மௌலௌ கங்கா சஷாங்கௌ, கர சரண தலே சீதலங்காஹா புஜங்காஹா,
வாமே பாகே தயாத்ரா, ஹிமகிரி தனயா சந்தனம் சர்வகாத்ரே,
இத்தம் ஸீதம் ப்ரபூதம், தவ கனகசபா நாத சோதும் க்வஶக்திஹி.
சித்தே நிர்வேத தத்தே, யதி பவதி ந தே, நித்ய வாஸோ மதீயே...
வாமே பாகே தயாத்ரா, ஹிமகிரி தனயா சந்தனம் சர்வகாத்ரே,
இத்தம் ஸீதம் ப்ரபூதம், தவ கனகசபா நாத சோதும் க்வஶக்திஹி.
சித்தே நிர்வேத தத்தே, யதி பவதி ந தே, நித்ய வாஸோ மதீயே...
- அப்பைய தீக்ஷிதர்
மௌலியில், கங்கையும், சந்திர தாரையோடு முயலையும் தரித்து, குளிர் உடம்பு கொண்ட பாம்புகளை உடலெங்கும் தரித்து, வாம பாகத்தில், குளிர் கருணை வடிவில், இமயவனின் பெண்ணை வைத்து கொண்டு, சந்தனத்தை உடெல்லாம் பூசிகொண்டு நிற்கும், சித் அம்பரர் ஆகிய ஈசனே (சிதம்பர நடராஜனே),
இவ்வளவு பிரபூத நாதனாகிய ( அதிகக்குளிர்ந்த பூத நாதனாகிய), அளவிட முடியா கருணையை கொண்ட கனக சபாநாதனாகிய உனக்கு, இந்த குளிர்ச்சியை தாங்கும் சக்தி எங்கிருந்து வந்திருக்கும்?
நான் கண்டு கொண்டு விட்டேன்!!
கவலை தீயினால் கொதித்துக்கொண்டிருக்கும் எனது சித்தத்தில் (வேதம் அல்லாததை நினைத்து கொண்டிருக்கும் எனது சித்தத்தில்), நீ நித்ய வாசம் செய்யாமல் இருந்தாயானால், உனக்கு இந்த குளிர்ச்சியை தாங்கும் சக்தி எங்கிருந்து வந்திருக்கும்?
ஆழ்பொருள்:
எனது சித்தத்தில், நீ நித்ய வாசம் செய்யாமல் இருந்தாயானால்,
எனக்கு இந்த சோகத்தை (வேதம் அல்லாததை சிந்திப்பதால் வரும் ) தாங்கும் சக்தி எங்கிருந்து வந்திருக்கும்?
சிதம்பர ரகசியம் (ப்ரபூதம்) யாது?
பரமேஸ்வர பாண்டியன் , ஒளி செங்கோ போன்ற தமிழ் அரசர்கள் தம் ஆன்மீக வாழ்க்கையால் சிவபிரானாகவே கருதப்பட்டனர். 15000 ஆண்டுகள் முன் வாழ்ந்திருந்தாலும் நமது அம்மையப்பனாகவே உருமாறி, "மன்பதை காக்கும் தென்புலக்காவல்" என்கிற இளங்கோ அடிகளின் வாக்கிற்கு இணங்க, பெரும் ஊழிக்காலங்கள் ஏற்பட்ட பொழுது, ஆஸ்திரேலியாவிலிருந்து தனுஷ்கோடி வரை கரையேறிய மக்களை, அவர்தம் ஆன்மீக சிவநெறியை, வாழ்வியலை காத்துக்கொடுத்து, பரமனாகவே மக்கள் நெஞ்சங்களில் மாறினர்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த திருவள்ளுவ நாயனார் இதை கோடிட்டு காட்டினார். இப்பொழுது இருக்கும் மதுரையம்பதியில் (கடம்ப வனத்தில்), கடலுள் அமிழ்ந்த பழைய மதுரையையும், கபாடபுரத்தையும் நினைவு கூர்ந்து, சுந்தரேசனான, இறையனாருக்கு கோவில் கட்டி, தடாதகையான மீனாக்ஷி தேவியுடன், அவர் நம்முடன் இருக்கிறார் என்று தமிழர் நம்பிக்கையை மெய்பொருள் ஆக்கினர்.
மதுரையம்பதியில் பக்தியால், ஆழி நீர்த்த (ஆழியில் இருந்து தப்பி கரைசேர்ந்த ) பாண்டிய குலங்கள் கோவில் கட்டினர் என்றால், சோழியர் எனப்படும் வாம அல்லது இடப்பாகத்தில் குடுமி வைக்கும் பழக்கம் உடைய குடும்பிகள், தமது தந்திர முறையிலான சைவ வேத வழிபாடுகளை காக்க, சீர் ஆழி சேர்ந்தோம் என்று இன்றைய சீர்காழியில் குடியேறினர்.
இந்த சைவ வேதவழிபாட்டு முறை, அக்னி அல்லது தீவழிப்பாட்டு முறையை ஒட்டி அமைந்தது. இன்றைய வேத ப்ராஹ்மணர் எப்படி எல்லாவற்றையும் தீயில் அளித்து வழிபடுகின்றனரோ, அப்படியே அவர் செய்தனர்.
அவரே பின்னர், இன்றைய சிதம்பரத்தில் கோயில் கட்டி வழிபட்டனர்.
எது பழையதோ, எது வேதவிஞ்ஞானமோ அதை காக்கும் பொறுப்பு, மன்னர்களுக்கு உரியது.
அதை உணர்ந்த அனைத்து தமிழ் மன்னர்களும் (சேர சோழ பாண்டிய பல்லவ )அதை காத்து வந்திருக்கின்றனர்.
அங்கிருக்கும் பொக்கிஷம் / ரகசியம் யாது?
ஆதியில் சிவனாகவே வாழ்ந்து (15000 ஆண்டுகளுக்கு முன்), இன்றும் நம் ஆதி நாதராக, சொக்கநாதராக, சிதம்பரேஸ்வரராக வாழும், அச்சித்தனை, ப்ரபூத நாதனை (அதிகருணை உயிர்க்கடலை), அவர்தம் ஜபமாலை, அவர்தம் யோகதண்டம், அவர்தம் மரவுரி, அவர்தம் மரத்தோல் ஆசனத்துடன், அவர்தம் த்ரிபுண்ட்ரத்துடன் (விபூதியுடன் / அனுபூதியுடன் ), தட்சிணாமூர்த்தியாக பாவித்து சிதம்பரத்தில் வழிபட்டு வருகிறோம்.
"எந்த ஒரு நிலத்திலும் கோயிலிலும் 15000 ஆண்டுகள் முன்வாழ்ந்த மெய்ஞ்ஞான தெய்வத்தை இந்த ப்ரபூத ரூபத்தில் வழிபட இறையருள், நமக்கு இல்லை!!!"
"அஸ்யா மூர்த்தௌ ஜீவத்திஷ்டந்து"
"இந்த மூர்த்தத்தில் ஜீவனுடன் வந்து அமர்வீராக!!"
ஆயுதம் தரித்து காத்த தெய்வங்களுள் (தர்ம சாஸ்தா), பழையதும், அம்மையுடன் சேர்ந்திருப்பதுமான, ஒரு தெய்வம், இத்தமிழ் நிலத்தில், பழைய வழிபாட்டு முறையுடன் இருக்குமானால் அது சிதம்பர நடராஜனே !!!
பாரத நிலத்திலும், அந்நியர் படையெடுத்து, விந்திய மலைக்கு வடக்கே இருந்த அவ்வளவு பிராண பிரதிஷ்டைகளையும் (உயிர்நிலை கடவு அல்லது கடத்தல் / கூடு பாய்தல்) அழித்தனர். அவற்றை திரும்ப கட்டி வருகிறோம்!!!
ஆனால்,
பாரத நிலத்திற்கும்,
தமிழ் நிலத்திற்கும்,
ஒளிவிளக்காக, முத்தாய்ப்பாக, ரத்தினமாக,
கடல் கொண்ட தென்னாட்டின்,
சூது கொண்டு அழிக்கப்பட்ட வடநாட்டின்,
மிச்சம் உள்ள
2000/5000/15000 ஆண்டுகள் பழமையான
"பிராண பிரதிஷ்டை"
"உயிர்நிலை கடவு"
இன்றைய சிதம்பரம் மட்டுமே!!
அதுவே சிதம்பர ரகசியம்!! ப்ரபூத நாதனே!!
அதை அப்படியே காக்கும் பொறுப்பு நமக்குண்டு!!
நமக்காக!! இப்பூவுலகிற்காக!!
ஒரு காலத்தில் தமிழில் இருந்த வேதங்களை, ஆழி பேரலைகள் அழித்த பிறகு (கடல் கொண்ட தென்னாடு), தப்பி வந்தவர் முதலில் ப்ராக்ருதத்திலும் பின்னர் சமஸ்க்ரிதத்திலும் இன்று ஆங்கிலத்திலும் மாற்றி இருக்கிறோம்... மாற்றி இருக்கலாம்!!!
சீர் + ஆழி - சீர்காழி
மிச்சமிருப்பதையாவது காப்பாற்றுவோம்!!
திரிந்த வேதம் தண்டமிழ் தெரிதரு புலவோனே,
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே!!
-- அருணகிரி
ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச்
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிறத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி போற்றி
தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்
References
http://bharathavamsavali.blogspot.com/2021/04/pandiyan-meru-varamban.html
http://bharathavamsavali.blogspot.com/2021/04/olichenko-light-red-king.html
Moulau Ganga sashaankau, kara charana tale shitalanga bhujangaha,
Vame bhaghe dayadra , himagiri tanaya candanam sarvagAtre,
Ittam seetam prabhutam, tava kanakasabhaa natha sodhum kvashaktihi citte nirveda tapte, yadi bhavati na te nitya vaso madeeyE.
- Appaiya Deekshithar
Moulau Ganga shashankau, kara caraNa talE shitalanga bhujangaha,
Vame bhaghe dayadra , himagiri tanaya candanam sarvagAtre,
Ittam shitam pabhutam, tava kanakasabha natha sodum kvashaktihi citte nirvida tapte, yadi bhavati na te nitya vaso madlyE.