Saturday, June 11, 2022

உயிரும் ப்ரக்ருதியும் - அடிப்படை மற்றும் மேலாம் உண்மை!! - Life and Nature - Basic and Eternal/Complex Reality !! (ப்ரஹ்மச்சாரியும், வானப்ரஸ்தனும் எதை செய்கிறார்கள்?)


ப்ரஹ்மச்சாரியும், வானப்ரஸ்தனும் எதை செய்கிறார்கள்?
உயிர் நிலையின் மூல உண்மையையும், பரிமாணத்தையும், ஆழத்தையும்,
மனித சஞ்சாரமற்ற இடத்தில தற்கால மனிதர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்!!
தனிமையில், கானகத்தில், இயற்கை எவ்வாறு உயிரோடும் வேயப்பட்டுள்ளது என்று காணலாம்!!!
மனித கூட்டத்தில் இது அரிதினும் அரிது!!!
ப்ரஹ்மச்சாரியும், வானப்ரஸ்தனும் செய்வது இதையே!!!
ஹரி ஓம்

कायेन वाचा मनसेंद्रियैर्वा

बुध्यात्मना वा प्रकृतेः स्वभावात् ।

करोमि यद्यत् सकलं परस्मै

नारायणायेति समर्पयामि ॥

kāyena vācā manaseṃdriyairvā

budhyātmanā vā prakṛteḥ svabhāvāt .

karomi yadyat sakalaṃ parasmai

nārāyaṇāyeti samarpayāmi.. 


காயேன வாசா மனசா இந்திரியைர்வா,

புத்தியாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்,

கரோமி யத்யத் சகலம் பரஸ்மை,

நாராயணாயேதி ஸமர்ப்பயாமி 

நான் உடல், பேச்சு, மனம் அல்லது புலன் உறுப்புகள் மூலம் எதைச் செய்தாலும், எனது தனிப்பட்ட அறிவால் அல்லது இயற்கையான குணத்தால், நான் அனைத்தையும் சரணடைந்து, அந்த உன்னதமான தெய்வீக நாராயணனிடம் சமர்ப்பிக்கிறேன்.


இதற்கு மேலுமொரு விளக்கத்தை அறிவியல் பூர்வமாக கூறலாம்..

நான் உடல், பேச்சு, மனம் அல்லது புலன் உறுப்புகள் மூலம் எதைச் செய்தாலும்,

 எனது தனிப்பட்ட அறிவால்,

அது,

இயற்கையின் அமைப்பால்,

 அது,

 இயற்கையின் மாறும் தன்மையிலான அசேதன பொருளை நோக்கியே செல்கிறது.

சேதன உயிரான ஸ்ரீஹரி / மூல உயிரை நோக்கி செல்வதில்லை..

மாறாக,

இதிலிருந்து விடுபட்டு, நான் எதை செய்தாலும் அதை ஸ்ரீஹரி / மூல உயிரை நோக்கி செய்கிறேன். அந்த உன்னதமான தெய்வீக நாராயணனிடம் சமர்ப்பிக்கிறேன்.

ஏன்?......

புலனுறுப்புகள் எல்லாம் (மனதையும் புத்தியையும் சேர்த்து), அறிவியல் பூர்வமாக (maximum entropy) உச்சபட்ச பொருள் / சக்தி மாற்றத்தை நோக்கி உருவாக்கப்பட்டுள்ளன. இதை மாற்ற முடியாது!!

ஆன்மா அப்படி அல்ல..

உயிரானது உயிர்நிலை நோக்கியே செல்கிறது.. (consciousness seeks consciousness)

மூல உயிரான (supreme/universal consciouness) ஸ்ரீஹரியை ( holy father / holy ghost ) நோக்கி புலனுறுப்புகள் எல்லாம் (மனதையும் புத்தியையும் சேர்த்து) திருப்பப்படும் போது,

நாளடைவில் அது பரம ஆத்மாவின் கட்டுப்பாட்டில் (universal consciouness) வந்து விடுகிறது.. 

குருமுகமாக நாம் வேத விஞ்ஞானத்தை அடையும்  பொழுது இந்த மாற்றத்தை காணாமல், பழைய குருநாதர்கள்!!! ஆத்ம வித்யை முறைகளை போதிப்பதில்லை!!!

ஏனெனில் அது பெரும்பாலும் அசுர சக்திகளை வளர்க்க பயன்படுகிறது!!!!


ஆனால் ஒருவனது / ஒருத்தியுடைய உடல், பேச்சு, மனது, பஞ்ச கர்மேந்திரியங்களும் / ஞானேந்திரியங்களும், புத்தியும், இதனால் கட்டப்பட்ட ஆத்மாவும் இந்திரிய மயக்கத்திலிருந்து விடுபட்டு எந்நேரமும் ஸ்ரீஹரியை (மூல உயிர்) நினைக்க பழக்கப்பட்டுவிட்டால், பின்னர் ஆத்ம வித்தை சுலபத்தில் கைகூடுகிறது..

இதற்கு சிறுவயதில் ஆரம்பித்தால் பல வருடங்கள் பிடிக்கிறது!!

வயதான பின்பு கடினம் தான்!!!


ஆனால் நாம் கூறுவது படத்திலிருக்கும் ஸ்ரீஹரியை அல்ல, படத்துக்குள் இருக்கும் ஸ்ரீஹரியை!!!


Reality starts when symbolism ends or symbolism is complete or has done its purpose!!!


இப்போது பின்வரும் வரிகளை கவனியுங்கள்!!

ஓம் பூர்ணமதঃ பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே ||


ஓம், அது முழுமை, இது முழுமை, முழுமையிலிருந்து முழுமை வருகிறது.
முழுமையை முழுமையிலிருந்து நீக்கிவிட்டால், முழுமை மட்டுமே எஞ்சும்.

முதல் வரி உயிர் நிலையின் மூல உண்மையையும், பரிமாணத்தையும், ஆழத்தையும் சொல்கிறது..
மனித சஞ்சாரமற்ற இடத்தில இதை தற்கால மனிதர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்..
தனிமையில், கானகத்தில், இயற்கை எவ்வாறு உயிரோடும் வேயப்பட்டுள்ளது என்று காணலாம்!!!
மனித கூட்டத்தில் இது அரிதினும் அரிது!!!

ப்ரஹ்மச்சாரியும், வானப்ரஸ்தனும் செய்வது இதையே!!!

அடுத்த வரி, ஸத் சித் ஆனந்தம் பற்றியது.. matter, energy, blissful soul space / consciousness பற்றியது.. 

திடப்பொருள் அழிவதில்லை, சக்தி அழிவதில்லை.. நவீன விஞ்ஞானம் இங்கே நின்று விடுகிறது!!
ஆனால் வேத விஞ்ஞானம் முன் செல்கிறது..
அப்படியே, உயிர் அழிவதில்லை!!

மூன்றும், மாறும் தன்மை கொள்ளும் போதும் (ப்ரக்ருதி மூலமாகவோ / இந்திரிய மயக்கம் மூலமாகவோ ), அதை நாம் அழிவதாக கொள்கிறோம்..
இது கற்பிதம்..

ப்ரஹ்மச்சாரியும், வானப்ரஸ்தனும் செய்வது இதையே!!!

கற்பிதம் அழிய வேண்டும் என்றால், மனித கூட்டத்திலிருந்து (eternal party ) விலக வேண்டும்..

"சம்சார சக்ராதி விசித்ராபிஹி புனஹ் புனஹ அநேகதா ஜனித்வா" - பிராயச்சித்த மந்திரம் 

சம்சார சக்ரத்தில், இந்த விசித்திரமான சுழலும் ஓட்டத்தில், திரும்பவும் திரும்பவும் பலமுறை பிறக்கும் நான்!!!

நவீன உலகில் பொய்யான குருமார்களும் / சிஷ்யர்களும் பெருகுவது இதனாலேயே!!

இதன்பின், பேருண்மை நவிலப்படுகிறது. எடுத்துக்கொள்வதும் விட்டுவிடுவதும் மனித இயல்பு!!!

न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः ।
परेण नाकं निहितं गुहायां विभ्राजते तद्यतयो विशन्ति ॥
na karmaṇā na prajayā dhanena tyāgenaike amṛtatvamānaśuḥ .
pareṇa nākaṃ nihitaṃ guhāyāṃ vibhrājate tadyatayo viśanti ..

Not by work, nor by progeny or by wealth, but by renunciation alone have some attained immortality. That (immortality) which is even beyond the heaven, is attained by the self-controlled reununciates (as the Self) shining in their heart.

கர்மத்தினால் அல்ல, மனித உறவினால் அல்ல, செல்வத்தினால் அல்ல, தியாகத்தினால் / தியாகத்தினால் மட்டும் அமிர்தத்வத்தை அடைகிறோம்!!

மேலுலகங்களுக்கும் அப்பாற்பட்ட அந்த அம்ருதம் (அழியாத தன்மை), தங்கள் இதயத்தில் பிரகாசிக்கும் நித்ய உயிரை மட்டுமே நோக்கும், தன்னடக்கமான (ஆத்மாவில் ஒடுங்கும், focused on Holy Ghost inside) மறுபரிசீலனையாளர்களால் (introspection focused) (மட்டுமே) அடையப்படுகிறது!!



விஷ்ணு லோகம் ச கச்சதி!!

யாவரும் விஷ்ணு லோகம் அடைவார்களாகுக!!

ஸ்ரீஹரி காப்பாற்றுவராக. 

தத்வமஸி

சிவோஹம்.

ஹரி ஓம்



தொடரும்....










No comments: