இன்று நாம், ஹிந்து சனாதன மதம் / கூட்டமைப்பு என்று எதை சொல்கிறோமோ, அதை தர்க்கத்தால் விளக்கும் வழி ஒன்று உண்டு.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செய்து வந்த பல மத வழிபாட்டு முறைகளை காக்கும் பொருட்டு, அரசியல் மற்றும் ஆன்மீக தலைவர்கள் / மன்னர்கள் ( இன்று தமிழ் ஹிந்து என்று கூறுவோர் போல ) அதை நெறிமுறைப்படுத்தி பலரும் ஏற்றுக்கொள்ள வைத்து, ஒரு மத நெறியை மட்டுமே தூக்கி பிடிக்காமல், ஒரு மத கூட்டமைப்பை ஏற்படுத்தினால் அது நெடுங்காலம் மக்களின் ஆன்மீக பயணத்தையும், அவர்தம் மூத்தோர் / நீத்தார் வழிபாட்டையும் காக்கும் என்று ஹிந்து சனாதன மரபை ஏற்படுத்தியதாகக் கொள்ளலாம்.
200000/40000/15000/5000 ஆண்டுகள் நடந்த கலாச்சார, வாழ்க்கைமுறை, அறிவியல், அரசியல், மதச்சடங்கு மாற்றங்களை ஒருவர் ஒரு கட்டுரையில் எழுதுவது கடினம்.
அதை பல தரப்பட்ட விளக்கங்களால் மட்டுமே குறிக்க முடியும்.
ஹிந்து மதம், சனாதனமானதா என்பதை அறிவு தளத்தில் ஆராய்ந்து முடிவு கண்டுகொள்ளலாம்.
மற்ற (மத, சடங்கு, உணர்ச்சி /உணர்வு ) தளங்களில் குழப்பம் தான் மிஞ்சும் என்று தான் நானும் கருதுகிறேன்.
மேலும் செல்லுமிடத்து,
ஹிந்து மத கூட்டமைப்பு சனாதனமானது.
ஆனால் உள்மதங்கள் பல்வேறு காலங்களில் தோன்றியவை, வளர்ந்தவை. காலக்கணக்கை அவற்றிற்கு இடலாம்..
சமண, பௌத்த மத வரலாற்றை பார்ப்போம்...
பாரம்பரியமாக சமணர்கள் (ஜைனர்கள்) அல்லது ஆசீவகர்கள் (15000 BCE முதல்) சிவபெருமானிடமிருந்தே நமக்கு பொதுவான இறையியலைக் கொண்டுள்ளனர்.
ஹிந்து கர்ம மதம் அல்லது பூர்வ மீமாம்சம் இதிலிருந்து கடுமையாக வேறுபடுகிறது. ஜைனர்கள் நம்முடன் 90% உடன்படும் இடம் ஞான காண்டம் (உத்தர மீமாம்சம்)!!! பௌத்தர்கள் 50% உடன்படுகிறார்கள்.
கோட்பாட்டில் நுட்பமான வேறுபாடுகளுடன் ஏராளமான ஞான மரபுகள் பொதுவானது.
திருக்குறள் பலப்பல சமண கருத்துகளை கொண்டுள்ளது.
இந்திரியங்களை வெறுத்தல், இந்திரியங்களுக்கு ஆட்படுதலை வசைபாடுதல், கர்ம மரபுகளை எதிர்க்கும்போது கடுமையாக எதிர்த்தல், ஞான மரபை தூக்கிப்பிடித்தல் போன்றவை சில.
பௌத்தர்கள் (400 BCE முதல்) சனாதன ஹிந்து மரபை கடுமையாக எதிர்த்தவர்கள்.
ஆனால், அவர்கள் எதிர்ப்பு, மஹாயானத்தில் மற்றும் போதி சத்வரின் (கவுதம புத்தர் ) தர்க்கத்தை பார்த்தால், கர்ம காண்ட எதிர்ப்பாகவே கொள்ள முடியும்.
ஞான காண்டத்தில் ஒற்றுமைகளே இருந்தன, இன்றும் வெளிப்படையாக ஒற்றுமைகளே இருக்கின்றன !!!
கர்ம மரபு அல்லது பூர்வ மீமாம்சம் இந்து மதத்தில் மட்டுமே இருந்தது.
பின்னர், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களை உள்ளடக்கிய இந்து கூட்டமைப்பு உருவான பிறகு, ஜைனர்களும் பௌத்தர்களும் அதை உள்வாங்கினர்.
மேலும், அஹிம்சையும், சைவ உணவு பழக்கமும், ஜைனத்தில் மிகக் கட்டுப்பாடு கொண்ட மரபுகள். ஆரம்பத்தில் சில ஹிந்து மரபுகள் மட்டுமே இவற்றை ஏற்றன / பின்பற்றின.
இப்பொழுதும், எல்லா ஹிந்து மரபுகள் இவற்றை ஏற்கவும் இல்லை!!!
அல்லது சில நேரங்களில் மட்டுமே பின்பற்றுகின்றன.
ஆனால் சில ஹிந்து மத அமைப்புகள் அன்றிலிருந்து இன்றுவரை அதை கடுமையாக பின்பற்றுகின்றன...
இங்கு ஜைனர்களும், பௌத்தர்களும், சில ஹிந்து மதக்கூட்டமைப்பு மதங்களும் ஒன்று சேருகின்றனர்.
சமண அவலோகேதேஸ்வரர்
மஹாயான பௌத்தர்
பண்பாட்டு அடிப்படையிலும், மத அடிப்படையிலும் ஏற்பட்ட திரிபுகளை விலக்கி, திருக்குறளை மரபு மற்றும் மறுமலர்ச்சி இலக்கியமாக பார்க்க வேண்டியுள்ளது.
சாஸ்தா வழிபாடு கொண்ட ஹிந்து கூட்டமைப்பு, சமணத்தையும் / பௌத்தத்தையும் உள்ளே கொண்டு வந்த பொழுது, சைவத்தையும் மற்றும் வாமாச்சாரமான அசைவ உணவு படைத்தலையும், சாஸ்தாவின் வழியாகவும் மற்றும் அவரின் பூதப்படைகளின் தனி வழியாகவும் மாற்றம் கொண்டது.
தமிழ்நாட்டில் எந்த கிராமத்திலும் ஒரே கோயிலில் இரண்டையும் இதை இன்று காணலாம்!!!
சமண மற்றும் பௌத்த மரபுகளை வெறுக்கவோ அல்லது திரிக்கவோ செய்யாமல், மறுமலர்ச்சி அடிப்படையில் இந்த சமூகம் ஆராய முற்பட வேண்டும். அவை இந்த நாட்டின் சிந்தனை மற்றும் ஞான மரபுகள். வேண்டுமானால், விவாதம் செய்யலாம். கொச்சை படுத்துதல், அந்த ஞானிகளுக்கு செய்யும் இழுக்கு.
ஹிந்து மத கூட்டமைப்பு மாறியதா ?
ஹிந்து மத கூட்டமைப்பு மாறிக்கொண்டேதான் இருக்கிறது
இன்றிருக்கும் நிலை மிகக்குழப்பமாக இருப்பதால், இது எப்போது ஏன் ஏற்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இது, இன்று, ஹிந்து எனக்கூறிக்கொள்வோர் (98%) கவனம் செலுத்தாதது ஆனால் செலுத்தவேண்டியது!!
இன்றைய ஹிந்து மத கூட்டமைப்பு நிலை, 5ஆம் நூற்றாண்டில் (குப்தர் காலம் ) பின்னர் 16ஆம் நூற்றாண்டில் (விஜயநகர காலம்) நிலைபெற்றது உண்மை.
இன்று நாம் பார்க்கும் பல கோட்பாடுகள் அன்று ஏற்பட்டவை.
ஆனால் இவற்றின் மூல சடங்கு முறைகள், 10000 முதல் 40000/200000 ஆண்டுகள் பழமையானது.
அவற்றை முற்றும் தள்ளிவிட முடியாது. மாற்றிக்கொள்ளலாம். மாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்!!! அக்னிஹோத்திரம் உட்பட!!
ஹிந்து மத கூட்டமைப்பு இன்றிருக்கும் நிலைக்கு ஏன் வந்தது ?
ஆப்ரஹாமிக் மதங்கள் இங்கு வர ஆரம்பித்ததின் விளைவு!!!
ஆனால் ஹிந்து மதக்கூட்டமைப்பு, தன்னிலை பிறழ வேண்டிய அவசியம் இல்லை.
மஹாஸ்வாமி அவர்களும் இன்றும் அதை விரும்பவில்லை.
சாந்த / ஆன்மீக நெறியாக கூட்டமைப்பாக இருத்தலே நமக்கு நல்லது என்று கூறியுள்ளார்.
அதுவே நமது உயிர் நாடி.
மற்ற மதங்களின் உயிர் நாடி அது அல்லவென்றால் அது அவர்கள் பாடு!!
தர்க்க நிலைகளும், தத்துவ கருத்துகளும், விஞ்ஞான வழிகளும், 7000-15000 ஆண்டுகள் பழைமையானது அல்லது தேவர்கள் என்று நாம் கருதும் வேற்று உலக வாசிகளால் அளிக்கப்பட்டது!!!
https://www.news18.com/news/immersive/kumbh-of-south.html
https://en.wikipedia.org/wiki/Avalokite%C5%9Bvara
https://en.wikipedia.org/wiki/List_of_Tirthankaras
"hinduism and anti conversion" - speech by mahaswami
https://www.mixcloud.com/mahesh/hinduism-and-anti-conversion/
https://www.jeyamohan.in/161837/
No comments:
Post a Comment