Saturday, November 5, 2022

சிவபோக அமுதம் சாத்தியமா ? இறவா நிலைபெற்று அமுதாலயம் பதவி சாத்தியமா ?



திருப்புகழ் காண்போம்.....


சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி

     சிவபோக மன்பருக ...... அறியாமற்

  

தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு

     தயவாய்ம கிழ்ந்துதினம் ...... விளையாடத்

 

உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட

     முறைநாய கங்கவுரி ...... சிவகாமி

 

ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை

     யொருநாள்ப கிர்ந்தவுமை ...... யருள்பாலா

 

அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு

     மமுதால யம்பதவி ...... யருள்வோனே..




எவனொருவன் சிவஞானத்தை அறிய மட்டுமே செயல் மேற்கொண்டு, பூவைப்போன்ற 

தன் பர இச்சையை, பர கிரியைகளை, பர ஞானத்தை தன் ஆத்மாவுடன் சேர்க்கிறானோ,

அவன்,

இப்பேருலகில், புண்டரீகனான பெருமாளைப்போல், அவன் மருகனான முருகனைப்போல் (ஸுப்ரஹ்மண்யன்),

ஒளிரும் யானையான இடகலை தேவனின் கையில் இருக்கும் அமுதமாகிய (108 முத்துகளை கொண்ட மாது + உளம் + கனி ) பேற்றை ஒரு நாள்,

சிவகாமியின் அருளால் பகிர்வான்!!!


இவ்வுலகில் கிருஹஸ்தர்களுக்கு மேற்பட்ட யோக வாழ்க்கை அருளப்படுகிறது..


மற்றையோர்க்கு, அப்படிப்பட்ட சிவஞான புண்டரீகர்களின் இடத்தில், அன்பர்களுக்கு அருளப்படும் அமுதமும், இறவா நிலையும், அமுதாலயம் பதவியும் அருளப்படுகிறது..











ஹரி ஓம். தத்வமஸி. ஸதாசிவோம்.