"வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க"
- மேற்கண்ட விளக்கத்தை கொடுத்த சேக்கிழார், வடமொழி வேதத்தையும், தமிழ் சைவத்தையும், அதன் ஒப்புமைகளையும் காணவில்லையா?
"வானவன் காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் ஆனைந்தும் ஆடினான் காண் ஐயன்
காண் கையில் அனல் ஏந்தியாடும்
கானவன் காண் கானவனுக்கு அருள் செய்தான்...."
- அப்பர் திருத்தாண்டகம்
"மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த"
"நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி தோன்றும் நயனம் தோன்றும்"
"ஆரானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை அரு மறையால் நான்முகனும் மாலும் போற்றும்"
"மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண்
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண்"
"ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை
பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_கோனும்
தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும்"
"மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை"
"நன்று அருளி தீது அகற்றும் நம்பிரான் காண் நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண்"
"மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி"
"பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே"
"நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே"
"பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே"
"கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே"
"நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு"
"நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற"
"நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா"
"ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உறைகின்றாரே"
"நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன"
"நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த"
"பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண்
மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே"
"மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே"
"மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம்"
"நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும்"
"நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள்"
" உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி"
"கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல்"
"வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே"
"பேரானை மணி ஆரம் மார்பினானை பிஞ்ஞகனை தெய்வ நான்மறைகள் பூண்ட, தேரானை "
"சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட"
"மாயவனை மறையவனை மறையோர்-தங்கள் மந்திரனை தந்திரனை வளராநின்ற, தீ அவனை "
"நல் தவனை நான்மறைகள் ஆயினானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றும்"
"வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும்"
"விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி""நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக"
"மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம்
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே"
"இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்"
"நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய்"
"பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும்"
"பொறையவன் காண் பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண் நண்ணிய புண்டரீக போதில்
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும்
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே"
அப்பருக்கு வேதம், தமிழ் சித்தாந்த சைவம் புரியவில்லையா?
வாரியார் ஸ்வாமிகள் வரை எல்லோரும் ஒரு பிரமையை கொண்டாடினார்களா?
என்னே அறிவீனம் ?
ஒரு த்வைத மதத்தில் (தமிழ் சித்தாந்த சைவம் எனக்கொள்வோம்), சிவனை, தனி ஆன்மாவில் இருந்து, தனி கடவுளாக தீர்மானிக்கும் முறை கொண்டது மற்றும் "சிவன் எனும் ஆத்ம/ஜீவ/சீவ ரூபமாக ஒரு பொருள் / ஒரே பொருள் உளது" என்று பகர்கின்ற தூய உணர்வு (தூய மோனிசம்/pure monism) என்ற அத்வைத /அறிவியல் கோட்பாடு ஆகிய இரண்டையும்,
ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக மட்டுமே பார்க்க முடியும்..
ஒப்பிட முடியாது..
தத்துவத்தை புரிந்து கொள்ளாத பலர் இன்று இந்த ஒப்பிடுகளை, தத்துவ அறிவில்லாமல், மக்களை குழப்ப, செய்கிறார்கள்!!!
அர்த்தமுள்ள ஒப்பீடுகளைச் செய்யுங்கள்!!
மக்கள் முட்டாள் அல்லர்!!
சாதாரண மக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, சிவனிடம் பூசை செய்து தனக்கு வரம் வாங்கித்தரும் பூசாரியையும்,
தானே சிவமாகி நின்ற மறை ஞானியையும்
பார்த்து கொண்டே தான் இருக்கிறார்கள்..
மூடர்களுக்குத்தான் புரிவதில்லை!!!
அமெரிக்காவிலிருந்து - ஜப்பான், ரஷ்யா முதல் ஆஸ்திரேலியா வரை 1008 வகையான சிவன் கோவில்கள் உள்ளன..
விழித்து கொள்ளுங்கள்!!!!
https://www.youtube.com/watch?v=ZWU3fnmEpiI
https://vaaramorupathigam.wordpress.com/vaaramorupathigam/6th-thirumurai/6-87-vaanvan-kaan-vaanavarukkum/
http://tamilconcordance.in/TVRM-APP3-1B.html
No comments:
Post a Comment