Saturday, January 14, 2023

தை மாதம் 1 - மகர சங்கராந்தி




தை மாதம் 1 - மகர சங்கராந்தி ஒரு வானியல் நிகழ்வு..
சூரியன் எந்த ராசி நிலையில் இருக்கிறான் என்பது நமது வாழ்வை பாதிப்பதாக நம்பினார் முன்னோர்..
விஸ்வாமித்திரர் காலத்திற்கு முன்னர், இங்கு 22 நக்ஷத்திர கூட்டமே இருந்தது.. 
விஸ்வாமித்திரர் காலத்திற்கு பின்னர் இங்கு 27 நக்ஷத்திர முறை மாற்றப்பட்டது..
தனிஷ்டா நக்ஷத்திரங்களையும் சேர்த்து (அவிட்டம் முதல் ரேவதி வரை)
அப்படியெனில், அதற்கு முன்னர் மகரம் கடைசி ராசியாக கணிக்கப்பட்டிருக்கலாம்!!
மகர ரவி, நாம் கணித / வான சாஸ்திர அடிப்படையில், காயத்ரியை அடிப்படையாக கொண்ட அமைப்பாக மாறிய நிகழ்வையும் பிரதிபலிக்கிறது. 


மகர சங்கராந்தி,  மணிகண்ட ஸ்வாமி சித்தியடைந்த நாளும் ஆகும்...

மேலும், மகர அல்லது தை மாதத்தில் பூமி, சூரிய சுழற்சியில் எங்கிருக்கிறது என்று பார்ப்போம்.
மேற்கண்ட படத்திலிருந்து பூமி, சூரியனுக்கு சமதளத்தில் (ஒரு யந்திரமாக பார்த்தால்), கிழக்கில் உள்ளது.
இது பூமியின் அச்சுக்காட்டும் கிழக்கிலிருந்து (celestial east  / east axis path ) வேறானது.

ஆனால், இந்த சூரிய சமதளம் யந்திரம் தான்!!

ஏனெனில், நாம் எந்த ஹோமத்தையும் ஆரம்பிக்கும்போது, பூமியின் / சூரியனின், சமதள கிழக்கையே (not  celestial east  ) இந்திர திக்காக / உலகமாக கொள்கிறோம்..





சுருக்கமாக சொன்னால், சூரிய சமதளமான யந்திரத்தில் இந்திர  (கிழக்காக ) திக்காக இருக்கும், மகர ராசி கூட்டமானது, நமது தேவர்களும், தேவேந்திரனும் நிலை கொள்ளும் திசையாகும்.

அங்கே, தேவதேவனாகிய ஸ்ரீமன் நாராயணனாகிய விஷ்ணுவின் உருவை தியானித்து, சூரியனை காண்பவர்கள், 

ஸ்ரீஹரியை அடைவார்கள்..




தத்வமஸி. சிவோஹம்.


https://en.wikipedia.org/wiki/Uttarayana 

https://divyavivaham.com/services/nakshatra-rashi-list



No comments: