Thursday, October 27, 2022

சஷ்டி அப்த பூர்த்தி (60), சதாபிஷேகம் (108) / ஸஹஸ்ர பூர்ண சந்திரோதயம் (80.9) / ஸஹஸ்ர பூர்ண சந்திர தர்சனம் போன்றவை ஏன் ?

 


தேவதைகளாக, ரிஷிகளாக வாழ்ந்த முன்னோர்கள் (பித்ருக்கள்), மேல் உலகங்களில் / வ்யாஹ்ருதிகளில் / மனோநிலைகளில் / ஆத்ம நிலைகளில் (dimension ) வாழ்கிறார்கள் (மஹ, தப, ஜன, ஸத்ய) என்பது நம்பிக்கை. 

எவரொருவர் தனக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களை (ஸம்ஸ்காரங்கள் உட்பட) சரிவர செய்கிறாரோ, அவர்கள் முன்னோர்கள் / தேவர்கள் / தேவநாதன் அருளால் மேல் வ்யாஹ்ருதிகளை அடைவார்கள் என்பதும் நம்பிக்கை..

இது இந்த யுகத்தில் சாத்தியமா?

சாத்தியமே..

ஸம்ஸ்காரங்கள் பலவற்றை தவற விட்டவர்கள் என்ன செய்யலாம்?

முக்கியமான சௌர்ய / சந்திர சேர்க்கைகளின் ( சஷ்டி அப்த பூர்த்தி (60), ஸஹஸ்ர பூர்ண சந்திரோதயம் (80.9), சதாபிஷேகம் (108) ) போது, தகுந்த வைதீகமான / தெய்வீகமான செய்கைகளின் மூலம், தவற விட்டதை சரி செய்து, ஸம்பூர்ண/பரிபூர்ண/தகுந்த பலன் அடைய ஏதுவாகும்.

இந்த பிராயச்சித்த ஸம்ஸ்காரங்கள் எதையும் செய்ய தேவையில்லை.. செய்ய மாட்டேன் என்று கதை கட்டும் ஒரு பழக்கம் பெருகி வரக்காணலாம்..

அதற்கு ஏதேதோ மட்டித்தனமான காரணங்கள் எல்லோராலும் சொல்லப்படுகின்றன.

இந்த பிராயச்சித்தம் செய்வதே, வந்த வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்பதால் தான்..

ப்ராயச்சித்தமும் செய்ய மாட்டேன் என்று சொன்னால், பல அநுபவப்பூர்வமான பலன்களை இழக்க வேண்டி வரும்..

அவரவர் (பிராயச்சித்தம் செய்யாதவர்), தான் செய்யாமல் விட்ட ஸம்ஸ்காரங்கள் எல்லாவற்றையும் வரிசையாக எழுதிவைத்து பின் யோசிக்கலாம்..










Monday, October 24, 2022

தீபாவளியும், கீதையும்... தீபாவளி ஏன் கொண்டாட வேண்டும்?



மஹாஸ்வாமி சொல்கிறார்... நம் தலைமுறையின் வேத விஞ்ஞானி அவர்..


"யோசித்து பார்த்ததில் தீபாவளியும், கீதையும் ஒன்றே!! என்று தோன்றியது. இதற்கு பிரமாணம் என்ன என்று கேட்டால், எழுதப்பட்ட சாஸ்திர பிரமாணத்தை காட்டிலும், தர்க்க ரீதியான பிரமாணம் அதை விட முக்கியம்.."


சிந்திப்போம்...


யுத்த களத்தில் தர்மத்தை காக்க முடியாத நிலை ஏற்படும் பொழுது, ஸ்ரீ கிருஷ்ணனின் (கிருஷ்ண த்வைபாயன  வ்யாசரால் எழுதப்பட்ட நூல்) கீதை அருளப்பட்டது..


கீதையை அறிவது கடினம்.. வாழ்க்கையின் முற்பகுதியிலேயே ( மனது இலகுவாக இருக்கும் பொழுது ) ஆரம்பித்தல் நலம்..


கீதையின் சூத்திரங்கள், ஒவ்வொருவருக்கும் வேறு வேறு..


ஒரு மனிதனின் ஆயுளில் அது ஊறி, ஒரு சூத்திரத்தில் அவன் நிலை பெரும் பொழுது, கீதை அவனை சென்றடைகிறது..


இதற்கு தேடல் அவசியமாகிறது. லௌகீக வாழ்க்கையில் அது எளிதில் எல்லாருக்கும் வந்து சேர்வதில்லை!!!


தீபாவளி அப்படி அல்ல!!


வேறு ஒரு யுத்த களம்.. அதில் ஒரு வைரி தன் மகனாக இருக்கிறான்.


பேரறிவும் ஆற்றலும் கொண்ட தந்தை, தனது சக்தியாகவும், தர்மபத்னியாகவும் இருக்கும் போர்க்குணம் கொண்ட திருமகளை, தூண்டி விட்டு நரகனை கொல்கிறார் / கொள்கிறார்..



இறப்பிற்கு முன் அவன் தன்னிலை அடைகிறான். விஷ்ணுவின் மைந்தனாக உருமாறி இந்த வையகம் வாழ போர்க்களத்தில் வழி கேட்கிறான்!!


போர்க்களத்தில் அவனுக்கு ஒரு கீதாம்சம் உபதேசிக்கப்படுகிறது..



நரகன் நாம் ஆவோமோ?

ஸ்ரீஹரி ஆனவர் உரைக்கிறார்....


"எவனுடைய உடல், மனது, ஆத்மா, என்னிடம், அவனுடைய தாயாகிய இந்த பிரபஞ்ச சக்தியுடன் ஒடுங்குகிறதோ, அவன் முக்தனாகிறான். தனது உடல், மனது, ஆத்மா ஆகிய அனைத்தையும், ஒரு யோகியாக மாறி, இவ்வுலக மேன்மைக்கு அர்ப்பணிக்கிறான். எனது 14 வ்யாஹ்ரிதிகளையும் ஆளும் தகுதி அடைகிறான். என் மைந்தனான ப்ரஹ்மாவாகவே மாறி விடுகிறான்!!.


வத்ஸா, இதுகாறும் கொண்ட பூத உடலை விட்டு, தேவ / அமர உடல் பெற்று, எனது தூதனாக எனது உலகங்களில் வாழ்வாய். 


எங்கு என் பெயர் சொல்லப்படுகிறதோ, 

எங்கு என் கீர்த்தி பேசப்படுகிறதோ, 

எங்கு என் மைந்தர்கள் என்னை நினைக்கிறார்களோ, 

எங்கு என்னால் அருளப்பட்ட நல்ல செல்வங்கள் உள்ளனவோ

அங்கு நீ என் தூதனாக செல்வாய்..


தன் நிலை அறியா உயிர்களை என்னிடம் கொண்டு சேர்ப்பாய்..


என் தூதனாக வாழ்பவனை, இந்த பிரபஞ்ச சக்தி (இயற்கை) தொடாது...


உன் முழுமையடையா கர்மத்தை, பல பிறப்புகளை தாண்டி நானே முழுமையாக்குகிறேன்!!


என்னை தொடர்வாய்......

"



ஹரி ஓம். தத்வமஸி. ஸதாசிவோம்.




https://www.holy-bhagavad-gita.org/