இன்று குரு பௌர்ணமி..
வந்தே குரு பரம்பராம்..
வள்ளலார் போன்றவர் ஜோதியாக மாறினார்கள் என்று சொல்லப்படுகிறதே ?
வள்ளலார் நாம் காணும் குடாகாச (elliptical space) வெளியில் தன் உடலை காரண சரீரத்தை கலந்தார்.
ஜீவர்கள், அவர்தம்மை தம் சிதாகாச (soul space ) வெளியில் சூக்ஷ்ம ரூபமாக காணலாம்.
ஜீவ சமாதி,
பெரும்பாலும்,
புருஷ + ப்ரக்ருதி சம்பந்தமும், பிரிவும் (உயிர்நிலை கடவு அல்லது கடத்தல் / கூடு பாய்தல்) எங்கு இயல்பாக நடத்தமுடியுமோ, பல தடவைகள் காரணத்துடன் வெளி சென்று / உட்புகும் வழியை ஏற்படுத்துவதற்காக ஏற்பட்டதே ஆகும்!!
சமாதி கோயில் உருவாக்க முறை வேறுபாடுகள் மூலம் (ஸ்தூல, சூக்ஷ்ம, யந்திர / பீஜ, ஜீவ) உயர்ந்தது தாழ்ந்தது உண்டா ? பலாபலன்கள் மாறுமா ?
முதலில் குரு தேவர், சமாதி நிலை காண்பதும், அவரது காரண சரீரம் தான் வந்த வேலையை செய்து முடிப்பதும், உயர்வு / தாழ்வுக்கு அப்பாற்பட்டது.
ஒரு வீட்டில் இருக்கும் எல்லா அறைகளும் வாழ்வதற்கு முக்கியம் என்பதுபோல சமாதி கோயில் வேறுபாடுகள், தன் தேவ கட்டளையை விட வேறொன்றறியாத குரு தேவரின் மனப்போக்கையே விவரிக்கிறது.
ஸ்ரீருத்ரத்திலிருந்து,
ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே ம்ருத்யுர் மே பாஹி (ஸ்ரீ ருத்ரம்)
ஒரு மீட்பர்/பானு தெரிந்தால்,
வாமதேவம், நீலம் / கருப்பு (விஷ்ணு / சசிசேகரன்)
அகோரம், குங்குமம் அல்லது காவி சிவப்பு (லட்சுமி / சாகம்பரி)
இவ்வுலக சமூக தளத்தில் அல்லது ஆகமங்களால் பரிந்துரைக்கப்பட்ட,
வாமதேவம், குங்குமம் அல்லது காவி சிவப்பு (காளி)
அகோரம், நீலம் / கருப்பு (காலன்)
ஆகமங்களால், வாமதேவன் சிருஷ்டி மூலமாகவும், அகோரமாகவும் வந்து நம் அறியாமையை நீக்குகிறான். சைவப் பிராமணர்கள் (பொதுவாக துவைத மரபினர் - வைஷ்ணவர்கள் போன்ற எண்ணிலடங்கா ஏக இறை கொள்கை கொண்டோர் - monotheist ) சிவனை இந்த உலகிற்கு லிங்கோத்பவமாக கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அவர்கள் சிவனுக்கு/இறைக்கு பிரசாதம் வழங்காமல் பித்ருக்களுக்கு சாதம் வழங்குவதில்லை.
சிவன் (இறைவன்) இங்கே இருக்கிறாரா அல்லது இங்கே வருகிறாரா என்ற கேள்விக்கு பதில் காண செய்யும் தவம் இது!!
ஆனால், ஸ்மார்த்த பிராமணர்கள் (என்னைப் போன்றவர்கள், pure monist ) வாமதேவனை நீலக் கருப்பாகவும் (விஷ்ணு அல்லது சசிசேகரன்) அகோரம் சிவப்பு/காவி (லட்சுமி/சாகம்பரி) என்றும் பார்க்கிறார்கள். பூமியைக் காப்பாற்ற முடியாவிட்டால், நமக்கு ஒரு காப்புத் திட்டம் தேவை. எனவே, அனைத்து உயிருள்ள ஆத்மாக்களையும், உடலற்ற ஆத்மாக்களையும் கூட சிவன்/விஷ்ணுவின் பக்கம் இழுக்க முயற்சிக்கிறோம் (மற்ற கட்டுரைகளைப் படியுங்கள்). முதலில் சிவனுக்குப் படைக்காமல் பித்ருக்களுக்கு அன்னம் அளிக்கிறோம். அவர்களை உணவுடன் (அன்னமயம் முதல் ஆனந்தமய கோசங்கள் வரை) கட்டி, அனைவரையும் அபிஜித்/வேகாவுக்கும், பின்னர் சிவன்/விஷ்ணு/இறைவன் பரிமளிக்கும் / வசிக்கும் விண்மீன் மையத்துக்கும் செலுத்தி கட்டிவைப்பதே எங்கள் திட்டம்.
சைவப்பிராமணர்கள் (பொதுவாக துவைத மரபினர், monotheist) எங்களை ஆதரிக்கிறார்கள், நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். இல்லையென்றால், இந்த உலகம் பயன் படாது போம்!!!
ஆன்மாவை சிவனுடனும் (இருண்ட திட்டம்), சிவத்தை (வெள்ளை திட்டம்) ஜீவாத்மா உடனும் இணைக்கும் yin மற்றும் yang போல நாம் செயல்படுவதால், நமது லிங்கங்கள் வேறுபட்டவை மற்றும் நோக்கங்கள் வேறுபட்டவை.
நடைமுறைகள் வேறு, ஆனால் விளைவு ஒன்றுதான்!!
https://www.vallalar.org/English/VORG000000015B
"In 1874, he locked himself in a room (still in existence) in Mettukuppam (hamlet of Karunguli), which he used for samadhi or majestic meditation, and instructed his disciples not to open it for some time. He was never seen thereafter and the room is still found locked. It is considered by those who still believe in him, that he was miraculously created one with his God and that in fullness of time he would reappear to the faithful...."
https://bharathavamsavali.blogspot.com/2021/09/why-smartha-brahmins-dont-touch-agama.html
No comments:
Post a Comment