உபாகர்மா என்று நாம் கூறும் (தொடக்கம் / புதுப்பித்தல் / புது தொடக்கம் என்றும் கொள்ளலாம். இக்காலத்தில், Plan B / Maintenance Work என்றும் கூறலாம்) இந்த பண்டிகையாகிவிட்ட (!!) இந்நாள் இப்படி இருக்கவில்லை.
காலவெள்ளத்தில், ஒரு 7000/8000 ஆண்டுகள் முன் சென்றால், இந்த நாளை எப்படி உபயோகப்படுத்தினார்கள் என்று சிந்திப்போம்.
இவற்றை சில கேள்விகளாக கேட்போம்..
1) ஏன் ச்ராவண பௌர்ணமியை தேர்ந்து எடுத்தார்கள் ?
உபாகர்ம சங்கல்பம் இந்த நாளை (ச்ராவண பௌர்ணமியை - ச்ராவண மாசத்தில் பௌர்ணமி திருவோண/ச்ராவண நக்ஷத்திரத்தில் வரும், நிறைய சமயம் அவிட்ட / தனிஷ்டா நக்ஷத்திரத்தில் இதை கொண்டாடுகிறோம்), இந்த பிரபஞ்ச ஸ்ருஷ்டி நாளாக அறிவிக்கிறது... ப்ரதமே மாஸே, ப்ரதமே பக்ஷே, ப்ரதமே திவஸே, துவிதீயே யாமே, த்ரிதீயே முஹுர்த்தே என்று தொடங்குகிறது. நேரமும் காலமும் குறிக்கப்படுகிறது.
நவீன விஞ்ஞானத்தில் இதை big bang என்று குறிக்கிறார்கள்.
பெரு வெடிப்பு / ஸுப்ரஹ்மண்ய ஸ்ருஷ்டி / ஆறுமுக தோற்றம் (6 quarks of the universe from primordial soup)
http://bharathavamsavali.blogspot.com/2021/06/6-darsanas-and-6-protovirtual-religions.html
http://bharathavamsavali.blogspot.com/2021/12/blog-post_23.html
http://bharathavamsavali.blogspot.com/2021/07/mathematicalspatial-proportions-for.html
https://en.wikipedia.org/wiki/Big_Bang
https://en.wikipedia.org/wiki/Quark
2) ஏன் ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிறது ?
உபாகர்ம சங்கல்பம் இந்த நாளை (ச்ராவண பௌர்ணமியை - ச்ராவண மாசத்தில் பௌர்ணமி திருவோண/ச்ராவண நக்ஷத்திரத்தில் வரும்) நிறைய சமயம் அவிட்ட / தனிஷ்டா நக்ஷத்திரத்தில் அறிவிக்கிறது..
3) உபாகர்ம சங்கல்பம் என்ன சொல்கிறது ?
உபாகர்ம சங்கல்பம் இந்த நாளை பிரபஞ்ச ஸ்ருஷ்டி நாளாக அறிவிக்கிறது... ப்ரதமே மாஸே, ப்ரதமே பக்ஷே, ப்ரதமே திவஸே, துவிதீயே யாமே, த்ரிதீயே முஹுர்த்தே என்று தொடங்குகிறது. நேரமும் காலமும் குறிக்கப்படுகிறது.
இந்நாளில் முக்கியமாக, வேதாரம்பம் செய்ய வேண்டியவர் செய்வர்.
வேதத்தின் எல்லா அவயங்களையும் ( சம்ஹிதைகள், ப்ராஹ்மணம், ஆருணம், காடகம், மந்த்ர ப்ரச்னம், பல வேதாங்கங்கள், சூத்திரங்கள், மஹேந்திர சூத்திரம் / தர்ம சூத்திரம், வியாகரணம், தத்தம் வேதங்கள் உட்பட, மற்ற வேதங்கள், வேதாந்தம் வரை ) கற்பேன் / காப்பேன் என்று உறுதி கொள்கிறோம்.
நித்யம் பிரம்ம யஃஞம் (வேத பாடம், விஷ்ணு சகிதமாக தேவர் கூட்டத்தை த்யானம் செய்தல், தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம்) செய்து கொண்டிருந்த நிலை மாறி, வேதத்தை கைவிட்டு,
வருடம் ஒருமுறையாவது வாழ்ந்த வாழ்க்கையின் எச்சத்தை கைக்கொள்கிறோம்...
என்றோ ஒரு நாள் சகுண ப்ரஹ்மத்தை அடைவேன் (நிர்குண ப்ரஹ்மமாக உணர்வேன்) அதற்கான புண்ய கர்மாவை செய்வேன் என்று உறுதி பூணுகிறோம்..
சில ப்ராஹ்மண சமூக ஹோமங்களும், பிரார்த்தனை மந்திரத்தை சொல்லி, ஆசீர்வாதத்துடன் முடிக்கிறோம்..
4) மஹாசங்கல்பம் என்ன சொல்கிறது ?
ஆதி விஷ்ணு, கற்பனை செய்யமுடியாத, எல்லையில்லாத (infinite), தனது சக்தியால், வாஞ்சையுடன்/ப்ரியமுடன் அமைத்த இந்த பெரும் பிரபஞ்சத்தின் (பிர + பஞ்ச - மீண்டும் ஐந்து) நடுவே,
நீந்திச்செல்லும் பல கோடி அண்டங்களுள், ஒன்றில், குணமிலா பெருங்கடலான, மூல ப்ரமாணமான, மஹத் அஹங்காரமான, பஞ்ச பூதங்களையே வாழ்விடமாக கொண்ட மண்டலத்தில், ஆதார சக்தியாக விளங்கும், ஆதி கூர்மமாய் (எதையும் தாங்கும் ஓடு உடைய ஜீவனாய்) இருந்து கொண்டு (அண்ட மத்தியில் இருக்கும் அடர்பொருளை குறிக்கும் - black hole of galaxial center),
பரம ஆனந்த ஸ்வரூபியாய், எட்டு திசைகளிலும் யானை போன்ற உயிர்களால் தாங்கப்படும், 1008 உலகங்களை தன் உடலாய் காக்கும், விஷ்ணுவின் அணுக்கத்தொண்டனான ஆதி சேஷ நாகத்தால் காக்கப்படும், பல மண்டலங்களுல் ஒன்றில்,
நிலை மாறாமல் காக்கப்படும் இந்த பூமியில்,
ஏழு கடல்களுக்கு மத்தியில்,
ஏழு த்வீபங்களுள்,
ஒன்பது கண்டங்களுள்,
மேலும், பல மலைத்தொடர்களால் சூழப்பட்ட, பூப்போன்ற, 500 கோடி யோஜனை விஸ்தீர்ணம் கொண்ட இப்பூமண்டலத்தில்
பல மலைத்தொடர்கள் கொண்ட இந்த பரத கண்டத்தில்,
உப்புக்கடலால் சூழப்பட்டு,
ஒன்பது வர்ஷங்களாக (நிலப்பகுப்புகளை குறிக்கும்) அழகுற அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில்,
ஜம்பு த்வீபத்தில் (நாவல் மரங்கள் நிறைய இருந்த த்வீபம்),
பாரத வர்ஷத்தில்,
பரத கண்டத்தில்,
மேரு பர்வதத்தின் தெற்கில்,
கர்ம பூமியில்,
அவந்தி, குருக்ஷேத்திரத்தையும் கொண்டு,
பூமியின் நடுக்கோட்டின் மேலே இருந்து கொண்டு (north of equator),
விந்திய மலையின் தெற்கே,
தண்டகாரண்யத்திலும், (எங்கெல்லாம் இந்த கர்ம பூமி பரவி உள்ளது என்று விளக்குகிறது)
கோதாவரியின் தெற்கிலும்,
எல்லா உலகங்களை படைத்த, ஞானத்தை கொடுக்கும் ஜீவனான, ப்ரஹ்மாவின் கல்ப கணக்கில்,
ஐநூறாவது (கோடி) வருஷத்தில் (five billion),
500 கோடி ஆண்டுகள் மிச்சமிருக்கும் பொழுது,
(நம் நக்ஷத்திரமான் சூர்யன் 500 கோடி ஆண்டுகள் வயதானது, இன்னுமொரு 500 கோடி ஆண்டுகள் வரை மட்டுமே இருக்கும்)
(ப்ரத்யக்ஷ ப்ரஹ்மாவான சூரியனுக்கும் மற்றும் விஷ்ணுவால் நியமிக்கப்பட்ட சூக்ஷ்ம பிரம்மாவுக்கும் எனக்கொள்ளவேண்டும் )
முதல் வருஷத்தில் (சங்கல்பம் ப்ரம்மாவின் ஆயுட்காலத்தில் தொடங்குவதால், அவரது ஆயுட்காலம் வரை தொடர்வதால்),
முதல் மாதத்தில் (ச்ராவணமே கல்ப/வருஷ ஆரம்பமாக கொண்டு),
முதல் பக்ஷத்தில் (சுக்ல பக்ஷ பௌர்ணமி ஆதலால்).
முதல் நாளில் (வேத காலத்தில், வருட ஆரம்பமாக, ச்ராவண பௌர்ணமி இருந்தது),
இரண்டாவது யாமத்தில் (உபாகர்மா ஆரம்பிக்கும் நேரம் குறிக்கப்படுகிறது / பின் காலை பொழுது ),
மூன்றாவது முகூர்த்தத்தில் (approximately over 8:24 AM),
ஏழு மன்வந்தரங்களுள் வைவஸ்வத மன்வந்தரத்தில் (மற்ற கட்டுரைகளில் விளக்கப்படுகிறது),
28 சுழற்சிகள் கடந்த பின்னர் (இது கலி 2800 ஆண்டுகள் என்று குறிக்க முடியும் அல்லது 28 ஆவது 60 வருட சுழற்சி என்று எடுத்து கொண்டால் கி.மு 1421 என்றும் கொள்ளலாம், அப்போதிலிருந்து இந்த முறை இந்த வடிவத்தில் இருக்கிறது என்று கொள்ளலாம், அதற்கு முன்னர் இது வேறு வடிவத்தில் இருந்திருக்கும்),
கலியுகத்தின் முதல் பாதியில்,
சாலிவாகன சகாப்தத்தில் (விக்ரமாதித்யனின் காலத்திற்கு சற்று பின்னர் எனக்கொள்ளலாம்),
சந்திர மற்றும் சூர்ய மானத்திலும் (lunar or solar astronomical method),
பிரபவ முதலான, 60 வருட கணக்கின் மத்தியில்....
(இப்பொழுது நாம் உபாகர்மா செய்யும் நேரம் குறிக்கப்படுகிறது, .. நாம சம்வத்சரே, மற்றும், .. ருது, .. மாஸே, பக்ஷே, .. திதி, .. வாசரஹ, .. நக்ஷத்திர யுக்தாயாம்... )
ச்ராவண அல்லது தனிஷ்டை நக்ஷத்திரத்தில்,
சுப யோகமான, சுப கரணமான, பல விசேஷங்கள் கொண்ட நன்னாளில்,
பௌர்ணமியில்,
எல்லா பாபங்களையும் அழிக்கும் நிபுணனான,
ஸ்ரீ பரமேஸ்வரனான சதாசிவனை / ஸ்ரீமன் நாராயணனை திருப்தி செய்ய, அவனுக்கு பிடித்தமான இந்த செயலால்/சங்கல்பத்தால்,
காலக்கணக்கிட முடியாத அஞ்ஞானத்தை கொண்ட, அந்த வாசனையில் உழலும்,
நான்,
அதிவேகம் கொண்ட, வேகமானது ஏறிக்கொண்டே இருக்கும்,
என்னுடைய பெரும் பிழையால்,
சம்சார சக்ரத்தின் விசித்திரத்தினால்!!!,
கர்ம தளைகள் இழுப்பதால்,
விசித்திரமான இச்சுழலில்,
தாயின் வயிற்றிலிருந்து, திரும்ப திரும்ப பிறக்கும் நான்,
பல முறை பிறந்த பின்னர்,
ஏதோ காலத்தில் செய்த புண்ய கர்ம விசேஷத்தால்,
மனிதனாகப்பிறந்து,
மறுபிறப்பாளனான ப்ராஹ்மணனாக வாழும் விசேஷ ப்ராப்தம் அடைந்தவனாக,
நான் இந்த பிறப்பிலும், முன்பிறப்பிலும் செய்த பாபங்களை / பாதகங்களை உற்று நோக்கி,
(இங்கே ப்ரஹ்ம ஹத்தியிலிருந்து, மஹாபாதகங்கள் பலவற்றையும், சம பாதகங்கள் பலவற்றையும், மேலும் உப பாதகங்கள் பலவற்றையும் சொல்லி)
கடைசியில்,
"ப்ராஹ்மணனுக்கு முக்கியமாக விதிக்கப்பட்ட, ஆத்ம க்ஷேமத்திற்கான வேலையை விட்ட, பெரும் பாவத்தை நினைத்து..."
புதிய பாவங்களை உற்பத்தி செய்து,
புது விதமாக பாவங்களை செய்து,
பல பாவங்களும் செய்து, அதை பலமுறை செய்தும்,
இன்று,
எல்லா பாவங்களும் என்னை விட்டு அகல,
பாஸ்கர க்ஷேத்திரத்தில்,
பலப்பல ஸ்வாமி சந்நிதிகளை வணங்கி,
குல தெய்வங்களை வணங்கி, தத்தம் ஊரில் உள்ள ஸ்வாமி சந்நிதிகளை வணங்கி, மற்றும் கிராம தேவதைகளை வணங்கி,
தேவ ப்ராஹ்மண சந்நிதியில்,
அஸ்வத்த நாராயணனை வணங்கி (வ்ருக்ஷ ராஜனான அஸ்வத்த மரத்தை வணங்கி),
33 கோடி தேவதைகளின் சந்நிதியை வணங்கி,
விநாயகர் முதல் தர்ம சாஸ்தாவான, ஹரிஹர புத்திரன் சந்நிதிகளை வணங்கி, ஹரி மற்றும் ஹரனுடைய பரிவார தேவதைகளை வணங்கி,
ச்ராவண மாதம், ச்ராவண / தனிஷ்டை நக்ஷத்திரத்தில், பௌர்ணமியில்,
இந்த உபாகர்மா உடனான மஹா சங்கல்பமும், சங்கல்ப ஸ்னானமும் செய்கிறேன்....
(இக்காலத்தில் நதி / தீர்த்த கட்டத்தில் இல்லாதவர்கள் ஆபோஹிஷ்டா எனத்தொடங்கும் மார்ஜன மந்திரத்தை கூறி
ஸங்க்ரஹமான / இலகுவான ஸ்னானத்தை செய்யலாம்)
ஸ்னானம் செய்யுமிடத்து பின்வரும் சங்கல்பம் செய்யப்படுகிறது..
பின்வரும் மந்திரங்களை என்னவென்று சொல்வது!!!
இவ்வுலகில் மஹாதேவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரம் இந்த மந்திரங்களில் உள்ளது.
வாழ்நாளில் பல தடவை இதைச்சொல்லி பரம பதம் / விஷ்ணு லோகம் அடைவோமாக..
அதிக்ரூரமான கலிபுருஷனால் ஆட்கொள்ளப்பட்ட நாம், அதை விட பன்மடங்கு பெரிய, கரிய, பலமான தேகத்தை உடைய, கல்பத்தை முடிவில் அழிக்கும், கால பைரவரை நினைப்போமாக...
அவரை வணங்கி, அவரிடம், நம் பாவங்களை போக்க உத்தரவு பெற்றுக்கொள்வோமாக..
தீய உணவு, தீய பொருள் / லாபம், தீய செயல்கள் இவற்றை விடுவோமாக..
எம் பாபங்கள் தொலைந்து போகட்டும்..
அதற்கு எனக்கு உதவும் இந்த தீர்த்த / நதி கன்னிகைகளை நமஸ்கரிக்கிறேன்...
மூன்று இரவுகள் கங்கைக்கரையில் இருந்த புண்ணியமும்,
யமுனைக்கரையில் (பிருந்தாவனத்தில்) ஐந்து இரவுகள் இருந்த புண்ணியமும், என்னை வந்து அடையட்டும்...
உண்மையில் திரும்பவும் கேட்டுக்கொள்வது, காவேரி நதிக்கரையில், நான் எனது பாவங்களை முற்றிலும் அழிக்கிறேன்...
கங்கே கங்கே (கோவிந்த கோவிந்த) என்று நினைந்து கொண்டு, 108 யோஜனை தூரமுள்ள இந்த தொலைவை கடக்கிறேன்...
( பூமியிலிருந்து, சூரியனது தேவ யோஜனை தொலைவு, சூரியனிலிருந்து அபிஜித் நக்ஷத்திர கூட்டம் (vega) வரை, சூரியனிலிருந்து நம் பால்வெளி அண்டத்தின் (milky way) மத்தியிலுள்ள கறுப்பு கணு (black hole) வரை... )
முக்தி அடைவேன் ஆகுக, எனது எல்லா பாவங்களிலும் இருந்தும்...
விஷ்ணு லோகம் அடைவேன் ஆகுக...
"விஷ்ணு லோகம் சகச்சதி, விஷ்ணு லோகம் சகச்சதி, விஷ்ணு லோகம் சகச்சதி...."
என்று பல முறை சொல்லி ஸ்னானம் செய்யவும்..
பின்னர் 1008 முறை (108 ஆவது ), பிராயச்சித்தமாக, காயத்ரி ஜபம் செய்வது விதிக்கப்பட்டுள்ளது..
5) மஹா சங்கல்ப ஸ்னானம் ஏன் ?
அதிக்ரூரமான கலிபுருஷனால் ஆட்கொள்ளப்பட்ட நாம், மகா சங்கல்பத்தால், முக்திப்பாதையை நோக்கி திருப்பப்படுவோம்..
இந்த பிரபஞ்சத்தை ஸ்ருஷ்டி செய்து, ஆளுபவன் யார், அவன் எங்கிருக்கிறான்?, இந்த பூமி அவன் கட்டுப்பாட்டில் எப்படி இருக்கிறது?, நாம் அவன் ஆளுகையில் இருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டு, நாம் செய்த பாவங்களை நினைத்து, பிராயச்சித்தம் செய்து, பரமேஸ்வரனின்/ஸ்ரீஹரியின் அருளால், கால பைரவரின் அருளால், புண்ணிய தீர்த்த ஸ்னான பலன் பெற்று, இந்த பாவக்கடலை கடந்து, புண்ணிய கங்கையையும் கோவிந்தனையும் நினைந்து,
விஷ்ணு லோகம் அடைவோம்!!
6) காமோகர்ஷீத் மன்யுஆகர்ஷீத் ஜபம் என்பது ஏன்?
காமமும், மனோகல்பிதமும் (மனுவின் சுழற்சியும்) நம்மை ஆட்கொள்ளும் பொழுது செய்யும் பாவச்செயல்களை விடுகிறேன் என்று சங்கல்பம் செய்து, அதையே 1008/108 முறை தியானித்து, பாவத்திலிருந்து முக்தி பெற இது விதிக்கப்பட்டுள்ளது...
7) பிராயச்சித்த காயத்ரி ஜபம் ஏன் ?
நாம் இம்மூன்று உலகங்களை (பூ, புவ, சுவர்க்க) ஆளுபவன் யார் (ஸ்ரீஹரி/மஹாதேவன்) என்று தினமும் நினைக்க வேண்டும்..
அவனுடைய தேவர் குழாம், நம்மை அப்போது சூழும்.
அவனுடைய ஆதித்ய தேவனும், நம் அஞ்ஞானத்தை விலக்கி,
தேஜோமயமான ஞானத்தை நமக்களிப்பான்..
இதை செய்யாமல் விட்டுவிடும் பொழுது, பாவங்களில், அஞ்ஞானத்தில் மாட்டிக்கொள்கிறோம்..
வருடமொருமுறையாவது, நம்மை நாம் புதுப்பித்து கொள்ள, உபாகர்மா - பிரம்ம யஃஞம், மஹாசங்கல்பம், காமோகர்ஷீத் மன்யுஆகர்ஷீத் ஜபம், பிராயச்சித்த சஹஸ்ர காயத்ரி ஜபம் உதவுகிறது.
தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்
(தொடரும்)
http://brahminrituals.blogspot.com/2018/07/what-is-avani-avittam-or.html
http://bharathavamsavali.blogspot.com/2022/06/blog-post.html
http://bharathavamsavali.blogspot.com/2022/06/life-and-nature-basic-and.html
http://bharathavamsavali.blogspot.com/2021/10/blog-post.html
http://bharathavamsavali.blogspot.com/2021/08/blog-post.html
http://bharathavamsavali.blogspot.com/2020/01/sahasra-yojana-teshaam-sahasra-yojane.html
No comments:
Post a Comment