Wednesday, August 3, 2022

திருவள்ளுவர் சமணரா / ஹிந்துவா ?

 






Reference - K.A. Nilkantha Sastry, ‘A History of South India – Fourth Edition’

தூய வேத ஸம்ப்ரதாயங்களில் சில மட்டுமே இறைவனை இருக்கிறாரா / இல்லையா என கேள்வி கேட்க அனுமதிக்கும்!!


வேத த்வைத ஸம்ப்ரதாயங்களில் இதற்கு அனுமதி இல்லை..



மற்றவை உருவான விதம், அதன் நோக்கங்கள் இதை அனுமதிக்காது. அனுமதிக்கக்கூடாது..

இதன் காரணம், வேத நெறி தழைத்தோங்க வேண்டும் என்பதே.. துறைகளான த்வைத ஸம்ப்ரதாயங்கள் இதை அனுமதியாது.


ஆனால் அத்வைத சித்தாந்தம், உத்தர மீமாம்சம், யோகம், சாங்க்யம், நியாயம் முதலிய பல ஸம்ப்ரதாயங்களில் (ஹிந்து ஸம்ப்ரதாயங்கள்), இறைவனை இருக்கிறாரா / இல்லையா என கேள்வி கேட்க அனுமதிக்கும்!!


இதிலிருந்து பார்க்கும்பொழுது திருவள்ளுவர் எவ்வளவு முறை ஹிந்து கருத்துகளை பேசினாலும், அவர் மேற்கண்ட ஒரு சம்பிரதாயத்தை சேர்ந்தவராகவோ 

அல்லது 

இறைவனை, வேதம் சொல்லும் விதத்தில் இல்லை என்று மறுக்கும் பிரிவை (பெரும்பாலும் அவர் எழுத்தால், அந்த காலத்தால் சமணம் / ஜெயின் ) சேர்ந்தவராகவோ இருக்கலாம் என்றே அனுமானிக்கமுடிகிறது..


"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய்வருத்த கூலி தரும்" - அவரது சமண தத்துவ அறிவு, தெளிவு அல்லது அத்வைத சித்தாந்தம் ( உத்தர மீமாம்சம், யோகம், சாங்க்யம், நியாயம்) பற்றிய பார்வை இங்கு விளங்குகிறது.


இறைவனை இருக்கிறாரா / இல்லையா என கேள்வி கேட்க அனுமதிக்கும் ஒரு ஸித்தாந்தவாதி மட்டுமே இவ்வளவு பளீரென்று எழுத முடியும்!!


மறந்து விடாதீர்கள்.. இவை சூத்திரங்களாக (மந்திரங்களாக என்றும் கூறலாம் ) எழுதப்பட்டவை. குழப்ப எழுதப்பட்டவை அல்ல..


திருவள்ளுவர் ஹிந்துவாகவே இருந்தாலும், எங்கள் பலரைப்போல்!!,

சமண பௌத்த தத்துவங்களை நன்கறிந்தவர். அவற்றில் சிலவற்றையாவது ஏற்றுக்கொண்டவர் என்பது தெரிகிறது..


ஹிந்து சமண பௌத்த தத்துவங்களை ஒரு அவியலாக மாற்றியுள்ளார் என்பது திண்ணம்.

அதனாலேயே ஏலேலசிங்கன் கதை, திருவள்ளுவர் தனது  உடலை பார்சிகளை போல் பறவைகளுக்கு கொடுக்க சொன்னார் என்று அறிவிக்கிறது!!

சமணராகவோ / வைதீகராகவோ / வைஷ்ணவராகவோ தன்னை அறிவிக்கவில்லை..

சமணமும் / வைஷ்ணவமும் பல காலம் ஒட்டி உறவாடியது எல்லோரும் அறிந்ததே!!!

மொத்தத்தில் அவர் ஒரு வைதீக காம்ய மரபை சேர்ந்தவரா என்பது கேள்விக்குறி தான்? இருந்திருக்கலாம்...


மிகுந்த rational பகுத்தறியும் குணம் கொண்டவர் என்பது திண்ணம்.


சைவ சித்தாந்தம் அவரை நாயன்மாராக்கியது..

ஹிந்து அத்வைத சைவம் அவரை ஹிந்து என்கிறது..


ஏனெனில் 60 விழுக்காடு ஹிந்து வேதத்தையும், மீதம் 40 விழுக்காடு, சமணம், பார்சி இயற்கை தத்துவம், இந்திய / தமிழர் வாழ்வியல், காம தத்துவம், சமூக மற்றும் அரசியல்  தத்துவம் என எல்லாவற்றையும் பேசியுள்ளார்..

"If Thiruvalluvar was a person, He should be a Monist Hindu, Agnostic Hindu or a Jain"

திருவள்ளுவர் என்பது ஒருவரா, அல்லது encyclopedia போன்று பலர் சேர்ந்து பல தலைமுறைகள் சேர்ந்து எழுதிய  ஒரு தொகுப்பு நூலா என்பதே பெருங்கேள்வி!!


ஏனெனில் அதன் பொருள் தாயான ஹிந்து வேதம்,

ஒரு தொகுப்பு நூலே..

பலர் பல காலங்களில் எழுதியவற்றின் தொகுப்பு, வியாசரின் விரிப்புக்குப்பின் அது ஒரு தனது தொகுப்பு முழுமையை அடைந்ததாக கொள்ளலாம்..


ஆனால் வேதத்தின் ஆரம்பத்திலிருந்து அந்தம் வரை, இது  

தேவர்கள் / மஹாதேவன் தாமே முன்வந்து பலர் மூலம் (ரிஷிகள்..) கொடுத்த கொடை இது என்றே புகழ்கிறது / புகல்கிறது...


வள்ளுவமும் அப்படிதான்!!


தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்

(தொடரும்)


According to legend, at the point of Valluvar’s death, Elelasingan expressed his intention to place Valluvar's corpse in a golden coffin and place it in a monumental grave.[13] Valluvar, however, politely refused and instead requested Elelasingan to tie his corpse with cords and throw it among the bushes outside the town so that scavenging animals can feed on it.[13][14] Elelasingan obeyed and soon observed that the crows and other animals that fed on his corpse "became beautiful as gold."[13] He soon built a temple on the spot where Valluvar's corpse had lain and instituted worship. It is believed that the present temple of Valluvar at Mylapore is built on the site of this ancient temple.[13]


K.A. Nilkantha Sastry, who has written a book, ‘A History of South India – Fourth Edition’ in 2000, published by Oxford Press. On the controversy, Mr. Sastry wrote that Thiruvalluvar was probably a learned Jain Scholar whose works were similar to those of Manu and Kautilya, but he mentioned that none of Thiruvalluvar’s works in the Thirukkural had any mention about his actual religion or even place of birth.


https://en.wikipedia.org/wiki/Elelasingan

https://en.wikipedia.org/wiki/Tower_of_Silence


No comments: