Friday, June 3, 2022

ப்ராஹ்மணம் ஸ்வயம்புவம் - ப்ராஹ்மணன், ப்ரஹ்மம் தான்தோன்றியே!!


 

ப்ரஹ்மத்தை மட்டுமே அடையப்பிறந்த ப்ராஹ்மணன் ( த்விஜன்மா, இருபிறப்பாளன், ஜாதி பேதமற்று), குருமுகமாக மூன்று உலகங்களை கடக்கும் காயத்ரியை ஏற்றுக்கொள்கிறான்.

இளவயதில், சூர்யமண்டலத்தை நோக்கி ஆரம்பித்த அவன் ஞானவேள்வி கைகூட, அதே ஜென்மத்திலோ பல ஜென்மங்களிலோ (ñāna vihīnaḥ sarvamatena bhajati na muktiṃ janma śatena - பஜ கோவிந்தம் ), சூர்ய தேவனை பின்னர் ஹிரண்யகர்பரை (பிரத்யக்ஷ பிரம்மா) பின்னர் சகுண மற்றும் நிர்விகல்ப ப்ரஹ்மமான ஈஸ்வரனை காண்கிறான். ஈஸ்வரானுகிரஹத்தினால் ப்ரஹ்மமாக மாறிவிடுகிறான்...
இந்த படிகளில் எந்நிலையில் இருந்தாலும், படிகளில் இருந்து இறங்கிச்செல்லாமல் இருந்தால், என்றோ ஒருநாள் (ஜென்ம வாசனை அற்ற நிலையில்) குருவானவரை சூக்ஷ்ம ரூபமாக கண்டு கொள்ளும் நிலையை அடைவோம்... அடைவோமாக...
அத்வைத சித்தாந்தம் மட்டுமல்லாமல், த்வைத சித்தாந்தத்திலும், த்ரிபுடி என்று மூன்று உலகங்களை கடக்கும் வழியை குறிக்கிறார்கள்.
"மானஸம் மனுஷ்ய பந்தனம், மோக்ஷ காரணம் - மனதே மனிதனை கட்டும் கயிறு, மோக்ஷ சாதனமும் அதுவாம்"
மற்ற கீழான ஏழு உலகங்களும் (குருமுகமாக இல்லாமல்) யாருக்கும் தேவையற்றது!!
தேவ புண்ய உலகங்களை தொட, மூன்றுலக வாசனை அறுபட வேண்டும்!!
காயத்ரி அதன் முதற்படி, முக்கியமான படி.. ஏனெனில் தேவர்களை காண அவர்தம் அளித்த வழி அதுவே....

ஸ்ரீஹரி காப்பாற்றுவராக. 

சிவோஹம்.

ஹரி ஓம்

🙏







ஸ்ரீஹரி காப்பாற்றுவராக. 

சிவோஹம்.

ஹரி ஓம்

🙏

No comments: