Thursday, December 23, 2021

ஹிந்து கல்ப கணக்குகள் எதை குறிக்கின்றன ? சில சந்தேகங்களும், தவறுகளும் - ஒரு பார்வை...

 


முக்கியமான சில கால அளவுகள், ஹிந்து வாழ்க்கை முறையில் குறிக்கப்படுகின்றன. அவை ப்ரம்மாவின் ஒரு நாள் மற்றும் ஆயுட்காலம் பற்றியவை..

ப்ரஹ்ம வருடம்  - 3,110,400,000,000 ஆண்டுகள் (சந்தேகத்திற்கு இடமானது / ஆராய வேண்டியது )

மனு வருடம் - 3,067,200 ஆண்டுகள் (சந்தேகத்திற்கு இடமானது / ஆராய வேண்டியது )

தேவ வருடம் - 360 ஆண்டுகள் (சந்தேகத்திற்கு இடமானது / ஆராய வேண்டியது )

பித்ரு வருடம் - 27 / 30 ஆண்டுகள் (ஆராய வேண்டியது )


எப்படி துருவ நட்சத்திரம் 26000/36000 வருடங்களில் மொத்தமாக மாறும் என்பது திண்ணமோ ( அவ்வப்போது நடக்கும் சிறு மாறுதல்கள் தவிர ) அதுபோலவே கல்பம் என்ற ப்ரம்மாவின் நாள் கணக்கு / ஆயுட்காலம், அந்த மண்டலம் அல்லது அந்த மண்டலியை பொறுத்தது!!

நாம் ஒரு யாகத்தை ஆரம்பிக்கும் போது, ஒரு ப்ரஹ்மாவை (விஷ்ணுவின் ஆணைப்படி)  நியமிக்கிறோம்!!! அவர் 2 மணி நேரம் முதல் 4 நாட்கள் வரை அந்த யாக மண்டலத்திற்கு பிரம்மா / பிரஜாபதி / ஞான சூரியனாக இருக்கிறார்.



அது போலவே, இந்த சூரிய மண்டலத்திற்கு, நம் அண்டமான ஆகாய கங்கைக்கும், இந்த பிரபஞ்சத்திற்கும், ஸ்ரீஹரி தனித்தனி ப்ரஹ்மாவை நியமிக்கிறார்!!!

தனித்தனி ப்ரஹ்மாவிற்கு கல்ப காலங்கள் மாறுபடும். கணிக்கும் அளவும் மாறுபடும். எந்த பெரு மண்டலத்தின் ஆளுகைக்கு உட்பட்டது என்றும் கொள்ள வேண்டும்...

நமது சூரிய மண்டலம், 27 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள அபிஜித் (வேகா நட்சத்திர கூட்டம் ) மண்டலத்திற்கு உட்பட்டது!!!

27000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள தப/ஸத்ய உலகங்கள் (மூலம் / ஸ்வாதி அருகில் உள்ளது ) இந்த சூரிய மண்டலத்தின் கூட்டு உலகங்களாக / மேல் உலகங்களாக ( வ்யாஹரிதி ) குறிக்கப்பட்டுள்ளன. இவற்றை நவீன  விஞ்ஞானமும் ஒரு நிலையில் ஏற்கிறது!!

இப்போது இதுபற்றிய வேறொரு கணக்கை பார்ப்போம்.

ஒரு கல்பம் - 4,320,000,000 ஆண்டுகள் ( நமது சூரியனின் காலத்தோடு ஆராய வேண்டியது )

ஒரு மன்வந்திரம் - 306,720,000 ஆண்டுகள் ( நமது சூரியனின் காலத்தோடு ஆராய வேண்டியது )


பிரபஞ்சம் (ஐந்தால் ஆக்கப்பட்டது அல்லது மீண்டும் ஐந்து பூதங்கள் / மூலக்கூறுகள்  )

இப்போது நவீன  அறிவியல் கணக்கை பார்ப்போம்.

பிரபஞ்சம் வயது  - 13-14 பில்லியன் வருடங்கள் 

ஆகாய கங்கை அண்டம் வயது   - 13-14 பில்லியன் வருடங்கள் 

சூரியனின் வயது - 4.6 / 4.32 பில்லியன் வருடங்கள் ( இன்னும் ஒரு 4.6 / 4.32 பில்லியன் வருடங்கள் சூரியன் இருக்கும்!! அதற்கு முன்னரே பூமி உட்பட அனைத்து சூரிய உப கோள்களும் அழிந்து விடும் )

1 கலக்ட்டிக் வருடம் - சூரிய குடும்பம் ஆகாய கங்கை அண்டத்தை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் - 230 மில்லியன் வருடங்கள் 

கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், 3110 பில்லியன் வருடங்கள் நமக்கு தெரியாத வேறொரு கணக்கையோ / தவறையோ தான் குறிக்கும்.

ஏன் / எந்த ப்ரஹ்ம கணக்கு வகையில் தவறு?

ஒரு மன்வந்திரம் அல்லது ஒரு மனு வருடம் - 3 /300  மில்லியன் வருடங்கள் என்றால் அவை புராணங்களை புரட்டி போடும். நாம் பேசும் கிருத / திரேதா / த்வாபர மற்றும் கலியுக காலங்கள் 25000 முதல் 30672 ஆண்டுகளில் முடிந்துவிடும். ஆதலால் அவை 3067/6100/9201/12268 வருடங்களே இருக்க வேண்டும். 
இவற்றை சமப்பகல் இரவு நாட்களின் பிற்போக்கு (axial precession ) கொண்டு நோக்கும் பொழுது (துருவ நட்சித்திர / மனு மாறுதல் ) - 25772 முதல்  36000 வருடங்கள் 

இதை மூலமாக கொண்டால்,
4,32,000 * 10000 = 4,320,000,000 (சூரியனின் வயது)

4,32,000 % 14 = 30857 அல்லது 30672 வருடங்கள் அல்லது 36000 வருடங்கள்

4.6 / 4.32 பில்லியன் வருடங்கள் போக இன்னொரு 4.6 / 4.32 பில்லியன் ஆண்டுகள் மிச்சம் இருப்பதையும் குறிக்கும்!!

10,000 ஏன் என்பதற்கு வருவோம். மனித வாழ்க்கை இவ்வுலகத்தில் 2-4 லட்சம் ஆண்டுகள் தான் நாம் பார்க்கும் நிலையில் இருக்கிறது. அதற்கு முன்னர் ஒரு செல் உயிரிலிருந்து - குரங்கு வரை மட்டுமே காண முடியும்.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது உயிர் கூட்டத்தில் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி மட்டுமல்லாமல், அரிதான கால அளவிலும் கொள்ளப்பட வேண்டும். 
இதை 10000 சுழற்சிகளுக்கு பின், மனித சமூகம் தெய்வ / தேவ கருணையால் / ஆசீர்வாதத்தால் பெற்ற பேறு, ஒரு 4,32,000 ஆண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன என்று கொள்ள வேண்டும். 
அதில் பாதி பகுதி முடிந்து ஏழாவது மன்வந்தரத்தில் (7*30,672) இருக்கிறோம். 

பாதி மன்வந்தரம் (7*30,672) (த்வீதிய பரார்த்தம் என்பது 2,14,704 ஆண்டுகள் மிச்சம் இருப்பதையும் குறிக்கும் இந்த சூரியனின் ஆயுட்காலத்தில் 4.6 பில்லியன் வருடங்கள் மிச்சம் இருப்பதையும் குறிக்கும் )

இப்போது ஹிந்து அல்லது ஆர்யபட்டர் கணக்கு எங்கு நவீன அறிவியலோடு இணைகிறது என்று பார்ப்போம்...

ஒரு கல்பம் - 4,320,000,000 வருடங்கள் 
சூரியனின் வயது - 4.6 / 4,320,000,000 பில்லியன் வருடங்கள் (ஸ்வேத வராஹ கல்பம் ??)

ஒரு மன்வந்திரம் - 306,720,000 வருடங்கள் 
1 கலக்ட்டிக் வருடம் - சூரிய குடும்பம் ஆகாய கங்கை அண்டத்தை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் - 230 மில்லியன் வருடங்கள் ( நமது சூரியனின் காலத்தோடு ஆராய வேண்டியது )

ஒரு மனித கல்பம் - 4,32,000 வருடங்கள் (ஸ்வேத வராஹ கல்பம் ??)
ஒரு புராண மன்வந்திரம் - 30,672 வருடங்கள் 

கிருத / திரேதா / த்வாபர மற்றும் கலியுக காலங்கள் - 3067/6100/9201/12268 வருடங்கள் (30,672 வருடங்கள்)

அல்லது
கிருத / திரேதா / த்வாபர மற்றும் கலியுக காலங்கள் - 3600/7200/10800/14400 வருடங்கள் (36,000 வருடங்கள் )

60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
60 * 60 வருடங்கள் = 3600 வருடங்கள்  = 1/10 புராண மன்வந்திரம்

36000 வருடங்கள் கணக்கையே கொண்டால், 21600 வருடங்கள் கிமு 3000 தில் கடந்ததையும் இன்றைக்கு (+5123) 26723 வருடங்கள் கடந்ததையும் குறிக்கும்.
ஆக, வைவஸ்வத மனுவந்தரம் (புராண மனுவந்தரம்  ) 21000/24000  ஆண்டுகள் முன் தான் ஆரம்பித்தது !!!
இன்னும் 9000/10000/12000/14000 ஆண்டுகள் (த்வீதிய பரார்த்த) இருக்கின்றன.

பாரத வம்சாவளியில் பக்கம் 22 முதல், 4,32,000 மற்றும் 30672, அதை ஒட்டிய சதுர் யுகங்கள் கணக்கையும் பார்க்கலாம்.. புராணக்கதைகளும் அவை நடந்த இடத்தில இருக்கும் தொல்பொருள் ஆய்வு முடிவுகளும் 30672 அல்லது 36000 வருடங்கள் கணக்கையே காட்டும்.

"ஆத்யப்ரஹ்மண: த்விதிய ப்ரார்தே ஸ்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மந்தரே, அஷ்டாவிம்ஸதிதமே, கலியுகே, ப்ரதமே பாதே ஜம்பூத்வீதே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே, .... ஸகாப்தே அஸ்மிந்வர்த்தமானே வ்யவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி: ஸம்வத்ஸராணாம் மத்யே.."...

இன்றிலிருந்து 12000/14000 ஆண்டுகளில் துருவ (அபிஜித்) நட்சத்திரம் பழைய சுழற்சியின் நிலைக்கு வந்து, வேறொரு நட்சித்திரம் ( வேகா அல்லாத ஒன்று) துருவ நட்சத்திரம் ஆக மாறும்..





இங்கிருந்து ஒவ்வொரு  27 வருடங்களில் (பித்ரு வருடம்), ஒளி கீற்றுகள், ஜீவ கணக்கு வழக்கோடு, அபிஜித் சென்று விடும் !!! பெரும்பாலான மனிதர்கள் இந்த காலத்திற்கு பின்தான் திரும்பவும் பிறக்கிறார்கள், தேவ சிருஷ்டிகள் தவிர!!



இங்கிருந்து 27,000 வருடங்களில், ஒளி கீற்றுகள், இந்த சூரிய / ஜீவ மண்டலத்தின் கணக்கு வழக்கோடு, தப / ஸத்ய உலகங்கள் இருக்கும் ஆகாய கங்கையின் / அண்டத்தின் மத்திக்கு (ஹனுமானின் மூல நட்சத்திர கூட்டத்திற்கு / saggitarius radio stellar system) சென்று விடும் !!!

இவற்றை கணித்தால் இந்த 2 * 4.32 பில்லியன் / 8.64 ஆண்டுகள், சூரிய குடும்பத்திற்கு ஒரு ஞான சூரியன் ஆட்சி செலுத்தி நம்மை ஆன்மிகத்தால் ஆள்வார்!!!

இந்த உலகத்தை ஸத்ய உலகமாக அல்லது ஒரு அபிஜித்தை போல், மஹ / ஜன உலகமாக, ஸ்ரீஹரியின் ஆளுகைக்குள் கொண்டு வருவார்.

4,32,000 ஆண்டுகள் மனிதர்கள், இங்கு ஏழு சக்ர நிலைகளுடன் உலாவுவார்கள்.

ஒரு 36,000 ஆண்டுகள், சரியாகச்சொன்னால் இன்னும்  10,000 ஆண்டுகள் மனித வாழ்க்கை, தேவ வாழ்க்கையாக மாற காலம் நிச்சயிக்கப்பட்டது.

காலம் இன்னும் இருக்கிறது!!!

இதை அறிந்து கொண்டு, செலவிட்டால் ( இயற்கையை அழிக்காமல்), நமக்கு ஆன்மீக ஸத்ய உலகம் தென்படும்.



"நமோ ப்ரஹ்மனே, நமோஸ்து அஃனயே, நம ப்ரதிவ்யை, நம ஓஷதீப்யஹ, நமோ வாசே, நமோ வாசஸ்பதயே, நமோ விஷ்ணவே, ப்ரஹதே கரோமி"

- ப்ரஹ்ம யஃன ப்ரார்த்தனை ஸ்லோகம் 

ஹரி ஓம் 



https://en.wikipedia.org/wiki/Hindu_units_of_time

https://en.wikipedia.org/wiki/Galactic_year

https://en.wikipedia.org/wiki/Age_of_the_universe

https://en.wikipedia.org/wiki/Axial_precession

https://socratic.org/questions/what-is-the-lifespan-of-the-earth-compared-to-that-of-the-milky-way-galaxy

Milky Way Galaxy = 13.6 billion years so far + 4 billion before running into Andromeda = 17.6 billion years.

Earth = 4.5 billion years so far + 5 billion before being engulfed by our Sun, turned red giant = 9.5 billion years.

No comments: