Saturday, January 29, 2022

ஆதி தெய்வம் சாஸ்தா - 2 - சமணம், பௌத்தம், வேத ஹிந்து மதங்கள்...

இன்று நாம், ஹிந்து சனாதன மதம் / கூட்டமைப்பு என்று எதை சொல்கிறோமோ, அதை தர்க்கத்தால் விளக்கும் வழி ஒன்று உண்டு.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செய்து வந்த பல மத வழிபாட்டு முறைகளை காக்கும் பொருட்டு, அரசியல் மற்றும் ஆன்மீக தலைவர்கள் / மன்னர்கள் ( இன்று தமிழ் ஹிந்து என்று கூறுவோர் போல ) அதை நெறிமுறைப்படுத்தி பலரும் ஏற்றுக்கொள்ள வைத்து, ஒரு மத நெறியை மட்டுமே தூக்கி பிடிக்காமல், ஒரு மத கூட்டமைப்பை ஏற்படுத்தினால் அது நெடுங்காலம் மக்களின் ஆன்மீக பயணத்தையும், அவர்தம் மூத்தோர் / நீத்தார் வழிபாட்டையும் காக்கும் என்று ஹிந்து சனாதன மரபை ஏற்படுத்தியதாகக் கொள்ளலாம்.




200000/40000/15000/5000 ஆண்டுகள் நடந்த கலாச்சார, வாழ்க்கைமுறை, அறிவியல், அரசியல், மதச்சடங்கு மாற்றங்களை ஒருவர் ஒரு கட்டுரையில் எழுதுவது கடினம்.

அதை பல தரப்பட்ட விளக்கங்களால் மட்டுமே குறிக்க முடியும்.




ஹிந்து மதம், சனாதனமானதா என்பதை அறிவு தளத்தில் ஆராய்ந்து முடிவு கண்டுகொள்ளலாம்.

மற்ற (மத, சடங்கு, உணர்ச்சி /உணர்வு ) தளங்களில் குழப்பம் தான் மிஞ்சும் என்று தான் நானும் கருதுகிறேன்.

மேலும் செல்லுமிடத்து,
ஹிந்து மத கூட்டமைப்பு சனாதனமானது.
ஆனால் உள்மதங்கள் பல்வேறு காலங்களில் தோன்றியவை, வளர்ந்தவை. காலக்கணக்கை அவற்றிற்கு இடலாம்..

சமண, பௌத்த மத வரலாற்றை பார்ப்போம்...

பாரம்பரியமாக சமணர்கள் (ஜைனர்கள்) அல்லது ஆசீவகர்கள் (15000 BCE முதல்) சிவபெருமானிடமிருந்தே நமக்கு பொதுவான இறையியலைக் கொண்டுள்ளனர்.
 
ஹிந்து கர்ம மதம் அல்லது பூர்வ மீமாம்சம் இதிலிருந்து கடுமையாக வேறுபடுகிறது. ஜைனர்கள் நம்முடன் 90% உடன்படும் இடம் ஞான காண்டம் (உத்தர மீமாம்சம்)!!! பௌத்தர்கள் 50% உடன்படுகிறார்கள்.

கோட்பாட்டில் நுட்பமான வேறுபாடுகளுடன் ஏராளமான ஞான மரபுகள் பொதுவானது.

திருக்குறள் பலப்பல சமண கருத்துகளை கொண்டுள்ளது. 

இந்திரியங்களை வெறுத்தல், இந்திரியங்களுக்கு ஆட்படுதலை வசைபாடுதல், கர்ம மரபுகளை எதிர்க்கும்போது கடுமையாக எதிர்த்தல், ஞான மரபை தூக்கிப்பிடித்தல் போன்றவை சில.


சமணத்தை /
திருக்குறளை ஆழ்ந்து படித்து பின்பற்றி பார்த்தால் இது விளங்கும். மேலெழுந்தவாரியாக இது புலப்படாது..


பௌத்தர்கள் (400 BCE முதல்) சனாதன ஹிந்து மரபை கடுமையாக எதிர்த்தவர்கள்.

ஆனால், அவர்கள் எதிர்ப்பு, மஹாயானத்தில் மற்றும் போதி சத்வரின் (கவுதம புத்தர் ) தர்க்கத்தை பார்த்தால், கர்ம காண்ட எதிர்ப்பாகவே கொள்ள முடியும்.




ஞான காண்டத்தில் ஒற்றுமைகளே இருந்தன, இன்றும் வெளிப்படையாக ஒற்றுமைகளே இருக்கின்றன !!!

கர்ம மரபு அல்லது பூர்வ மீமாம்சம் இந்து மதத்தில் மட்டுமே இருந்தது.

பின்னர், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களை உள்ளடக்கிய இந்து கூட்டமைப்பு உருவான பிறகு, ஜைனர்களும் பௌத்தர்களும் அதை உள்வாங்கினர்.

மேலும், அஹிம்சையும், சைவ உணவு பழக்கமும், ஜைனத்தில் மிகக் கட்டுப்பாடு கொண்ட மரபுகள். ஆரம்பத்தில் சில ஹிந்து மரபுகள் மட்டுமே இவற்றை ஏற்றன / பின்பற்றின.

இப்பொழுதும், எல்லா ஹிந்து மரபுகள் இவற்றை ஏற்கவும் இல்லை!!!

அல்லது சில நேரங்களில் மட்டுமே பின்பற்றுகின்றன.

ஆனால் சில ஹிந்து மத அமைப்புகள் அன்றிலிருந்து இன்றுவரை அதை கடுமையாக பின்பற்றுகின்றன...

இங்கு ஜைனர்களும், பௌத்தர்களும், சில ஹிந்து மதக்கூட்டமைப்பு மதங்களும் ஒன்று சேருகின்றனர்.



சமண அவலோகேதேஸ்வரர்


மஹாயான பௌத்தர்


பண்பாட்டு அடிப்படையிலும், மத அடிப்படையிலும் ஏற்பட்ட திரிபுகளை விலக்கி, திருக்குறளை மரபு மற்றும் மறுமலர்ச்சி இலக்கியமாக பார்க்க வேண்டியுள்ளது.

சாஸ்தா வழிபாடு கொண்ட ஹிந்து கூட்டமைப்பு, சமணத்தையும் / பௌத்தத்தையும் உள்ளே கொண்டு வந்த பொழுது, சைவத்தையும் மற்றும் வாமாச்சாரமான அசைவ உணவு படைத்தலையும், சாஸ்தாவின் வழியாகவும் மற்றும் அவரின் பூதப்படைகளின் தனி வழியாகவும் மாற்றம் கொண்டது.

தமிழ்நாட்டில் எந்த கிராமத்திலும் ஒரே கோயிலில் இரண்டையும் இதை இன்று காணலாம்!!!







சமண மற்றும் பௌத்த மரபுகளை வெறுக்கவோ அல்லது திரிக்கவோ செய்யாமல், மறுமலர்ச்சி அடிப்படையில் இந்த சமூகம் ஆராய முற்பட வேண்டும். அவை இந்த நாட்டின் சிந்தனை மற்றும் ஞான மரபுகள். வேண்டுமானால், விவாதம் செய்யலாம். கொச்சை படுத்துதல், அந்த ஞானிகளுக்கு செய்யும் இழுக்கு.

ஹிந்து மத கூட்டமைப்பு மாறியதா ?
ஹிந்து மத கூட்டமைப்பு மாறிக்கொண்டேதான் இருக்கிறது





















இன்றிருக்கும் நிலை மிகக்குழப்பமாக இருப்பதால், இது எப்போது ஏன் ஏற்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
 
இது, இன்று,  ஹிந்து எனக்கூறிக்கொள்வோர் (98%) கவனம் செலுத்தாதது ஆனால் செலுத்தவேண்டியது!!

இன்றைய ஹிந்து மத கூட்டமைப்பு நிலை, 5ஆம் நூற்றாண்டில் (குப்தர் காலம் ) பின்னர் 16ஆம் நூற்றாண்டில் (விஜயநகர காலம்) நிலைபெற்றது உண்மை.

இன்று நாம் பார்க்கும் பல கோட்பாடுகள் அன்று ஏற்பட்டவை.

ஆனால் இவற்றின் மூல சடங்கு முறைகள், 10000 முதல் 40000/200000 ஆண்டுகள் பழமையானது.

அவற்றை முற்றும் தள்ளிவிட முடியாது. மாற்றிக்கொள்ளலாம். மாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்!!! அக்னிஹோத்திரம் உட்பட!!

ஹிந்து மத கூட்டமைப்பு இன்றிருக்கும் நிலைக்கு ஏன் வந்தது ?

ஆப்ரஹாமிக் மதங்கள் இங்கு வர ஆரம்பித்ததின் விளைவு!!!
ஆனால் ஹிந்து மதக்கூட்டமைப்பு, தன்னிலை பிறழ வேண்டிய அவசியம் இல்லை.

மஹாஸ்வாமி அவர்களும் இன்றும் அதை விரும்பவில்லை.

சாந்த / ஆன்மீக நெறியாக கூட்டமைப்பாக இருத்தலே நமக்கு நல்லது என்று கூறியுள்ளார்.
அதுவே நமது உயிர் நாடி.

மற்ற மதங்களின் உயிர் நாடி அது அல்லவென்றால் அது அவர்கள் பாடு!!




தர்க்க நிலைகளும், தத்துவ கருத்துகளும், விஞ்ஞான வழிகளும், 7000-15000 ஆண்டுகள் பழைமையானது அல்லது தேவர்கள் என்று நாம் கருதும் வேற்று உலக வாசிகளால் அளிக்கப்பட்டது!!!






https://www.news18.com/news/immersive/kumbh-of-south.html

 https://en.wikipedia.org/wiki/Avalokite%C5%9Bvara

 https://en.wikipedia.org/wiki/List_of_Tirthankaras

"hinduism and anti conversion" - speech by mahaswami

https://www.mixcloud.com/mahesh/hinduism-and-anti-conversion/

https://www.jeyamohan.in/161837/



Saturday, January 15, 2022

ஆதி தெய்வம் சாஸ்தா - 1

 


மனிதன் 2 லட்சம் ஆண்டுகளாக இந்த உலகில் கூட்டமாக வாழ்கிறான் என்பது அறிவியல் உண்மை. அதற்கு முன்னர் குரங்காக, குரங்கு மனிதனாக அவன் பல லட்சம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கக்கூடும்.
மனித ஸ்வபாவமும் (behavior), இயைந்து வாழ்தலும் கைக்கொண்டபோது, அவனுடைய கோபம் அவனை அழிப்பதை பார்த்தான், குரங்குகள் இன்றும் கூட்டமாக அழிவதற்கு காரணம் கட்டுப்படுத்த முடியாத கோபமே என்று காணலாம். அவ்வழிவை தடுக்க நினைத்த மனித கூட்டங்களில், முக்தனான ஒரு ஜீவன், தண்டித்து கட்டுப்படுத்த ஒரு இயக்க நிலையை (process cycle) உருவாக்கினான் அல்லது உருவாக்கினர், அதுவே தர்ம சாஸ்தா ஆகும்.

 சஸ்திரம் தரித்து ஆள்பவன் / காப்பவன் என்று பொருள் கொள்ளலாம்!!!

உலகெங்கிலும் ஆயுதம் ஏந்திய சாஸ்தா மூர்த்தங்கள் / வழிபாட்டு முறைகள் உள்ளன.
உதாரணமாக, Mount Sastha வட அமெரிக்காவில் உள்ளது. இங்கு செவ்விந்திய பழங்குடியினர் காலத்திலிருந்து இன்று வரை (பல லட்சம் ஆண்டுகள் ) சாஸ்தா வழிபாடு இருக்கிறது. முறைகள் மாறியுள்ளன, இறைவன் அவரே!!




எல்லா பழங்குடி முறைகளிலும் / மதங்களிலும் சாஸ்தா இருக்கிறார் (asian, indian, pacific, maori / australian aboriginal, african, south american / mayan / aztec , red indian / native american, pagan / european, russian )


hawaiian



pacific islands


south american / amazon


polynesian



easter islands


native indian / red indian


pagan


australian aboriginal



egyptian (Ra - sun god)



asian / indian - mohenjadaro



hindu tribal god / community saviour 

ஹிந்து மத கூட்டமைப்பு உருவான சமயத்தில், முரண்பாடுகள் மிகுந்தே இருந்திருக்கும், ஏனெனில், இங்கு சமணமும், வைதீக மற்றும் இனக்குழு (tribal, around 10000 tribes approximately) ஹிந்து மரபுகளோடு ஏற்றும் மறுத்தும் மாற்றம் கொண்டிருக்கின்றன. உதாரணமாக பழைய சமணம் ஹிந்து முறைகளின் பலப்பல  பழக்கங்களை  ஏற்கவில்லை, உயிர் பலி உட்பட.




இன்றைய ஹிந்து மதத்தின் எல்லா அங்கங்களும் சைவ முறைகளோடோ அல்லது ஆன்மீக முறைகளோடு மட்டும் தோன்றவில்லை.
தெய்வத்தின் உண்மை பொருளை பல மாற்றங்களோடு அறிந்து கொண்ட பொழுது, நாம் இன்று காணும் தர்ம சாஸ்தாவும், மணிகண்ட ஸ்வாமியும் வெளிப்படுகின்றனர். 




ஹிந்து மதக்கூட்டமைப்பு, ஆதி தெய்வமான சாஸ்தாவை, ஆப்ரஹாமிய மதங்களைப்போல் (கிருத்துவம், இஸ்லாம், யூதம் ) மறுக்கவும் இல்லை. மாற்றமில்லாமல் ஏற்கவும் இல்லை. மனித வாழ்க்கையின் நாகரிக வளர்ச்சியினோடேயே, சாஸ்தா நம் கண்முன்  மாறிக்கொண்டே வருகிறார். இந்த 2 லட்சம் வருட மாறுதல்களையே புராணங்கள், சாஸ்தாவின் பல அவதாரங்களாக காட்டுகின்றன. பூத நாதனான அவருக்கு பூதப்படையும் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை.

இதுவே ஹிந்து சனாதன தர்மத்தின் அடிப்படை பேரியில்பு.

இன்று நாம், தர்ம சாஸ்தாவையும், ஏனைய பரிவார மூர்த்திகளோடு வணங்கும் போது, இந்த தொடர் ஆன்மீக பயணத்தை நினைவு கூறுகிறோம்.

எவ்வளவு வளர்ந்து விட்ட போதும், தந்தைக்கு தாய்க்கு, குழந்தையாகவே நாம் தெரிவதுபோல், சுரிகை ஏந்தியும், மாமுனியாகவும் ஏக காலத்தில் காட்சி  தருகிறார்.

மேற்கு மதங்கள் சாஸ்தா வழிபாட்டை, சாத்தான் வழிபாடு என்று குறைகூறி, அதன் அறிவியல் பான்மையை மறைக்க முயல்கின்றன.

அறிவியல் /  அறிவியல் பாற்பட்ட மதக்கூட்டமைப்புகள்  ஒவ்வொரு நிலையிலும், முன்நடந்ததை மறைக்கவும் இல்லை, தற்கால வாழ்க்கையை மறுக்கவும் இல்லை.

மேல காணப்பட்ட, ஆயுதம் ஏந்திய, பல பண்டைய மதக்கூட்டமைப்புகள் (red indian, south american, australian aboriginal, european pagan, ethnic african, pacific islander ) அழிக்கப்பட்ட போதும், ஹிந்து சமூகம், அந்த மதங்களின் மூலத்தை தன்னுள் அடக்கிக்கொண்டு, இக்கால வாழ்க்கைக்கு மாற்றி முன் செல்கிறது..

 இதனாலேயே அழிவற்றதாய் சனாதனமாய் இருக்கிறது / இருக்கும்..

அத்வைத வேதாந்தம் இதை பலவாறான ப்ரஹ்ம அல்லது ஜீவ அல்லது உயிர் நிலைகளாய் அறிவிக்கிறது / விளக்குகிறது.

இதுவே தேவ வாழ்க்கையின் அடிப்படை!!!

ஹரி ஓம், தத்வமஸி, சிவோஹம் 

(தொடரும்)



https://en.wikipedia.org/wiki/Mount_Shasta

https://en.wikipedia.org/wiki/List_of_peaks_named_Shasta

https://sacred-texts.com/pac/index.htm