Saturday, January 14, 2023

தை மாதம் 1 - மகர சங்கராந்தி




தை மாதம் 1 - மகர சங்கராந்தி ஒரு வானியல் நிகழ்வு..
சூரியன் எந்த ராசி நிலையில் இருக்கிறான் என்பது நமது வாழ்வை பாதிப்பதாக நம்பினார் முன்னோர்..
விஸ்வாமித்திரர் காலத்திற்கு முன்னர், இங்கு 22 நக்ஷத்திர கூட்டமே இருந்தது.. 
விஸ்வாமித்திரர் காலத்திற்கு பின்னர் இங்கு 27 நக்ஷத்திர முறை மாற்றப்பட்டது..
தனிஷ்டா நக்ஷத்திரங்களையும் சேர்த்து (அவிட்டம் முதல் ரேவதி வரை)
அப்படியெனில், அதற்கு முன்னர் மகரம் கடைசி ராசியாக கணிக்கப்பட்டிருக்கலாம்!!
மகர ரவி, நாம் கணித / வான சாஸ்திர அடிப்படையில், காயத்ரியை அடிப்படையாக கொண்ட அமைப்பாக மாறிய நிகழ்வையும் பிரதிபலிக்கிறது. 


மகர சங்கராந்தி,  மணிகண்ட ஸ்வாமி சித்தியடைந்த நாளும் ஆகும்...

மேலும், மகர அல்லது தை மாதத்தில் பூமி, சூரிய சுழற்சியில் எங்கிருக்கிறது என்று பார்ப்போம்.
மேற்கண்ட படத்திலிருந்து பூமி, சூரியனுக்கு சமதளத்தில் (ஒரு யந்திரமாக பார்த்தால்), கிழக்கில் உள்ளது.
இது பூமியின் அச்சுக்காட்டும் கிழக்கிலிருந்து (celestial east  / east axis path ) வேறானது.

ஆனால், இந்த சூரிய சமதளம் யந்திரம் தான்!!

ஏனெனில், நாம் எந்த ஹோமத்தையும் ஆரம்பிக்கும்போது, பூமியின் / சூரியனின், சமதள கிழக்கையே (not  celestial east  ) இந்திர திக்காக / உலகமாக கொள்கிறோம்..





சுருக்கமாக சொன்னால், சூரிய சமதளமான யந்திரத்தில் இந்திர  (கிழக்காக ) திக்காக இருக்கும், மகர ராசி கூட்டமானது, நமது தேவர்களும், தேவேந்திரனும் நிலை கொள்ளும் திசையாகும்.

அங்கே, தேவதேவனாகிய ஸ்ரீமன் நாராயணனாகிய விஷ்ணுவின் உருவை தியானித்து, சூரியனை காண்பவர்கள், 

ஸ்ரீஹரியை அடைவார்கள்..




தத்வமஸி. சிவோஹம்.


https://en.wikipedia.org/wiki/Uttarayana 

https://divyavivaham.com/services/nakshatra-rashi-list



Sunday, January 1, 2023

மார்கழித்திங்கள் - பகுதி 3, Month of Margazhi - Part 3

 




மஹாநாராயண உபநிஷத்...

இந்த பூவுலகின் ராஜாவாகிய வருணனை பற்றி,

"ஒருவரிடமிருந்து நான் உண்பது, குடிப்பது மற்றும் பரிசுகளை ஏற்றுக்கொண்டது போன்றவற்றால் நான் செய்த பாவத்தை வருண மன்னன் தன் கையால் அழிக்கட்டும்.

இவ்வாறு பாவமற்றவனாகவும், துர்நாற்றமில்லாதவனாகவும், தீமை மற்றும் அடிமைத்தனத்தால் கட்டுப்படாதவனாகவும், நான் மகிழ்ச்சியான சொர்க்கத்திற்கு ஏறி, பிரம்மனுடன் சம அந்தஸ்தை அனுபவிப்பேன்."

ஆப சூக்தம்... நீர், ஜீவ ஊற்று..

இந்த பூவுலகின் உயிராகிய நீரானது, இந்த உலகை சுத்தி செய்வதுபோல் என்னையும் சுத்தி செய்யட்டும். எனது வியாதிகள் அகன்று, என்னை வாழ்விக்கட்டும்..

எங்கள் வாழ்வின் ஊற்று நீ!!

நீரே, நாங்கள் எந்த தெய்வத்தன்மையை உன்னிடம், அருந்தும்போது கேட்கிறோமோ, அந்த தெய்வத்தன்மை எங்களுக்குள் நிரம்பி ஓடட்டும் / வழியட்டும்!!

ப்ரஹ்ம யக்ஞம் சொல்லும் உண்மை...

பிரம்மா, அக்னி, பூமி மற்றும் என்றும் நிலைத்திருக்கும் தாவரங்கள் (பரந்த சமுத்திரங்களால் வழங்கப்படும் மருந்து), வாக் தேவியால் அருளப்பட்ட நமது வாக் சக்தியின் திறன் மற்றும் மகா விஷ்ணுவின் பிரம்மாண்டமான வடிவத்திற்கு நாங்கள் வணங்குகிறோம்.

தத்வமஸி. ஸதாசிவோம். ஹரி ஓம்.



Maha Narayana Upanishad...

tanno varuNo raajaa paaNinaahyavamarshatu | 
so~hamapaapo virajo nirmukto muktakilbishaha ||

Meaning,
May the King Varuna efface by his hand whatever sin I have incurred by eating, drinking and accepting gifts from an unlawful person.
Thus being sinless, stainless and unbound by evil and bondage, may I ascend to the happy heaven and enjoy equality of status with Brahman.

Another commonly used mantra and purifying hymn from Apah Suktham...

Aapo Hi Sstthaa Mayo-Bhuvasthaa Na Uurje Dadhaatana |
Mahe Rannaatha Cakssase ||1||

Meaning:
Waterbecause of your presence, the Atmosphere is so refreshing, and imparts us with vigour and strength.
We revere you who gladdens us by your Pure essence.

Yo Vah Shivatamo Rasas-Tasya Bhaajayate-Ha Nah |
Ushatiiriva Maatarah ||2||

Meaning:
Waterthis auspicious Sap of yours, please share with us,
Like a Mother desiring (to share her best possession with her children).

Tasmaa Aram Gamaama Vo Yasya Kssayaaya Jinvatha |
Aapo Janayathaa Ca Nah ||3||

O Water, when your invigorating essence goes to one affected by weakness, it enlivens him,
O Water, you are the source of our lives.

Sham No Deviir-Abhissttaya Aapo Bhavantu Piitaye |
Sham Yor-Abhi Sravantu Nah ||4||

Water, may the auspicious divinity which is wished for be present in you when we drink (water).
May that auspiciousness which is there flow in us.

From Brahma Yagnam,

Namo Brahmane namo Astvagnaye namah Prithvai nama aoushadheebyah, 
Namo Vaache namo Vaachaspataye namo Vishnave brihatekaromi..
Aum Shantih Shantih Shantih..

We prostrate to Brahma, Agni, Bhumi and the everlasting vegetation (the medicine provided by wider oceans), the ability of our vaak shakti as bestowed by Vaak Devi and the gigantic form of Maha Vishnu. 

May Peace, Prosperity and Auspiciousness prevail around us all!