Saturday, June 4, 2022

சந்திர நட்சித்திர (ஆதித்ய) ஆரம் மற்றும் சந்திர ஆதித்ய ஆரம் அதற்கு நேரெதிரான சந்திர தைத்திய விகிதம் தொடர்பு (திதி) என்பதென்ன - பாகம் 1?

 



சந்திர நட்சித்திர (ஆதித்ய) ஆரம் பற்றி புரிந்து கொள்ளும் முன் எப்போதும் சந்திர தைத்திய விகிதம் பற்றியும் அதன் தற்கால நிலை பற்றியும் தெரிந்து கொள்ளுதல் அவசியம்!!

இவ்வுலகில் பிறந்தோர் மூவுலக சுழற்சியிலிருந்து தப்பிச்செல்ல சந்திர திதி - சந்திர தைத்ய (அதற்கு நேரெதிரான சந்திர ஆதித்ய ஆரம் - arc /cycle ) உருவாக்கப்பட்டது அல்லது சமன்செய்யப்பட்டது என்று எழுதியிருந்தோம்.

சாக்த சம்பிரதாயத்தில் எப்படி இந்த சந்திர ஆதித்ய ஆரத்தை நம் ஆன்ம முன்னேற்றத்துக்கு உபயோகிப்பது என்று வழிமுறை ஆக்கப்பட்டுள்ளது.




வரி வசியா ரகசியம் போன்ற நூல்களில் பாஸ்கர ராயர் முதலானோர் இதை விளக்கி உள்ளார்கள். தற்கால கலி முற்றிய நாட்களில் இதை சரிவர செய்ய தகுந்த குருமார்கள் கிடைப்பது அரிதினும் அரிது.

இதற்காகவே சான்றோர் மற்றும் ஞானியர் பலர், யாவரும் பயன் அடையும் வகையில் இந்த சந்திர ஆதித்ய (தைத்ய) ஆரத்தை தொடும் வகையில் பௌர்ணமி  பூஜை முறைகளையும், த்ரிசதி பாராயணமும், செறிவூட்டப்பட்ட ஆனால் திருத்தப்பட்ட வாமாச்சார முறைகளை - பாலுடன் தேன் மற்றும் இஞ்சி கலந்த நைவேத்தியம் (மற்றும் அமாவாசையில் தேவர்களாக / யோகிகளாக வாழும் பித்ருக்களுக்கு தேவாதாபிய என்று தொடங்கும் மந்திரத்தில் நித்ய ப்ராயச்சித்தமும் ) வழிமுறை படுத்தி உள்ளனர்.

 சந்திர தைத்ய ஆரம் (மூவுலக பந்தமும் / ஜென்ம மற்றும் பூர்வ ஜென்ம வாசனையால்) கடப்பதற்கு அரிதானது...




ஆனால் குருவருள் இங்கே துணை நிற்கும், நாம் இந்த வேத விஞ்ஞானத்தை ஆழ்ந்து படித்தால் பிரயோகித்தால்..

வயிற்று பிழைப்புக்கான விஞ்ஞானத்தை விழுந்து விழுந்து படிக்கிறோம்.

வேத விஞ்ஞானத்தை நாம் (என்னையும் சேர்த்து) ஆழ்ந்து படிப்பதில்லை. வந்த வேலையை விட்டுவிட்டு வேறேதோ செய்கிறோம்..

சில நேரங்களில் பிறப்பின் தளைகளால் (கலி முற்றிய நாட்களில்) எவ்வளவு முயன்றும் சந்திர தைத்ய ஆரம் நம்மை அழுத்தும் இடத்து, நம்மை சந்திர நட்சித்திர (ஆதித்ய) ஆரம் வேறொரு வகையில் காப்பாற்றுகிறது.

எப்படி அது செயல்படுகிறது? அதை எப்படி பிரயோகிப்பது ?

தொடரும்..

தத்வமஸி



சந்திர தைத்திய விகிதம்

http://bharathavamsavali.blogspot.com/2022/04/blog-post.html

https://bharathavamsavali.blogspot.com/2021/07/mathematicalspatial-proportions-for.html 

https://www.aanmeegam.in/deities/tithi-nitya-devi/

http://jothidaulagam.blogspot.com/2014/10/thithi-nithya.html

https://earthsky.org/moon-phases/full-moon/

No comments: