Wednesday, February 8, 2023

இந்து - இது செல்லுபடியாகும் மதப் பிரிவா? Hindu - Is it a valid religious denomination?

 



மஹாஸ்வாமி அவர்களின் அமுத மொழியிலிருந்து....

‘தான் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடுவது’ (live and let live) என்று சொல்கிறார்களே அந்த உத்திஷ்டமான கருத்தே ஹிந்து மதத்தின் லட்சியமாக இருந்திருக்கிறது. அதோடுகூட மற்ற தேசத்தினருக்கு ஆத்மசிரேயஸ் அளிக்கக் கூடிய பௌத்தம், ஜைனம் முதலிய மதங்களையும் தானே பெற்றெடுத்து வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

🙏🙏🙏🙏


சமூகம் society முழுவதற்குமான ஏற்பாடுதான் வர்ண தர்மம் என்பது. இப்போது ரொம்பவும் கண்டனத்துக்கு (criticism) ஆளாகியிருப்பது இந்த வர்ண தர்மம்தான். வர்ண தர்மத்தை ஜாதிப் பிரிவினை என்று பொதுவில் சொல்கிறார்கள். 


ஆனால் உண்மையில் வர்ணம் வேறு. ஜாதி வேறு. 


வர்ணங்கள் நாலுதான்; ஜாதிகளோ ஏகப்பட்டவை, பிராம்மணர் என்ற ஒரே வர்ணத்தில் அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல ஜாதிகள் இருக்கின்றன. நாலாவது வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டியார், நாயக்கர் என்று பல ஜாதிகள் வருகின்றன. வேதத்திலும் (யஜுர் வேதம்—முன்றாவது அஷ்டகம்—நாலாவது ப்ரச்னம்) தர்ம சாஸ்திரத்திலும் பல ஜாதிகள் பேசப்படுகின்றன. அந்தப் பெயருள்ள ஜாதிகள் இப்போது இல்லை. 


அதெப்படியானாலும் ஜாதிகள் பல; வர்ணங்கள் நாலே நாலுதான். 


‘நம் மதத்துக்கே பெரிய களங்கம்; மநுஷ்யர்களிடையே உசத்தி-தாழ்த்தி என்று பேதம் கற்பிக்கிற ப…


ஜைனர்களும் தங்களுடைய கொள்கை ரொம்பப் புராதனமானது, தங்களுடைய இருபத்துநாலு தீர்த்தங்கரர்களில் கடைசியானவர்தான் இப்போது நாம் அந்த மத ஸ்தாபகராகச் சொல்லும் ஜினர் (மஹாவீரர்) என்கிறார்கள். புராணங்களிலேயே ஒரு அவதார புருஷராகச் சொல்லப்பட்ட ரிஷபர்தான் அவர்களுடைய முதல் தீர்த்தங்கரர். இதை ஒப்புக்கொள்ள யோசிக்கும் ஓரியண்டலிஸ்ட்கள்கூட மஹாவீரருக்கு முந்தியவராக, 23-வது தீர்த்தங்கரராகச் சொல்லப்படும் பார்ச்வநாதர் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள்.

புத்தர் என்ற பெயரோடு, புத்தருக்கு அந்த மதத்தில் வழங்குகிற இன்னொரு பெயரான ‘ததாகதர்’ என்பதையும் ராமர் சொல்கிறார். இதனால் அப்போதே பௌத்தம் இருந்திருப்பது தெரிகிறது. ஆனால் கௌதம புத்தர் சொன்ன நல்லொழுக்கங்கள், புலனடக்கம், உசந்த த்யானம் ஆகிய எதுவுமில்லாமல் ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்ற கொள்கை போலிருந்திருக்கிறதென்றும், அதுதான் மாறி மாறிச் சார்வாகத்திற்கு ரொம்பவும் மாறுபட்ட ரூபத்தில் கௌதம புத்தரால் ப்ரசாரம் செய்யப்பட்டிருக்கிறதென்றும் தெரிகிறது.

சொல்ல வந்த விஷயம்: அநேக ஸித்தாந்தங்கள் இப்போதுள்ள புஸ்தகங்களைக்கொண்டு அவற்றுக்கு நாம் நிர்ணயம் செய்கிற காலத்திற்கு ரொம்ப முந்தியே ஏதோ ஒரு ரூபத்தில் இருந்து வந்திருக்கின்றன. இப்படி ஸெளத்ராந்திகம், வைபாஸிகம், சூன்யவாதம் ஆகிய பௌத்த ஸித்தாந்தங்களும் ஆசார்யாளின் காலத்திலேயே இருந்து அவற்றை அவர் கண்டித்திருக்கலாம்.

மனிதனை விசாரங்களிலிருந்து விடுவித்து உயர்த்துவதற்குத்தான் எல்லா மத சம்பிரதாயங்களும் தோன்றியிருக்கின்றன. மற்றப் பிராணிகளுக்கு இல்லாத விசாரம் இவனுக்கு இருப்பது மட்டுமில்லை; இவன் முயற்சி செய்தால் விசாரத்திலிருந்து விடுபடுவதோடு இல்லாமல், மற்ற பிராணி வர்க்கம் எதுவும் பெற முடியாத ஞானத்தைப் பெற முடியும் என்று மத சித்தாந்தங்கள் யாவும் கூறுகின்றன. உலக விவகாரங்களை எல்லாம் இயக்கி வைக்கிற ஒரு மஹா சக்தியைப் தஞ்சம் புகுந்தாலே விசாரங்களிலிருந்து விடுபடலாம் என்று பொதுவாக இந்த எல்லா சித்தாந்தங்களும் ஒரே குரலில், ஏகமனஸாகச் சொல்கின்றன. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம், சைவ சித்தாந்தம், இன்னும் கிருஸ்துவம், இஸ்லாம் முதலிய எந்த சம்பிரதாயமானாலும் சரி, பக்தி எல்லாவற்றுக்கும் பொது.

மற்ற மதங்கள் கடவுள் என்கிற ஒன்றைச் சொல்வதோடு நின்றுவிடுகின்றன. ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிற நம்முடைய ஸநாதன தர்மம் அந்த ஒரே கடவுளை அவரவர் மனோபாவப்படி அன்போடு நெருங்கி வழிபடுவதற்காகப் பல ரூபங்களில், பல தெய்வ வடிவங்களில் நமக்குக் காட்டுகிறது. இந்த ரூபங்கள் வெறும் கற்பனையில் உண்டாக்கப்பட்டவை அல்ல. ஒன்றாக இருக்கிற பரமாத்மாவேதான் இப்படிப் பல மகான்களுக்குத் தரிசனம் தந்திருக்கிறார். அவரவர்கள் அந்தந்த மூர்த்தியிடம் பிரத்தியட்சமாகப் பழகி உறவாடி பக்தி செய்திருக்கிறார்கள். அதே மாதிரி நாமும் தரிசிப்பதற்காக இன்ன மந்திரம், இன்ன விதமான உபாஸனையைப் பின்பற்றினால் இன்ன தேவதா ரூபத்தின் தரிசனத்தைப் பெறலாம் என்று வழிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.


வழிபாட்டுமுறை எதுவானாலும் பக்தி என்கிற பாவம் பொதுவானது. நம் மதத்திலுள்ள பல தெய்வங்களின் உபாஸனைக்கு மட்டுமின்றி, எந்த மதமானாலும் பக்தி என்பது மத்திய ஸ்தானத்தில் இருக்கிறது.


Ethical/Legal validity of "Hindu" in Indian constitution comes as below..

இந்திய அரசியலமைப்பில் "இந்து" என்பதன் நெறிமுறை/சட்டச் செல்லுபடியாகும் தன்மை கீழே உள்ளது.


இதர ஸம்பிரதாயத்திலும் இப்படி ஏதாவது ஒரு ஸம்ஸ்காரம் செய்ய‌ப்பட்டால்தான் ஒருவன் அதைச் சேர்ந்தவனாகக் கருதப்படுவான். பிறப்பும், நம்பிக்கையும் மட்டும் ஒருத்தனை வைஷ்ணவனாகவோ, மாத்வனாகவோ, சைவனாகவோ ஆக்கிவிடாது. அதற்கென்று ஒரு ஸம்ஸ்காரம் செய்து கொண்டாக வேண்டும். இது அந்தந்த ஆசார்யர்களே சொல்வது.


அப்படியானால், நாமம் போட்டுக் கொள்பவர்களிலும், விபூதி இட்டுக் கொள்பவர்களிலும், ஸமாச்ரயணம், முத்ராதாரணம், தீக்ஷை முதலியன பெறாதவர்களாகப் பல பேர் இருக்கிறார்களே, இவர்களை என்ன சம்பிரதாயத்துக்காரர் என்று சொல்வது?


இவர்கள் எல்லாரும் ஸ்மார்த்தர்கள்தான். இது ரொம்பப் பேருக்கு தெரியாத விஷயம்.


இப்போது ஒருவன் ஹிந்துவாக இருக்கிறான். அவன் கிறிஸ்துவ மதத்துக்கு மாறுகிறான். எப்படி மாறுகிறான்? அந்த மதத்துப் பாதிரி ஞான ஸ்நானம் (Baptism) என்று பண்ணி வைக்கிறார். அது பண்ணப்பட்டால்தான் இவன் கிறிஸ்துவனாகக் கருதப்படுவான். இல்லாவிட்டால் ஹிந்து தானே?


இப்படியே சிவ தீக்கை அல்லது ஸமாச்ரயணம் அல்லது முத்ராதாரணம் செய்யப்பட்டால்தான் ஒருத்தன் சைவ ஸித்தாந்தியாகவோ ஸ்ரீ வைஷ்ணவனாகவோ மாத்வனாகவோ ஆகிறான்.


கிறிஸ்துவ மதத்துக்கு போகிறவன் நம் வேத சாஸ்திரங்களை விட்டுவிட்டுப் போகிறான். அத்வைதம் தவிர மற்ற ஸித்தாந்தங்களுக்குப் போகிறவன், வேத சாஸ்திரங்களையும் வைத்துக் கொண்டே அந்த ஸித்தாந்தத்துக்குப் போகிறான். இந்த ஸம்பிரதாயத்து ஆசார்யர்களும் வேதங்களையும் ஸ்மிருதிகளையும் பிரமாணமாக ஒப்புக்கொண்டவர்கள்தாம். ஆனாலும் அவற்றுக்கும் அதிகமாகச் சில சடங்குகளைப் பண்ணச் சொல்கிறார்கள். அதைப் பண்ணினால்தான் ஒருத்தன் வைஷ்ணவனாகவோ, சைவனாகவோ, மாத்வனாகவோ ஆனதாக அர்த்தம்.


அல்லாது போனால் அவன் ஸ்மார்த்தன்தான்; அதாவது சங்கர பகவத் பாதாளைச் சேர்ந்தவன்தான் என்று சொல்லிவிடலாம். இபபடிச் சொல்லி நான் ஏகப்பட்ட பேரை என் சம்பிரதாயத்துக்கு வளைத்துக் கொள்கிறேனா என்ன? அத்வைதி என்பவ‌னுக்கு ஏதாவது புது ஸம்ஸ்காரம் பண்ண வேண்டும் என்று ஆசார்யாள் சொல்லியிருந்தால் நான் சொல்வது தப்புதான். ஆனால் ஆசார்யாள் அப்படிச் சொல்லவே இல்லை. அத்வைதி என்று ஒரு மதஸ்தனை அவர் பிரிக்கவே இல்லை. அநாதிகாலமாக வந்த ஸ்மார்த்த ஸம்பிரதாயத்தவராகவேதான், பூர்ண வைதிக மதஸ்தராகவேதான் தம்மை அநுஸரிப்பவர்களை வைத்து விட்டார். அத்வைதிக்குத் தனி ஸம்ஸ்காரம் எதுவும் வைக்கவில்லை. ஆகையால் வேறாகப் புது ஸம்ஸ்காரமாகாத எல்லோரும் அவரைச் சேர்ந்தவர்கள்தான்.


வேதத்தில் இந்த தீக்ஷை, முத்ராதாரணம், ஸமாச்ரயணம் எதுவும் சொல்லியிருக்கவில்லை. நேராக வேதத்தில் அதிகாரம் உள்ள மூன்று வர்ணங்களுக்கு, அந்த அதிகாரத்தைப் பெறுமுன்னர் உபநயனம் பண்ணி காயத்ரி உபதேசம் பண்ணவேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறது. பிரம்ம – க்ஷத்ர – வைச்யர்களுக்கு உபநயனந்தான் சொல்லியிருக்கிறது. நாலாவது வர்ணத்துக்கு அதுவும் இல்லை. அதுவும் இல்லாமலே அவனை வேத மதஸ்தனாக ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆசார்யாளும் இதே வழிமுறையைத்தான் வைத்துக்கொண்டார். புதிதாக எந்த ஸம்ஸ்காரத்தையும் சொல்லவில்லை.


புதிதாக நமக்கென்று ஒன்றும் இல்லையே என்று ஸ்மார்த்தர்கள் குறைப்பட்டுக் கொள்ளவே கூடாது. வேதத்தில் எது சொல்லியிருக்கிறதோ அது நமக்குப் போதும்.

கெளடபாதர், “பல ஸித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று வித்யாஸப்பட்டு பரஸ்பரம் விரோதித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நம்முடைய அத்வைதமானது அவற்றில் எதனிடமும் விரோதபாவம் பாராட்டவே இல்லை” என்று சொல்லியிருக்கிறார்:


பரஸ்பரம் விருத்யந்தே தைரயம் ந விருத்யதே |


இந்த விரோதமில்லாத மனோபாவம், ஐக்ய உணர்ச்சி, ஸமரஸம்தான் நமக்கு ஆசார்யாள் தந்திருக்கிற வழி. இதை நாம் எந்நாளும் பின்பற்றி வரவேண்டும். வேதமும், ஸ்மிருதிகளும் அப்புறம் ஆசார்யாளும் வகுத்துக் கொடுத்த மாதிரி காரியங்களிலும், அந்தக் காரியங்களுக்கு ஏற்ற ஆசாரங்களிலும் நாம் பிரிந்திருந்தாலும், மனஸால் மட்டும் ஒருத்த‌ருக்கொருத்தர் கொஞ்சம்கூட பிரிந்திராமல், எல்லாரும் ஆசார்யாளின் குழந்தைகளாகவே அன்போடு ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். இந்த‌ அநுக்கிரஹத்தையும் பண்ணும்படி ஆசார்யாளையே பிரார்த்தனை பண்ணுவோம்.

💐தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்💐 


🙏🏻