Wednesday, April 27, 2022

வைர முனை ஊசி.. வஜ்ரசூசி உபநிஷத்....

 வைர முனை ஊசி..

வஜ்ரசூசி உபநிஷத்
வஜ்ரசூசி உபநிடதம் ஒரு குறிப்பிடத்தக்க உரையாகும், ஏனெனில் இது எந்தவொரு மனிதனும் மிக உயர்ந்த ஆன்மீக நிலையை அடைய முடியும் என்று கருதுகிறது.
மனித இனம் முழுவதுமே ஒரே ஜாதி", பிறப்பால் அல்ல, மனிதர்களை வேறுபடுத்துகிறது.
வஜ்ரசூசி உபநிடதம் என்பது "மனிதர்களை பிறப்பால் தீர்மானிக்கப்படும் நான்கு சமூக வகுப்புகளாகப் பிரிப்பதற்கு எதிரான ஒரு நீடித்த தத்துவத் தாக்குதல்" ஆகும்.
பகவத் கீதை மற்றும் புராணங்கள் போன்ற பல இந்து நூல்கள் வர்ணத்தையும் சமூகப் பிளவுகளையும் கேள்விக்குள்ளாக்குகின்றன மற்றும் விமர்சிக்கின்றன, இந்த விவாதங்கள் அவற்றின் கருப்பொருள் விளிம்பில் உள்ளன; வஜ்ரசூசி உபநிடதத்தில் மட்டுமே வர்ணத்தை கேள்வி மற்றும் தத்துவ நிராகரிப்பு மையச் செய்தியாகக் காண்கிறோம்.



Diamond-pointed needle..
Vajrasuchi Upanishad
Vajrasuchi Upanishad is a significant text because it assumes and asserts that any human being can achieve the highest spiritual state of existence
the whole of human kind is of one caste", that it is character not birth that distinguishes people.
Vajrasuci Upanishad is a "sustained philosophical attack against the division of human beings into four social classes determined by birth".
While many other Hindu texts such as Bhagavad Gita and Puranas question and critique varna and social divisions, adds Offredi, these discussions are at their thematic margins; only in Vajrasuci Upanishad do we find the questioning and philosophical rejection of varna to be the central message.

Thursday, April 21, 2022

உடல் நீத்தாரை என் செய்வது? நீத்தார் சடங்குகள் சொல்லும் உண்மை என்ன ? தொடர்ச்சி...

யாருக்காக பித்ரு யாகம் அவர்களுக்காக செய்கிறோம், யாருக்காக செய்வதை நமக்காக செய்கிறோம் என்பது இங்கே தெளிவுபடுத்தப்படுகிறது.





தேவ / புண்ய லோகங்களில் உள்ளோர் நாம் செய்துதான் தப்பிக்க வேண்டும் என்பதில்லை!! 

வேத ஆகம தர்ம வித்யாவிலிருந்து...


இது தர்ப்பண நமஸ்காரங்களிலும் விளக்கப்பட்டுள்ளது.

அதனால்தான், ஏக பிண்டப் பிரதானம், விக்ராண்ணமும், கலியில், மிக மிக முக்கியம், முதல் வருடத்தில் விடக்கூடாது. 




மேலும் பின்னர். ஹோமம் மற்றும் பிராமண போஜனம் செய்யாததற்கு, விரிவான பரிஹாரங்கள் உள்ளன.. 

ஆனால், ஏக பிண்டப் பிரதானம், விக்ராண்ணமும் செய்யாதபோது, பின்னர் செய்யும்போது அது பூஜ்யமாகவும் வெற்றிடமாகவும் மாறும்!!! மாறலாம்!!

அதனால்தான், மகா விஞ்ஞானியான ஆபஸ்தம்பர் பிண்ட பித்ரு ஸ்ரார்த்தம், நைவேத்யம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். ஹோமம், ப்ராஹ்மண போஜனம், ஏக பிண்டப் பிரதானம், விக்ராண்ணமும் இவைகளுக்குப் பிறகு தங்க வேலிபோல  பிண்ட பித்ரு ஸ்ரார்த்தம் செய்யப்படுகிறது. 

கலியில் காப்பாற்றும் கருணை அது!!

ஹோமம், ப்ராஹ்மண போஜனமும், கலியில் ஆயிரம் குறை கொண்டதாக மாறும், மாறுகிறது!!!

ஆனால், மற்ற மூன்றும் ( ஏக பிண்டப் பிரதானம், விக்ராண்ணமும், பிண்ட பித்ரு ஸ்ரார்த்தம் ) கர்த்தாவுக்கு உதவுவதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது!!

இதனால், இம்மூன்றையும் ஒப்பிடமுடியாது!!

பின்னர்,
அனைத்து பித்ரு யாகத்தின் நோக்கத்தையும் கூறும் தர்ப்பண பிரதக்ஷிண நமஸ்காரம்.

"தேவர்களாகவும், பித்ரு புண்ய உலகங்களில் உள்ளோரையும் , மகா யோகிகளாக இருப்போரையும், நான் உங்களை தினமும் வணங்குகிறேன், தினமும் உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன், முடிந்த வரையிலும்!!"



 "எல்லா பாவங்களிலிருந்தும், பல ஜென்மங்களிலிருந்தும், அதன் பாவங்களிலிருந்தும் என்னை விடுவித்து விடுங்கள், உங்களை வணங்குகிறேன்..
 ரசவடிவாகவும்/அம்ருத வடிவாகவும், சூட்சும வடிவமாகவும், உடலுடனும், உயிருடனும், பித்ருக் காத்திருப்பு நிலையிலும், மனிதர்கள், நரகத்தில் (இங்கும் அங்கும்!!) அசுரர்களாகவும், பித்ரு உலகத்திலும் இருக்கும் எல்லா பித்ருவை வணங்கி, தயவு செய்து, உமது லோகத்தில் இருந்து கொண்டு / அல்லது இங்கு வந்தமர்ந்து, அன்னத்தை ( விஷ்ணு / சிவ பிரசாதத்தை ) எடுத்துக் கொள்ளுங்கள்.. தேவர்கள் இதை மாற்றட்டும்,  அவர்களுக்கான உலகங்கள் குறிப்பிட்ட தயாரிப்புகள் போன்று.. நான் உங்களுக்கு வணங்குகிறேன், நீங்கள் உங்கள் உலகத்தில் இருக்கும் வரை, லோகத்தை விட்டு அகலும் வரை, மேல் நிலை அடையும்வரை. இந்த நாளில் இங்கு வந்ததற்காக அல்லது உங்கள் லோகத்திலிருந்து என்னை ஆசீர்வதிப்பதற்காக வணங்குகிறேன்.."

"தேவர்களாகவும், பித்ரு புண்ய உலகங்களில் உள்ளோரையும் , மகா யோகிகளாக இருப்போரையும், நான் உங்களை தினமும் வணங்குகிறேன், தினமும் உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன், முடிந்த வரையிலும்!!"

பின்னர்,
கோத்ர பித்ருக்களுக்கு வணக்கம், அபிவாதனம், பிரார்த்தன  நமஸ்காரம், கடைசியாக அவர்களுக்கு கூர்ச்ச ஸ்வரூப நிவாரணம் மற்றும் சகல ஆத்மாக்களுக்கும் தர்ப்பணம்,  விசர்ஜனம் செய்து, விஷ்ணு சமர்ப்பணம் செய்கிறோம்...

விஷ்ணு லோகம் ச கச்சதி!!

யாவரும் விஷ்ணு லோகம் அடைவார்களாகுக!!



ஸ்ரீஹரி காப்பாற்றுவராக. 

சிவோஹம்.

ஹரி ஓம்


🙏


Saturday, April 2, 2022

திதி (சந்திர திதி - சந்திர தைத்ய விகிதம் / தொடர்பு ) என்பதென்ன?

திதி (சந்திர ஆதித்ய ஆரம் - arc/cycle ) மனிதர்களையும், பூமியில் உள்ள எல்லா உயிர்களையும் எவ்வகையில் கட்டுப்படுத்துகிறது?

பிறப்பை நக்ஷத்திரத்திலும், இறப்பை (முக்தி / கர்ம விடுதலையை) திதியிலும் சேர்ப்பது ஏன்?

இந்த ஆரத்தை அன்னை துர்கையின் / சக்தியின் கருணையால் பௌர்ணமியில் எப்படி கடக்கலாம் ?




சந்திர ஆதித்ய ஆரம் இவ்வுலக உயிர்களை தனது மானசீகமான கலைகளோடு (உலகாயத நிலைகள்) பிணைக்கிறது.

அவை, 15 ஆதித்ய கலைகள்  அல்லது 15 அதற்கு நேரெதிராக தைத்திய / மானசீக பந்தங்கள் 





சந்திர நட்சித்திர ஆரம் இந்த பலனை ஏன் அளிக்காது ?

இது சந்திர நட்சித்திர தொடர்பிலிருந்து ஏன் வேறுபடுகிறது? 


ஏனெனில், சந்திர நட்சித்திர ஆரம் பிரபஞ்ச சக்தியோடு நம்மை இணைக்கிறது!!

பிறப்பின் போது எந்த நக்ஷத்திர / ராசி நிலையில் இருக்கிறோமோ (சந்திர நட்சித்திர ஆரம்  ) அதன்படி நம் வாழ்க்கையின் அதிர்ஷ்டங்கள் அமைகின்றன. 

இதை ஜனனி ஜென்ம எனத்தொடங்கும் ஜோதிட முகப்புச்செய்யுள் விளக்குகிறது.

ஆனால் மனித வாழ்க்கை இத்துடன் முடிந்து விடுவதில்லை.

இந்த உலகில் தேவர் குழாம் அமைத்த ஆதித்ய கலைகளை / நிலைகளை நாம் நமக்கு சார்பாக மாற்றுவதே, இந்த உலக வாழ்க்கையின் லட்சியம், 



ஒரு வகையில் இறைவன் நமக்களித்த தேர்வும் கூட!!


15 கலைகள் * 4 யோக நிலைகள் = 60 வருட சுழற்சி 

15 ஆதித்ய கலைகள்  அல்லது 15 அதற்கு நேரெதிராக தைத்திய / மானசீக பந்தங்கள் 



15 ஆதித்ய கலைகள்

1) கல்வி, 2) நீண்ட ஆயுள், 3) கபடு இல்லாத நட்பு, 4) நிறைந்த செல்வம், 5) எப்போதும் இளமை, 6) பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், 7) சலிப்பு வராத மனம்,  8) அன்பு நீங்காத மனைவி,  9) புத்திர பாக்கியம்,  10) குறையாத புகழ், 11) சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், 12) எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்),  13) தொலையாத நிதியம் 14) செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், 15) துன்பமில்லாத வாழ்வு

(

விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; 

)

நிற்க!!!

15 தைத்திய நிலைகள் ( தைத்திய / மானசீக / சந்திர ஆதித்ய )

மேற்கண்ட 15 ஆதித்ய கலைகள் இல்லாமை அல்லது போதாமை அல்லது கொடுத்த ஆதித்ய கலைகளை தானே அழிக்கும் பிறவிக்குணம் / அகந்தை 

(

எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.

)

நிற்க!!!

உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை (பக்தர்களை) என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும், அபிராமியே!

நிற்க!!!

அமாவாசையன்று முன்னோர்களை பவித்ர உலகிற்கு ஏற்றி, பவித்ர வாழ்க்கையை கூட்டி,

பௌர்ணமியன்று, உலக பசு-பாசம் அகன்று, குருநாதன் சொன்ன சீலத்தை மெல்லத்தெரிந்து அறிந்து சிவ யோகிகளாய், காலத்தை வென்று,  தேவ சந்திர வெளியின் வழியாக, தேவ ஒளி பாதையின் வழியாக, துருவ பதம் அடைந்து, தேவேந்திர சங்கத்தில் சேர்ந்து, அமிர்த மயமாக மாறுவோமாக!!!


ஞானபாநு - சுப்ரமணிய பாரதி 

--------------------------------------

அனைத்தையும் தேவர்க்காக்கி, அறத்தொழில் செய்யும் மேலோர்

மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;

தினத்தொளி ஞானங் கண்டீர்; இரண்டுமே சேர்ந்தால் வானோர்

இனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம்.

அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்
--------------------------------------------

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!


தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்


How does Tidi (Solar - Lunar Arc/Cycle/Radius) control humans and all life on earth?

How can this arc/cycle/radius be crossed on the full moon by the grace of Mother Durga / Shakti?

Why we add birth to the star - lunar  cycle and death (salvation / karmic liberation) to the solar - lunar cycle?

Why does the lunar-star arc/radius does not give this benefit?


Why is this different from lunar-star arc/cycle?

Because, the arc of the lunar-star, connects us with the cosmic force !!

whereas, Chandra Aditya Arc/Aram binds worldly beings with his/her psychic arts/arcs/bondage (worldly states).


The fortunes of our life are set according to which star / zodiac sign we are in at birth (lunar-star arc/radius).

This is explained by the astrological prologue beginning with Janani Janma Soukyanam...

But human life does not end there!!!


They are, 15 Aditya arts or 15 directly opposite Taithiya / psychic ties/bondage!!

Why does the lunar-star radius not give this benefit to surpass these?


The ambition of this worldly life is to transform in our favor the Aditya arts / arc positions created by the Thevars (Super Human Society ) or liberate from left-over bondage in this world,

In a way even the choice the Lord has made for us !!


15 arcs / arts * 4 yoga stages = 60 year cycle


15 Aditya arts/ deva arcs or 15 directly opposite Taithiya / psychic ties


15 arcs / arts, bindings / psychic ties are as below...

1) Undeterred Education, 2) Longevity without reduction, 3) Friendship without hypocrisy, 4) Rich wealth, 5)  youth without limits 6) Healthy body without pain, 7) Mind without boredom, 8) Wife with  love, 9) Children with values, 10 ) Fame which doesnt erode, 11) The quality of not breaking the word, 12) The gift of giving without any hindrance (13) The unfailing fund 14) The king/rule who/which cares for everyone, without bending the scepter, 15) The life without suffering

15 misfortunes

Absence or inadequacy of the above 15 Aditya Arts or reducing God given aditya fortunes to dust by one's own birth based ignorance and ego!!


Devotion at your feet, an unbreakable bond with your volunteers (devotees) beyond these sixteen arcs (15 aditya and 16th Amirtha Art/Arc of the Holy Father / Holy Mother). These must be graced to me, Abirami!!!

On the new moon, the ancestors are sent/taken to the sacred world, where the holy life is provided for them.

On the full moon day, let us liberate from worldly jeeva-affection bondages, let us slowly become the Shiva Yogis who know the syllable that Seer/Mentor said, conquer time, join the Devendra Society/Sangam through the Deva Chandra Veli (Space Arc) and become Amirtha Maya in Druva Pada !!!

Gnana Bhanu - Subramania Bharathi and  Abirami Battar (Abirami Anthadi) have referenced this in their writings..


Tatvamasi. Shivoham. Hari Om.


References -


https://bharathavamsavali.blogspot.com/2021/10

https://bharathavamsavali.blogspot.com/2021/07/mathematicalspatial-proportions-for.html 

https://www.aanmeegam.in/deities/tithi-nitya-devi/

http://jothidaulagam.blogspot.com/2014/10/thithi-nithya.html

https://earthsky.org/moon-phases/full-moon/