வசந்த காலத்தை ஒட்டி வரும் ஈக்வினோக்ஸையே தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுமையும், பல ஆசிய கலாச்சாரங்களும் வருடப்பிறப்பாக கொண்டுள்ளன.
வசந்த காலமே (march/april/may) பூமத்திய ரேகையை ஒட்டிய மழைக்காடுகள் கொண்ட கலாச்சாரங்களில் / தேசங்களில் புது வருடப்பிறப்பாக இருந்திருக்க முடியும். பனி காலத்திலோ, அல்லது ஆஸ்திரேலியாவில் பருவங்கள் மாறுவதால் வெயில் காலத்திலோ இது அமைய வாய்ப்பில்லை.
வசந்த காலத்திலே தான் இந்த மழைக்காடுகள் செழித்து ஆனந்தமான புது உலகை கண்ணிற்கு மனதிற்கு உடலிற்கு காட்டி தரும். இன்றும் அப்படித்தான்.
The two solstices happen in June (20 or 21) and December (21 or 22). ... The equinoxes happen in March (about March 21) and September (about September 23). These are the days when the Sun is exactly above the Equator, which makes day and night of equal length.
வடக்கு ஆசியாவில் ஆகஸ்ட்/செப்டம்பர் மாதத்தில் வரும் மழைக்கால பௌர்ணமியை பெரு வெடிப்பின் ஞாபகமாக (ஆவணி பௌர்ணமி / ஆவணி அவிட்டம் / ரக்ஷா பந்தன் ) வருடப்பிறப்பாக கொண்டாடிய முறை இருந்துள்ளது. ஆனால் இது ஆன்மீகமான காரியங்களை புதுப்பிக்கவும், ஞாபகப்படுத்தவும், பிராயச்சித்தம் செய்யவும், தேவ, ரிஷி, பித்ரு யஃஞம்களை குறை தீர புதுப்பிக்கவும் செய்யப்பட்டது. மாளயம் (15 நாள் பித்ரு பூசை செய்வது), சாதுர் மாஸ்யம் (நான்கு மாத மழைக்கால ஆன்மீக, ஓரிடத்திருந்து தவம் செய்தல் ) என்ற பழக்கமும் இதை ஒட்டியே அமைக்கப்பட்டது.பெரும்பாலும் ஆசியா முழுவதும் இது மழைக்காலம். அதனால் விட்ட பணிகளை முடிக்க இது பயன்பட்டது.
Chinese new year
Before the new year celebration was established, ancient Chinese gathered and celebrated the end of harvest in autumn. However, this was not the Mid-Autumn Festival, during which Chinese gathered with family to worship the moon.
Celebrated on different dates every year, the New Year’s date falls between Jan. 21 and Feb. 21, depending on when the new moon of the first lunar month falls. The 15-day observance is the most important of the traditional Chinese holidays and is known as ‘Spring Festival’.
Australian Aboriginal new year
Yaamma Festival is held since 2005 in Bourke. Yaamma means 'welcome'. The festival focuses on themes of spirit, soul, heart, mind and body (October).
மார்கழி / தை மாதங்களை பல காரணங்களால் ( கீதையில் தானே மார்கழியாக இருக்கிறேன் என்றார் கண்ணன், வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆருத்திரா காலங்கள், தை மாத சங்கிரமணம் / சூரியன் மகர ராசியில் நகர்தல் / வடக்கு நோக்கிய நகர்வை அடைதல் / உலகில் வசந்தமும் பின் வெப்ப காலமும் வருதல் ) முக்கிய படுத்தி இருந்தாலும் அது வருட பிறப்பாக கொள்ளப்படுவதில்லை.
தட்ப வெப்ப நிலை காரணமாக, ஆசியாவில் / இந்தியாவில் / தமிழ்நாட்டில் / மழைக்காடுகள் கொண்ட எல்லா கலாச்சாரங்களிலும் வசந்த காலத்தையே புது வருடமாக கொண்டார்கள். மற்ற நேரங்களின் ஆன்மீக முக்கியத்துவம் மார்கழி / தை / ஆடி / ஆவணி /புரட்டாசி /கார்த்திகை, பல சமய குழுக்கள் / வழி மரபினர் நெறிமுறைகளையும், பண்டிகைகளையும் வைத்தனர் போற்றினர்.
வைதீக முறைகளை பின்பற்றிய ரிஷி மூலமாகிய கோத்திரங்கள் / ரிஷி வழி மரபினர் (school of thought / learning ), இவர்களில் பலர் பிறப்பால் ப்ராஹ்மணர் அல்லர், எனினும் ஆன்மீக / அறிவியல் காரணங்களால் ஆவணி பௌர்ணமியை பிரபஞ்ச பிறப்பு நாளாகவும், உறுதிமொழிகளை / யஃஜ முறைகளை புதுப்பிக்கும் நாளாகவும், தேவ / ரிஷி / பித்ரு பூசை நாளாகவும் வைத்திருந்தனர். ஆனால் புது வருடமாக உலகாயத நோக்கில் கொள்ளவில்லை.
மனித வாழ்க்கை மட்டுமல்லாமல் எல்லா உயிர்களின் / தாவரங்களின் / பாலூட்டிகளின் சொர்க்க காலமாக இருக்கும் வசந்தத்தையே முதல் நாளாக கொண்டனர்.
ஆசியர்கள் / இந்தியர்கள் / பழந்தமிழர்கள் இதை ஏன் சித்திரை 1 என்று கொண்டாடினார் என்பது காலத்தால் சிறிது மாற்றம் கொண்டது (மார்ச்/ஏப்ரல்) என்பது விளங்கும்.
இது புதிய சமூகத்திற்கு புரிய வேண்டும். பழந்தமிழர் முட்டாளில்லை. எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று அறிந்து வைத்திருந்தனர்.
மகர சங்கராந்தியை / தைப்பொங்கலை / தை ஒன்றாம் நாளை, தமிழர் நாள் என்று கூறுவது தவறு ஒன்றும் இல்லை. ஆனால் சமுதாய / மத / உலகாயத / பொருளியல் / அறிவியல் பாற்பட்ட வழக்கத்தை மாற்றுவது தமிழ் மக்களது பண்பாட்டை / வரலாற்றை அழிப்பதே ஆகும்.
புதிதாக சென்ற நூற்றாண்டிலிருந்து, தை ஒன்று தான் தமிழர் வருட பிறப்பு என்று கூறுவது அடிப்படை வரலாற்று உண்மைகளுக்கு முரணானது.
வரலாற்று திரிபு !!!
https://www.britannica.com/story/whats-the-difference-between-a-solstice-and-an-equinox
https://en.wikipedia.org/wiki/Chinese_New_Year#History
https://en.wikipedia.org/wiki/Mid-Autumn_Festival
https://www.wionews.com/edge/january-1-is-not-new-years-day-for-everyone-10865
https://www.creativespirits.info/aboriginalculture/arts/aboriginal-cultural-festivals
https://dewwool.com/difference-between-equinox-and-solstice/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=difference-between-equinox-and-solstice
No comments:
Post a Comment