Thursday, December 29, 2022

மார்கழித்திங்கள் - பகுதி 2, Month of Margazhi - Part 2






அகஸ்திய முனிவர் இந்தியாவில், ஹிந்து மதத்தில் மிகவும் மதிக்கப்படுகிறார்.. வேத தொகுப்புகளில் பல (ரிக் வேதம்)  இவரை தொகுப்பாளராக குறிக்கிறது.

மேற்கத்திய நாட்டுப்புறக் கதைகள் அல்லது வரலாற்றுக் குறிப்புகளில் King Augustus / அகஸ்டஸ் மற்றும் St. Augustine பற்றிய குறிப்பும் இருக்கிறது. 
இவை, பெரும்பாலும் 2000 ஆண்டுக்கு உட்பட்டது.
அதற்கு முன்னரும் இருந்திருக்க வேண்டும்... தரவுகள் கிடைக்கவில்லை..

அகஸ்திய முனிவர் தெற்கு திக்கில் வந்து சேர்ந்தார் என்று கூறப்படுவது,

1) சிவ பார்வதி ஐக்கியம் உயிர்களை வட திசையில் சேர்த்தது. தேவர்களும், முனிவர்களும், மக்களும் வட திசையில் குழுமும் நிலை ஏற்பட்டது. பூமியை சமன் செய்ய புறப்பட்டார்.
இது கண்டங்கள் பிரிவதையும், உயிர்கள், மனிதர்கள் வட திசை நோக்கி செல்வதையும் குறித்து, சில தேவ உயிர்கள் சமன் படுத்தும் பொருட்டு தென் திசையில் தங்கி விட நேரும் என்றும் குறிக்கலாம். 

2) பூமியின் அச்சு மாறி, பூமியிலிருந்து பார்க்கும் பொழுது, சில நக்ஷத்திர கூட்டங்கள் தெற்கில் காண கிடைக்கும் என்றும் குறிக்கலாம். (augustus constellation in zodiac)

3) சிவ பார்வதி ஐக்கியம் ஆருத்திரா நாளில் (மிக குளிர்ந்த நாள், தன்மதி நாள், வாமே பாகே தய ஆர்த்ரா - இட பாகத்தில் தயையினால் குளிர்ந்த ஹைமவதி உடனுறை சிவபெருமான்) நடந்ததாக கொள்ளுமிடத்து, அகஸ்திய முனிவர் தெற்கு திக்கில் வந்தது மார்கழியில் என்றும் குறிக்கலாம்.

4) ஆருத்திரா பௌர்ணமி, சந்திரனின் ஒளி வெளிப்பாதை நமக்கு மஹ முதல் ஸத்ய லோகம் (வ்யாஹ்ருதி) வரையிலான உயிர் வழிப்பாதையை காட்ட, நம்மை அதனில் சேர்க்க உதவுகிறது!!!

அகத்தியமும், தொல்காப்பியமும் இதனை குறிக்கின்றன.

வேத வரிகளும் இதை குறிக்கின்றன.

சிலவற்றை மட்டும் காண்போம்...

சிக்ஷாவல்லியிலிருந்து,
"நான்காவது வ்யாஹரிதி (உலகம்) மஹ அல்லது மஹர், ப்ரஹ்மமே,மஹர் ப்ரஹ்மத்தின் உடலே, மற்ற தெய்வங்கள் அதன் கைகால்களை போன்றன!!"
"மஹர் ஆதித்யன் தானே !!"
"சகல உலகங்களும் அந்த ஆதித்யன் தன்னால் வளர்க்கப்படுகின்றன!!"

தொகுப்பாக,

"மஹா/மஹர் (உலகம்) என்பது சந்திரன். உண்மையில், சந்திரனால்தான் அனைத்து உயிர்களும் செழித்து வளர்கின்றன."

"மஹா/மஹர் (உலகம்)  என்பது ப்ரஹ்மமே (ஓம் என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது)." 

"சந்திரனால் (மார்கழி ஆருத்ரா பௌர்ணமி நாளில்) அல்லது மஹர் உலகத்தால் (ப்ரஹ்மமே உருவாய் உள்ள உலகம்) உண்மையில் வேதங்கள் செழித்து வளர்கின்றன."

(தொடரும்)



Verses 1 (Shikshavalli):

"bhūrbhuvaḥ suvariti vā etāstisro vyāhṛtayaḥ

tāsāmuhasmai tāṃ caturthīm , māhācamasyaḥ pravedayate 

maha iti , tadbrahma , sa ātmā , aṅgānyanyā devatāḥ 

bhūriti vā ayaṃ lokaḥ, bhuva ityantarikṣam 

suvarityasau lokaḥ 

maha ityādityaḥ, ādityena vāva sarveloka mahīyante.."


"Bhuh, Bhuvah, Suvah are three short worlds / vyahrithis of mystical significance. In addition to these, there is of course the fourth one, Mahah, made known by seer Mahacamasya. 

That is Brahman. 

This Mahah is (compared to) body; other Gods are its limbs."


"Bhuh is this world. Bhuvah is the sky. Suvah is the next world. 

Mahah is the sun (all pervading brahmic force and not the terrestrial sun which we see)."


"It is by the sun that all worlds are nourished."


Verses 2 (Shikshavalli):


"bhūriti vā agniḥ , bhuva iti vāyuḥ , Suvarityādityaḥ,"


"maha iti candramāḥ ,"


"candramasā vāva,

sarvāṇi jyotīṣi mahīyante , bhūriti vā ṛcaḥ ,"


"bhuva iti sāmāni ,

suvariti yajūṣi ,

maha iti brahma , brahmaṇā vāva sarvevedā mahīyante.."


"Bhuh is fire, Bhuvah is air, Suvah is the sun,"


"Mahah is the moon. Indeed, it is by the moon that all vitalities thrive."


"Bhuh is the Rk, Bhuvah is the Saman, Suvah is the Yajus, Mahah is the Brahman (as represented by the syllable Om). It is by the Brahman indeed that the Vedas thrive."


Summarizing,


"Mahah is the moon. Indeed, it is by the moon that all vitalities thrive, 

Mahah is the Brahman(as represented by the syllable Om). It is by the Moon (Margazhi Arudra Pournami) or Mahah(Brahman) indeed that the Vedas thrive."


English Translation

Sage Agastya is highly revered in Hinduism in India. Many of the Vedic anthologies (Rig Veda) refer to him as the compiler of many hymns.

In Western folklore or historical references, King Augustus / Augustus or Saint Augustine is referred. 
These are mostly under 2000 years from now (A.D period).
It must have been before that... But, data not available..

Sage Agastya is said to have arrived in Southern India by mythology,

1) Shiva Parvati marriage or union moves lives to North direction. Devas, sages and people were stationed in the northern direction. But, he sets out to level the earth.
This may refer to the separation of the continents and the movement of beings and humans towards the north, while some divine beings may stay in the south to balance.

2) Earth's axis changes and may also mean that certain constellations are visible in the south as seen from Earth. (Augustus constellation in zodiac)

3) Shiva Parvati union took place on Aruthra day (a very cold day, Moon clad day, "Vame bhake daya Arthra" - Lord Shiva is cooled by Haimavati in the left side symbolically), and it may also indicate that Sage Agastya came in the southern direction in Margazhi month.

4) During Aruthira Poornami, the moon's light path helps to show us the path of life towards Maha to Satya Loka (Vyahruti) and places us in its path/ spiritual cycles !!!

Agathiya and Tolkapiyam indicate this.

Vedic lines also indicate this.

Let's see just a few…

From Sikshavalli,
"The fourth Vyahariti (world) is Maha or Mahar, O Brahma, Mahar is the body of Brahma, and the other gods are its limbs!!"
"Mahar Adityan himself!!"
"All worlds are nurtured by that Aditya himself!!"

To summarize,

"Maha/mahar (world) is the moon. In fact, it is from the moon that all life thrives."

"The Maha/Mahar (world) is Brahman Himself (represented by the letter Om)."

"By the Moon (on the full moon day of Margazhi Arudra) or by the Mahar world (the world in which Brahman is embodied) the Vedas actually flourish."

(To be continued)



References:

https://www.mayiliragu.com/2020/01/sheekshavalli-lyrics-with-meanings.html

http://www.vedarahasya.net/siksha.htm


1.165 to 1.191 in the Sanskrit text Rigveda

https://plato.stanford.edu/entries/augustine/

https://en.wikipedia.org/wiki/Augustine_of_Hippo


His most famous work, the Confessiones, is unique in the ancient literary tradition but greatly influenced the modern tradition of autobiography; it is an intriguing piece of philosophy from a first-person perspective. Because of his importance for the philosophical tradition of the Middle Ages he is often listed as the first medieval philosopher.

https://en.wikipedia.org/wiki/Manichaeism

https://penelope.uchicago.edu/~grout/encyclopaedia_romana/romanurbs/horologium.html

https://www.khanacademy.org/humanities/ap-art-history/ancient-mediterranean-ap/ap-ancient-rome/a/augustus-of-primaporta

https://en.wikipedia.org/wiki/Augustus

https://en.wikipedia.org/wiki/Western_astrology

https://en.wikipedia.org/wiki/Capricorn_(astrology)

https://fathom.lib.uchicago.edu/1/777777122543/

Octavian becomes Augustus

cameoTurning back to the Astronomica now, we can see a similar ideological and political use of heavenly influence in its dedication to Octavian, who by the time of Manilius' writing was known as Caesar Augustus and fully established in power. Manilius explicitly portrays the imperial rule of Augustus as cosmically ordained by the same fate that rules the motions of the stars in the heavens and governs every aspect of human life on earth. Here is how Manilius addresses the emperor in his opening lines: "You, Caesar, princeps and father of the fatherland," (this latter title had been officially conferred on Augustus by the Roman senate in 2 BCE) "you who rule the globe that obeys your august laws," (you get the pun on "Augustus"), "you yourself a god, you who merit the universe that was granted to your father, inspire my mind and give me the poetic strength to sing so great a subject, for at this time the universe itself is favorably disposed toward those who peer into its secrets; the universe itself is eager to lay open the inventory of its heavenly riches through the power of poetry."


Thursday, December 22, 2022

மார்கழித்திங்கள் - பகுதி 1, Month of Margazhi - Part 1

 




பூமத்திய ரேகைக்கு கீழே பெரும்பாலான மனித இனம், உயிரினம் வாழ்ந்த காலம் ஒன்று உண்டு..
கண்டங்கள் உடைந்து இன்றைய ஏழு கண்டங்களின் நிலைக்கு இவ்வுலகம் வந்த பின்னர் பெரும்பாலான உயிர்கள் பூமத்திய ரேகைக்கு மேலே வட பகுதியில் தான் வாழ்கின்றன..

ஏன் இப்படி?

பூமியின் அச்சு சற்றே சரிந்த நிலையில் இருப்பதாலேயே, பூமியின் சூரிய சுழற்சியில் படிநிலை மாறுதல் ஏற்பட்டு, இவ்வுலகில் பருவங்கள் உருவாகின. இவ்வுலகில் உயிரினம் நிலைபெற்று, மனித இனம் மிருக நிலையிலிருந்து சமுதாய உயிராக, ஆறாம் அறிவுக்கிற்கு மேற்பட்ட பரிணாமங்கள் பெற முடிந்தது.

பூமியின் அச்சு ஒரே நிலையில் இருந்ததில்லை. சில பெரிய, பல சிறிய மாறுதலுக்கு உட்பட்டே அது இருக்கிறது...

அந்த மாறுதல்கள் பூமியின் உயிர் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன. 

இந்த நிலை இல்லாத காலம் ஒன்று இருந்தது. இந்த நிலை மாறும் காலம் ஒன்று வரும். இதில் நவீன அறிவியலுக்கு எந்த கருத்து மாறுபாடும் இல்லை.

நிற்க..

வேத முதல்வன் கட்டளையின் படி, தேவர்கள் இந்த உலகை ஆளும் வரையிலும், பூமியின் உயிர் வாழ்க்கைக்கு உறுதுணையாக, மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்று ப்ரஹ்மாவின் நிலையை அடைய சூழ்நிலைகள் (பூமியின் அச்சு நிலை, வட திசை கவிழ - தென் திசை ஏற, சூரிய சந்திர தொலைவு விகிதம் {108} போன்றவை) சாதகமாக இருக்கும்..

சூரிய நாளின் (solar day) இரவு, உயிர்களுக்கு, மனிதர்களுக்கு தாயெனில்,
பூமியின் சூரிய சுழற்சி வருடத்தில், உயிர்களுக்கு, மனிதர்களுக்கு தாயாக நிற்பது மார்கழி மாதமும் (ஆருத்திரா/குளிர்ச்சி , வைகுண்ட ஏகாதசி உட்பட) அதன் சமன்பாடும் தான்..

"Amongst the hymns in the Samaveda know me to be the Brihatsama; amongst poetic meters I am the Gayatri. Of the twelve months of the Hindu calendar I am Margsheersh, and of seasons I am spring, which brings forth flowers."
Bhagavad Gita 10:35


There was a time when most human beings and creatures lived below the equator.
After the breakup of the continents and the formation of today's seven continents, most life lived in the northern region above the equator.

Why is this significant?

Due to the slight tilt of the Earth's axis, there was a phase shift in the Earth's solar cycle and the seasons were formed on this planet. In this world, the organism has settled down, and the human race has evolved from an animal state to a social life, beyond the sixth sense.

Earth's axis has never been in the same position. It is subject to some major, many minor changes…

Those changes have supported life on Earth.

There was a time when this was not the case. There will come a time when this situation will change. In this there is no difference of opinion to modern science.

Now..

According to the Vedic traditions (as per Vishnu's order), as long as the gods rule this world, the conditions (axial position of the earth, north declination - south ascension, solar lunar distance ratio, etc.) will be favorable for the human race to evolve and reach the state of Brahma, to support life on earth.

If the night of the solar day is the mother of life and human beings,
In Earth's solar cycle (solar year or simply terrestrial year), the month of Margazhi (including Aruthira / Chillness of Divine Love, Vaikunda Ekadasi) and its equalizer effect (winter solstice) are the mother of life and human beings.





தொடரும் 

https://en.wikipedia.org/wiki/Earth%27s_orbit

https://www.speakingtree.in/blog/chandogya-upnisad-brihat-sama

Brihat Sama is ordained to be viewed as world activity as per of movement of sun across the horizon.

Saturday, November 5, 2022

சிவபோக அமுதம் சாத்தியமா ? இறவா நிலைபெற்று அமுதாலயம் பதவி சாத்தியமா ?



திருப்புகழ் காண்போம்.....


சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி

     சிவபோக மன்பருக ...... அறியாமற்

  

தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு

     தயவாய்ம கிழ்ந்துதினம் ...... விளையாடத்

 

உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட

     முறைநாய கங்கவுரி ...... சிவகாமி

 

ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை

     யொருநாள்ப கிர்ந்தவுமை ...... யருள்பாலா

 

அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு

     மமுதால யம்பதவி ...... யருள்வோனே..




எவனொருவன் சிவஞானத்தை அறிய மட்டுமே செயல் மேற்கொண்டு, பூவைப்போன்ற 

தன் பர இச்சையை, பர கிரியைகளை, பர ஞானத்தை தன் ஆத்மாவுடன் சேர்க்கிறானோ,

அவன்,

இப்பேருலகில், புண்டரீகனான பெருமாளைப்போல், அவன் மருகனான முருகனைப்போல் (ஸுப்ரஹ்மண்யன்),

ஒளிரும் யானையான இடகலை தேவனின் கையில் இருக்கும் அமுதமாகிய (108 முத்துகளை கொண்ட மாது + உளம் + கனி ) பேற்றை ஒரு நாள்,

சிவகாமியின் அருளால் பகிர்வான்!!!


இவ்வுலகில் கிருஹஸ்தர்களுக்கு மேற்பட்ட யோக வாழ்க்கை அருளப்படுகிறது..


மற்றையோர்க்கு, அப்படிப்பட்ட சிவஞான புண்டரீகர்களின் இடத்தில், அன்பர்களுக்கு அருளப்படும் அமுதமும், இறவா நிலையும், அமுதாலயம் பதவியும் அருளப்படுகிறது..











ஹரி ஓம். தத்வமஸி. ஸதாசிவோம்.

 


Thursday, October 27, 2022

சஷ்டி அப்த பூர்த்தி (60), சதாபிஷேகம் (108) / ஸஹஸ்ர பூர்ண சந்திரோதயம் (80.9) / ஸஹஸ்ர பூர்ண சந்திர தர்சனம் போன்றவை ஏன் ?

 


தேவதைகளாக, ரிஷிகளாக வாழ்ந்த முன்னோர்கள் (பித்ருக்கள்), மேல் உலகங்களில் / வ்யாஹ்ருதிகளில் / மனோநிலைகளில் / ஆத்ம நிலைகளில் (dimension ) வாழ்கிறார்கள் (மஹ, தப, ஜன, ஸத்ய) என்பது நம்பிக்கை. 

எவரொருவர் தனக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களை (ஸம்ஸ்காரங்கள் உட்பட) சரிவர செய்கிறாரோ, அவர்கள் முன்னோர்கள் / தேவர்கள் / தேவநாதன் அருளால் மேல் வ்யாஹ்ருதிகளை அடைவார்கள் என்பதும் நம்பிக்கை..

இது இந்த யுகத்தில் சாத்தியமா?

சாத்தியமே..

ஸம்ஸ்காரங்கள் பலவற்றை தவற விட்டவர்கள் என்ன செய்யலாம்?

முக்கியமான சௌர்ய / சந்திர சேர்க்கைகளின் ( சஷ்டி அப்த பூர்த்தி (60), ஸஹஸ்ர பூர்ண சந்திரோதயம் (80.9), சதாபிஷேகம் (108) ) போது, தகுந்த வைதீகமான / தெய்வீகமான செய்கைகளின் மூலம், தவற விட்டதை சரி செய்து, ஸம்பூர்ண/பரிபூர்ண/தகுந்த பலன் அடைய ஏதுவாகும்.

இந்த பிராயச்சித்த ஸம்ஸ்காரங்கள் எதையும் செய்ய தேவையில்லை.. செய்ய மாட்டேன் என்று கதை கட்டும் ஒரு பழக்கம் பெருகி வரக்காணலாம்..

அதற்கு ஏதேதோ மட்டித்தனமான காரணங்கள் எல்லோராலும் சொல்லப்படுகின்றன.

இந்த பிராயச்சித்தம் செய்வதே, வந்த வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்பதால் தான்..

ப்ராயச்சித்தமும் செய்ய மாட்டேன் என்று சொன்னால், பல அநுபவப்பூர்வமான பலன்களை இழக்க வேண்டி வரும்..

அவரவர் (பிராயச்சித்தம் செய்யாதவர்), தான் செய்யாமல் விட்ட ஸம்ஸ்காரங்கள் எல்லாவற்றையும் வரிசையாக எழுதிவைத்து பின் யோசிக்கலாம்..










Monday, October 24, 2022

தீபாவளியும், கீதையும்... தீபாவளி ஏன் கொண்டாட வேண்டும்?



மஹாஸ்வாமி சொல்கிறார்... நம் தலைமுறையின் வேத விஞ்ஞானி அவர்..


"யோசித்து பார்த்ததில் தீபாவளியும், கீதையும் ஒன்றே!! என்று தோன்றியது. இதற்கு பிரமாணம் என்ன என்று கேட்டால், எழுதப்பட்ட சாஸ்திர பிரமாணத்தை காட்டிலும், தர்க்க ரீதியான பிரமாணம் அதை விட முக்கியம்.."


சிந்திப்போம்...


யுத்த களத்தில் தர்மத்தை காக்க முடியாத நிலை ஏற்படும் பொழுது, ஸ்ரீ கிருஷ்ணனின் (கிருஷ்ண த்வைபாயன  வ்யாசரால் எழுதப்பட்ட நூல்) கீதை அருளப்பட்டது..


கீதையை அறிவது கடினம்.. வாழ்க்கையின் முற்பகுதியிலேயே ( மனது இலகுவாக இருக்கும் பொழுது ) ஆரம்பித்தல் நலம்..


கீதையின் சூத்திரங்கள், ஒவ்வொருவருக்கும் வேறு வேறு..


ஒரு மனிதனின் ஆயுளில் அது ஊறி, ஒரு சூத்திரத்தில் அவன் நிலை பெரும் பொழுது, கீதை அவனை சென்றடைகிறது..


இதற்கு தேடல் அவசியமாகிறது. லௌகீக வாழ்க்கையில் அது எளிதில் எல்லாருக்கும் வந்து சேர்வதில்லை!!!


தீபாவளி அப்படி அல்ல!!


வேறு ஒரு யுத்த களம்.. அதில் ஒரு வைரி தன் மகனாக இருக்கிறான்.


பேரறிவும் ஆற்றலும் கொண்ட தந்தை, தனது சக்தியாகவும், தர்மபத்னியாகவும் இருக்கும் போர்க்குணம் கொண்ட திருமகளை, தூண்டி விட்டு நரகனை கொல்கிறார் / கொள்கிறார்..



இறப்பிற்கு முன் அவன் தன்னிலை அடைகிறான். விஷ்ணுவின் மைந்தனாக உருமாறி இந்த வையகம் வாழ போர்க்களத்தில் வழி கேட்கிறான்!!


போர்க்களத்தில் அவனுக்கு ஒரு கீதாம்சம் உபதேசிக்கப்படுகிறது..



நரகன் நாம் ஆவோமோ?

ஸ்ரீஹரி ஆனவர் உரைக்கிறார்....


"எவனுடைய உடல், மனது, ஆத்மா, என்னிடம், அவனுடைய தாயாகிய இந்த பிரபஞ்ச சக்தியுடன் ஒடுங்குகிறதோ, அவன் முக்தனாகிறான். தனது உடல், மனது, ஆத்மா ஆகிய அனைத்தையும், ஒரு யோகியாக மாறி, இவ்வுலக மேன்மைக்கு அர்ப்பணிக்கிறான். எனது 14 வ்யாஹ்ரிதிகளையும் ஆளும் தகுதி அடைகிறான். என் மைந்தனான ப்ரஹ்மாவாகவே மாறி விடுகிறான்!!.


வத்ஸா, இதுகாறும் கொண்ட பூத உடலை விட்டு, தேவ / அமர உடல் பெற்று, எனது தூதனாக எனது உலகங்களில் வாழ்வாய். 


எங்கு என் பெயர் சொல்லப்படுகிறதோ, 

எங்கு என் கீர்த்தி பேசப்படுகிறதோ, 

எங்கு என் மைந்தர்கள் என்னை நினைக்கிறார்களோ, 

எங்கு என்னால் அருளப்பட்ட நல்ல செல்வங்கள் உள்ளனவோ

அங்கு நீ என் தூதனாக செல்வாய்..


தன் நிலை அறியா உயிர்களை என்னிடம் கொண்டு சேர்ப்பாய்..


என் தூதனாக வாழ்பவனை, இந்த பிரபஞ்ச சக்தி (இயற்கை) தொடாது...


உன் முழுமையடையா கர்மத்தை, பல பிறப்புகளை தாண்டி நானே முழுமையாக்குகிறேன்!!


என்னை தொடர்வாய்......

"



ஹரி ஓம். தத்வமஸி. ஸதாசிவோம்.




https://www.holy-bhagavad-gita.org/


Saturday, September 17, 2022

புரட்டாசி ஏன் தமிழ் வழக்கத்தில் விஷ்ணுவிற்கு ஏற்றதாக கொண்டாடப்படுகின்றது?




ஸ்ரீநிவாஸனின் மாயத்தோற்றம் புரட்டாசி மாதத்தில் நடந்ததாக ஒரு நம்பிக்கை. 


அது ஏதெனில், பூர்வ ப்ரோஷ்டபதீ / பூர்வ ப்ரோஷ்டபதம் / பூர்வ ப்ரோஷ்டபத  / பாத்ரபத மாஸம் (பூர்வ ப்ரோஷ்டபதீ நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும் சூர்ய பஞ்சாங்க கணக்கு கொண்ட மாதம் அல்லது திங்கள்), ஒரு மனிதனின் பிறப்பில் ஏழு வ்யாஹ்ருதிகளும் (ஏழு மலைகள் என்றும் கொள்ளலாம்) அவனை ஆட்கொண்டால், அவனே இந்த பூவுலகத்தில் தேவநாதனாக / தெய்வமாக மாறுவான் என்று அறிவிக்கிறது...


ஸ்ரீநிவாஸனின் பிறப்பில், ஒரு ப்ராஹ்மண குடும்பத்தில் அவதரித்தாரா என்ற கேள்வி உண்டு?


ஸ்ரீநிவாச ப்ரவரத்திலிருந்து.....


யஜுர் வேத வம்சாவளியை சேர்ந்தவர்?


பாரத்வாஜ கோத்திரத்தில் (ஆங்கீரஸ, பார்ஹஸ்பத்ய, பாரத்வாஜ ) வந்தவர் ?


பரப்ரஹ்மமான மஹா விஷ்ணு என்ற ஆதிநாராயணன் வழியில் வந்தவர்? 


மகர ராசியில், ஸ்ரவண / திருவோண நக்ஷத்திரத்தில் பிறந்தவர்?


பின்னர், தலையில் அடிபட்டு ரத்த கட்டுடன், ஒருவரும் அவருடன் இருக்கமுடியாதவராக, வகுளா தேவியின்  (வகுளமாளிகை) ஆஸ்ரமத்திற்கு வருகிறார்..


வகுளா தேவியின் ஆஸ்ரமம் (பேரூரு பந்தன மலையில்), 1000 ஆண்டுகளாக காக்கப்பட்டு வந்து, பின்னர் கவனிப்பார் இல்லாமல் அழிக்கப்பட்டு, இன்று மீண்டும் புனர் உத்தாரணம் செய்யப்பட்டு இருக்கிறது!!!


ஸ்ரீநிவாசன், வகுளா தேவியின் கனவில், தானே மகனாக வருகிறேன் என்று வாக்களித்தார்.


அதன்படியே அவரது ஸ்தூல சரீரம் பலமிழந்து, வயோதிகம் அடைந்து, ஊரார் அவரை பித்துப்பிடித்தவர் என்று கருதும் நேரத்தில், தானே பிக்ஷைக்காரனாய் (நாராயணா நாராயணா), பிக்ஷையெடுக்கும் பெருமானாய் வந்தார்...


ஸ்ரீதேவியான மஹாலக்ஷ்மியை தனது பரமகருணையால் இழந்து (ப்ருகு முனிவரின், கலியுகத்தில் தேவபாகம் / ஆஹுதி யாருக்கு என்ற கோபம் மிகுந்த கேள்வியால் ஸ்ரீதேவி சண்டையிட்டு மஹாவிஷ்ணுவை பிரிய நேர்ந்து சப்தகிரி மலைக்குகையில் தவம் இயற்ற நேர்ந்தது!!), இந்த பூவுலகம் வாழ கலியுகம் முடியும்மட்டும் (அல்லது கலிபுருஷன் இந்த உலகத்தை அழிக்கும் மட்டும்!! / இன்னும் ஒரு 15000 வருடங்கள் போதும்)

ஸப்தகிரி மலையில், தவ யோகியாக (போக கல்யாண மூர்த்தியாக) வாழ்கிறேன் என்று வாக்களித்தார்.



ஜோதி ஸ்படிக லிங்கமாக மாறினார்!!

ஸ்ரீதேவியும் அவரது காரண ரூபத்தை ஏற்று ஜோதி ஸ்படிக லிங்கமாக மாறினார்!!


வகுளா தேவியின் ஆஸ்ரமத்திற்கு அவர் வந்து, பின்னர் தேவரும், முனிவரும் அறிய, தானே, மூலப்ரமாணமான வேத முதல்வன் (தேவ ப்ராஹ்மணன் ) என்று உணர்ந்து அறிவித்த மாதம், பாத்ரபத அல்லது புரட்டாசி என்று நம்பப்படுகிறது.


மேலும், அவர் இன்றிருக்கும் ஜோதி ஸ்படிக மூர்த்தியாக உருமாறிய நாள், 

சாந்திரமான ஜ்யேஷ்ட மாத ஸ்வாதி நக்ஷத்திரம் அன்று ஸ்வர்ண கவசம் களைந்து,



அபிதேய அபிஷேகம் வருடாவருடம் நடக்கும்/ஆரம்பிக்கும்   விசாகம், அனுராதா, ஜ்யேஷ்டா நக்ஷத்திரம் உடைய மூன்று நாட்கள்,



ஜ்யேஷ்ட பௌர்ணமி (சாந்திரமான ஜ்யேஷ்ட மாதம் பௌர்ணமி திதி ஜ்யேஷ்டா நக்ஷத்திரம் முடிய) அன்று மறுபடியும் ஸ்வர்ண கவசம் ஏற்று கலிமுடியும் நாள் வரை, 

ஜோதி ஸ்படிக மூர்த்தியாக உருமாறுகிறார்!!!


"கல்யாண அத்புத காத்ராய காமித அர்த்த ப்ரதாயிநே,

ஸ்ரீமத் வேங்கடநாதாய ஸ்ரீநிவாஸாயதே நமஹ"




ஹரி ஓம்

(தொடரும்)


https://dheivathinkural.wordpress.com/2014/10/28/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/

https://virendrabattu.wordpress.com/category/nakshatra/poorva-bhadrapada/

http://ttdseva.in/vakula-devi-temple-peruru/

https://en.wikipedia.org/wiki/Abhideyaka_Abhishekam

Abhdyeka Abhishekam is one such festival which emphasises the incomparahle flory of Lord Srinivasa. The essential purpose of this abhishekam is to protect the Utsava deities - Sri Malayappaswami, Sridevi and Bhudevi from damage which might occur while conducting processions and Tirumanjanam.

As the festival is performed in the month of Jyesta (July) when the star Jyesta is in ascendant, it is also called as Juestabhishekam. This is a three-day festival. After the second bell, Sri Malayappaswami with Sridevi and Bhudevi is brought to the kalyanotsava mantapa in the Sampingi Pradakshina. After the Snapana Tirumanjanam on the first day, Vajrakavacham (armour studded with daimonds) is adorned to the deities and they are taken out in procession along the temple streets. On the second day after snapana Tirumanjanam, the deities dressed up with the Muthyala kavcham (the coat of pearls), are taken out in procession with all praphernalia. the deities are splendidly adroned with svarna kavacham (the armour of gold) on the third day. Throughout the year, the utsavamurtis put on the resplendent Svarna kavacham to the delight of the devotees.

https://www.facebook.com/bhagavanknl/posts/1149463005392462/


Friday, August 5, 2022

ஸ்மார்த்த பிராமணீயம், தமிழ் சித்தாந்த சைவம் - பல ஒற்றுமைகளும், சில வேறுபாடுகளும்

 


"வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க"

- மேற்கண்ட விளக்கத்தை கொடுத்த சேக்கிழார், வடமொழி வேதத்தையும், தமிழ் சைவத்தையும், அதன் ஒப்புமைகளையும் காணவில்லையா?

"வானவன் காண் வானவர்க்கும் மேலானான் காண்

வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்

ஆனவன் காண் ஆனைந்தும் ஆடினான் காண் ஐயன்

காண் கையில் அனல்  ஏந்தியாடும்

       கானவன் காண் கானவனுக்கு அருள் செய்தான்...."

- அப்பர் திருத்தாண்டகம் 


"நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்"

"மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த"

"நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்"

"ஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே"

"துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி"

"கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று
சொல் ஆக சொல்லியவா தோன்றும்தோன்றும் சூழ் அரவும் மான் மறியும் தோன்றும்தோன்றும்"
"நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி தோன்றும் நயனம் தோன்றும்"
"ஆரானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை அரு மறையால் நான்முகனும் மாலும் போற்றும்"
"மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண்
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண்"
"ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை
பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_கோனும்
தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும்"
"மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை"
"நன்று அருளி தீது அகற்றும் நம்பிரான் காண் நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண்"
"மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி"
"பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே"
"நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே"
"பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே"
"கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே"
"நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு"
"நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற"
"நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா"
"ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உறைகின்றாரே"
"நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன"
"நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த"
"பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண்
மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே"
"மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே"
"மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம்"
"நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும்"
"நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள்"
" உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி"
"கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல்"
"வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே"
"பேரானை மணி ஆரம் மார்பினானை பிஞ்ஞகனை தெய்வ நான்மறைகள் பூண்ட, தேரானை "
"சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட"
"மாயவனை மறையவனை மறையோர்-தங்கள் மந்திரனை தந்திரனை வளராநின்ற, தீ அவனை "
"நல் தவனை நான்மறைகள் ஆயினானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றும்"
"வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும்"
"விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி"
"நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக"
"மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம்
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே"
"இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்"
"நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய்"
"பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும்"
"பொறையவன் காண் பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண் நண்ணிய புண்டரீக போதில்
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும்
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே"


அப்பருக்கு வேதம், தமிழ் சித்தாந்த சைவம் புரியவில்லையா?

வாரியார் ஸ்வாமிகள் வரை எல்லோரும் ஒரு பிரமையை கொண்டாடினார்களா?


என்னே அறிவீனம் ?

ஒரு த்வைத மதத்தில் (தமிழ் சித்தாந்த சைவம் எனக்கொள்வோம்), சிவனை, தனி ஆன்மாவில் இருந்து, தனி கடவுளாக தீர்மானிக்கும் முறை கொண்டது மற்றும் "சிவன் எனும் ஆத்ம/ஜீவ/சீவ ரூபமாக ஒரு பொருள் / ஒரே பொருள் உளது" என்று பகர்கின்ற தூய உணர்வு (தூய மோனிசம்/pure monism) என்ற அத்வைத /அறிவியல் கோட்பாடு ஆகிய இரண்டையும்,

 ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக மட்டுமே பார்க்க முடியும்..

 ஒப்பிட முடியாது.. 

 தத்துவத்தை புரிந்து கொள்ளாத பலர் இன்று இந்த ஒப்பிடுகளை, தத்துவ அறிவில்லாமல், மக்களை குழப்ப, செய்கிறார்கள்!!! 

அர்த்தமுள்ள ஒப்பீடுகளைச் செய்யுங்கள்!!


மக்கள் முட்டாள் அல்லர்!!


சாதாரண மக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, சிவனிடம் பூசை செய்து தனக்கு வரம் வாங்கித்தரும் பூசாரியையும்,

தானே சிவமாகி நின்ற மறை ஞானியையும் 

பார்த்து கொண்டே தான் இருக்கிறார்கள்..


மூடர்களுக்குத்தான் புரிவதில்லை!!!


அமெரிக்காவிலிருந்து - ஜப்பான், ரஷ்யா முதல் ஆஸ்திரேலியா வரை 1008 வகையான சிவன் கோவில்கள் உள்ளன..


விழித்து கொள்ளுங்கள்!!!!


https://www.youtube.com/watch?v=ZWU3fnmEpiI


https://vaaramorupathigam.wordpress.com/vaaramorupathigam/6th-thirumurai/6-87-vaanvan-kaan-vaanavarukkum/

http://tamilconcordance.in/TVRM-APP3-1B.html

Wednesday, August 3, 2022

திருவள்ளுவர் சமணரா / ஹிந்துவா ?

 






Reference - K.A. Nilkantha Sastry, ‘A History of South India – Fourth Edition’

தூய வேத ஸம்ப்ரதாயங்களில் சில மட்டுமே இறைவனை இருக்கிறாரா / இல்லையா என கேள்வி கேட்க அனுமதிக்கும்!!


வேத த்வைத ஸம்ப்ரதாயங்களில் இதற்கு அனுமதி இல்லை..



மற்றவை உருவான விதம், அதன் நோக்கங்கள் இதை அனுமதிக்காது. அனுமதிக்கக்கூடாது..

இதன் காரணம், வேத நெறி தழைத்தோங்க வேண்டும் என்பதே.. துறைகளான த்வைத ஸம்ப்ரதாயங்கள் இதை அனுமதியாது.


ஆனால் அத்வைத சித்தாந்தம், உத்தர மீமாம்சம், யோகம், சாங்க்யம், நியாயம் முதலிய பல ஸம்ப்ரதாயங்களில் (ஹிந்து ஸம்ப்ரதாயங்கள்), இறைவனை இருக்கிறாரா / இல்லையா என கேள்வி கேட்க அனுமதிக்கும்!!


இதிலிருந்து பார்க்கும்பொழுது திருவள்ளுவர் எவ்வளவு முறை ஹிந்து கருத்துகளை பேசினாலும், அவர் மேற்கண்ட ஒரு சம்பிரதாயத்தை சேர்ந்தவராகவோ 

அல்லது 

இறைவனை, வேதம் சொல்லும் விதத்தில் இல்லை என்று மறுக்கும் பிரிவை (பெரும்பாலும் அவர் எழுத்தால், அந்த காலத்தால் சமணம் / ஜெயின் ) சேர்ந்தவராகவோ இருக்கலாம் என்றே அனுமானிக்கமுடிகிறது..


"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய்வருத்த கூலி தரும்" - அவரது சமண தத்துவ அறிவு, தெளிவு அல்லது அத்வைத சித்தாந்தம் ( உத்தர மீமாம்சம், யோகம், சாங்க்யம், நியாயம்) பற்றிய பார்வை இங்கு விளங்குகிறது.


இறைவனை இருக்கிறாரா / இல்லையா என கேள்வி கேட்க அனுமதிக்கும் ஒரு ஸித்தாந்தவாதி மட்டுமே இவ்வளவு பளீரென்று எழுத முடியும்!!


மறந்து விடாதீர்கள்.. இவை சூத்திரங்களாக (மந்திரங்களாக என்றும் கூறலாம் ) எழுதப்பட்டவை. குழப்ப எழுதப்பட்டவை அல்ல..


திருவள்ளுவர் ஹிந்துவாகவே இருந்தாலும், எங்கள் பலரைப்போல்!!,

சமண பௌத்த தத்துவங்களை நன்கறிந்தவர். அவற்றில் சிலவற்றையாவது ஏற்றுக்கொண்டவர் என்பது தெரிகிறது..


ஹிந்து சமண பௌத்த தத்துவங்களை ஒரு அவியலாக மாற்றியுள்ளார் என்பது திண்ணம்.

அதனாலேயே ஏலேலசிங்கன் கதை, திருவள்ளுவர் தனது  உடலை பார்சிகளை போல் பறவைகளுக்கு கொடுக்க சொன்னார் என்று அறிவிக்கிறது!!

சமணராகவோ / வைதீகராகவோ / வைஷ்ணவராகவோ தன்னை அறிவிக்கவில்லை..

சமணமும் / வைஷ்ணவமும் பல காலம் ஒட்டி உறவாடியது எல்லோரும் அறிந்ததே!!!

மொத்தத்தில் அவர் ஒரு வைதீக காம்ய மரபை சேர்ந்தவரா என்பது கேள்விக்குறி தான்? இருந்திருக்கலாம்...


மிகுந்த rational பகுத்தறியும் குணம் கொண்டவர் என்பது திண்ணம்.


சைவ சித்தாந்தம் அவரை நாயன்மாராக்கியது..

ஹிந்து அத்வைத சைவம் அவரை ஹிந்து என்கிறது..


ஏனெனில் 60 விழுக்காடு ஹிந்து வேதத்தையும், மீதம் 40 விழுக்காடு, சமணம், பார்சி இயற்கை தத்துவம், இந்திய / தமிழர் வாழ்வியல், காம தத்துவம், சமூக மற்றும் அரசியல்  தத்துவம் என எல்லாவற்றையும் பேசியுள்ளார்..

"If Thiruvalluvar was a person, He should be a Monist Hindu, Agnostic Hindu or a Jain"

திருவள்ளுவர் என்பது ஒருவரா, அல்லது encyclopedia போன்று பலர் சேர்ந்து பல தலைமுறைகள் சேர்ந்து எழுதிய  ஒரு தொகுப்பு நூலா என்பதே பெருங்கேள்வி!!


ஏனெனில் அதன் பொருள் தாயான ஹிந்து வேதம்,

ஒரு தொகுப்பு நூலே..

பலர் பல காலங்களில் எழுதியவற்றின் தொகுப்பு, வியாசரின் விரிப்புக்குப்பின் அது ஒரு தனது தொகுப்பு முழுமையை அடைந்ததாக கொள்ளலாம்..


ஆனால் வேதத்தின் ஆரம்பத்திலிருந்து அந்தம் வரை, இது  

தேவர்கள் / மஹாதேவன் தாமே முன்வந்து பலர் மூலம் (ரிஷிகள்..) கொடுத்த கொடை இது என்றே புகழ்கிறது / புகல்கிறது...


வள்ளுவமும் அப்படிதான்!!


தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்

(தொடரும்)


According to legend, at the point of Valluvar’s death, Elelasingan expressed his intention to place Valluvar's corpse in a golden coffin and place it in a monumental grave.[13] Valluvar, however, politely refused and instead requested Elelasingan to tie his corpse with cords and throw it among the bushes outside the town so that scavenging animals can feed on it.[13][14] Elelasingan obeyed and soon observed that the crows and other animals that fed on his corpse "became beautiful as gold."[13] He soon built a temple on the spot where Valluvar's corpse had lain and instituted worship. It is believed that the present temple of Valluvar at Mylapore is built on the site of this ancient temple.[13]


K.A. Nilkantha Sastry, who has written a book, ‘A History of South India – Fourth Edition’ in 2000, published by Oxford Press. On the controversy, Mr. Sastry wrote that Thiruvalluvar was probably a learned Jain Scholar whose works were similar to those of Manu and Kautilya, but he mentioned that none of Thiruvalluvar’s works in the Thirukkural had any mention about his actual religion or even place of birth.


https://en.wikipedia.org/wiki/Elelasingan

https://en.wikipedia.org/wiki/Tower_of_Silence