்படி காஞ்சிபுர நகரத்தையே ஸ்ரீ சக்ர ரூபத்தில் ஆசார்யாள் புனர் நிர்மாணம் பண்ணித் தந்தாராம். கோட்டையிலும் இப்படி சக்ராகாரம், பத்மாகாரம் என்று பல டிஸைன்கள். கோவிந்த தீக்ஷிதர் தஞ்சாவூரில் புதிதாக காருடமாக (கருட ரூபத்தில்) கோட்டைக் கட்டச் செய்தாரம்.

கோட்டை பற்றிய இப்படிப்பட்ட அருமையான தத்வங்கள், செய்முறை எல்லாவற்றையும் இப்போது நாம் கோட்டை விட்டுவிட்டு நிற்கிறோம்!

பழைய கோட்டை அத்தனையும் relic -ஆக (இடிபாடாக) நிற்க விட்டிருப்பது தான் நம் பெருமையாயிருக்கிறது!

-----------------------------------------------------------------------------------------------------------------

நாமும் புதிய பொற்கால கோட்டைகள் (துர்கம்) கட்டுவோமாக!! 


தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்

(தொடரும்)


References and futher reading

http://bharathavamsavali.blogspot.com/2021/10/blog-post_8.html

https://en.wikipedia.org/wiki/Vidyaranya

https://en.wikipedia.org/wiki/Vijayalaya_Choleeswaram

https://en.wikipedia.org/wiki/Bhart%E1%B9%9Bhari

No comments: